தூரப்பார்வைக்குத் தீர்வளிக்கும் கிரியா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure for Long sight
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 18, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- ஸித்தாஸனம் 2 சீதஸீரும்பகம்
- கூர்மகும்பகம்
- ஸமகும்பகம்
1. ஸித்தாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 7
அத ஸித்தாஸனம்
யோனிஸ்தானகமங்க்ரிமூலகடிதம் ஸம்பீட்ய குல்பேதரம்
மேட்ரோபரியுத ஸந்நிதாய சிபுக்ம் க்ரு’த்வா ஹ்ருதி ஸ்தாபிதம் /
ஸ்தாணு: ஸம்யமிதேந்த்ரியோSசல-த்ரு’சா’-பச்யன்-ப்ரு’வோரந்தரம்
ஏதந்மோக்ஷகபாடபேதனகரம் ஸித்தாஸனம் ப்ரோச்யதே// 2-7.
மொழிபெயர்ப்பு
ஒருவர், ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து, முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைத்து, முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, தம் தீவிர உணர்ச்சிகளை வென்று, அமைதியாக அமர்ந்து, புருவ மத்தியை நோக்கிப் பார்வையைத் செலுத்துவது ஸித்தாஸன என்றழைக்கப்படும். இது வீடு பேற்றினை நோக்கி அழைத்துச் செல்கிறது.
செய்நுட்பம்
- பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குதிகாலை வைத்து, பிறப்புறுப்பின் மேல் மறு குதிகாலை வைக்கவும்.
- முகவாய்க்கட்டையை நெஞ்சில் பதியவைக்கவும்.
- முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமரவும்.
- புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்தவும்.
- இந்நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.

ஸித்தாஸனம்
2. ஸித்தாஸனத்தில் இருந்தபடியே
சீ'தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீ'தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாத்யேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப்-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச்சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத் தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 நிமிடங்கள் செய்யுங்கள்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
3. ஸித்தாஸனத்திலிருந்தபடியே
கூர்மகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 79
அத கூர்மகும்பக:
நிமீலோந்மீலனே த்யக்த்வா பீடே காஷ்டமிவ ஸ்திதி: /
நேத்ரயோச்'வ ச'ரீரஸ்ய கூர்மகும்ப: ஸ உச்யதே // 79
மொழிபெயர்ப்பு
கண்களையும் உடலையும் அசைவற்று ஒரு மரக்கட்டை போல்வைத்து, பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்தி, இமைகளை இமைக்காமல் வைக்கும்போது நிகழும்கும்பகம் கூர்மகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் தொடர்ந்து அமர்ந்திருங்கள்.
- உங்கள் பார்வையை ஏதேனும் ஒரு புள்ளியில் நிலைநிறுத்துங்கள்.
- இமைகளை இமைக்காதீர்கள். கண்பாவையை அசைக்காதீர்கள். உடலை அசைக்காதீர்கள்.
- இயற்கையாகவே, உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் சுவாசங்களின் அளவுகள் குறைந்து, கும்பகம் நிகழும். அதாவது சுவாசத்தை நிறுத்திவைத்தல் நிகழும்.
- இதற்குமேல் முடியாது எனும் நிலைவரும்போது தளர்வாகுங்கள்.
- இதை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.
4. ஸித்தாஸனத்திலிருந்தபடியே
ஸமகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 99
அத ஸமகும்பக:
ஆரேகபூரா மனஸா நாப்யாதாவாஸு'கம் த்'ரு'தி: /
ஸம: கும்பொ பகவதா ப்ரோக்த: ஸ்ரீசந்த்ரமௌலினா // 99
மொழிபெயர்ப்பு
சுவாசத்தை உள்ளிழுக்கவோ வெளிவிடவோ இல்லாமல், மனத்தால் பிராணனைத் தொப்புள் முதலிய இடங்களில் அடக்குவது. இது சிவனால் தரப்பட்ட ஸமகும்பகம்.
செய்நுட்பம்
- சுவாசத்தை உள்ளிழுக்காமலும் வெளிவிடாமலும் அப்படியே நிறுத்துங்கள்.
- உங்களால் முடிந்த அளவு நேரம்வரை, மனத்தால் பிராணனைக் கண்களில் நிறுத்துங்கள்.
- இனியும் சுவாசத்தை அடக்க முடியாது எனும்போது தளர்வாகுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.