KAILASA Library/வாழும் அவதார புருஷர்/தாழ்த்தி சுய மதிப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடையSign in
வாழும் அவதார புருஷர்

தாழ்த்தி சுய மதிப்பீடு செய்துகொள்ளும் மனப்பான்மையில் இருந்து குணமடைய

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Low Self Esteem

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 14, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. அர்த பத்மாஸனம்
  1. ஜாலந்தர பந்தம்
  1. பாவனை

1. அர்த பத்மாஸனம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33

(பத்மாஸனத்தில் ஒரு பாதி மட்டுமே செய்வது அர்த பத்மாஸனம் எனப்படுகிறது.)

அது பத்மாஸனம்

உத்தானௌ சரணௌ க்ரு'த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு'த்வா து தாத்ரு'ஸௌ' // 2.31

த்ரு'ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தரப்ப்ைய பவனம் ச'னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

அர்த பத்மாஸனம்

அர்த பத்மாஸனம்

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைக்கவும்.
  1. இப்பொழுது இடது காலை மடித்து வலது தொடையின் கீழ் வைக்கவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கவனிக்கவும்.
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து, தொடைகளின் மீது வைத்துக்கொள்ளவும்.
  1. இந்த ஆஸனத்தில் 30 நொடிகள் இருக்கவும்.

2. அர்த பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12

அथ ஜாலந்தரபந்த:

கண்ட_-ஸங்கோசனம் க்ரு’த்வா சிபுகம் ஹ்ரு’தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு’தே பந்தே ஷோடசா’தார-பந்தம் //3-12

மொழிபெயர்ப்பு

தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் முடிவிட முடியும்.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
  1. மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.

3. அர்த்த பத்மாஸனத்தில் இருந்தபடியே பாவனை

  1. உட்கார்ந்து, நீங்கள் தற்போது இருப்பதைவிட 5 மடங்கு உங்களைப் பெரிதாக பாவனை செய்யுங்கள்.
  1. இப்போது உங்களை 20 அடி உயரம் உள்ளவாக உணருங்கள்.
  1. உங்களை ஒரு பெரிய பாறையை போன்றோ அல்லது ஒரு பெரிய உயிரினத்தைப் போன்றோ பாவனை செய்யுங்கள்.
  1. 20 அடி உயரமாக, 50 அடி அகலமாக உயிர்ப்புடன் இருப்பதைப் போன்ற பாவனையில் உட்கார்ந்திருங்கள்.