KAILASA Library/வாழும் அவதார புருஷர்/சீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...Sign in
வாழும் அவதார புருஷர்

சீரற்ற தைராய்டு சுரப்பிலிருந்து குணமடைய...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Hypothyroidism

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 25, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. பர்வதாஸனம்
  1. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிநேத்ரகும்பகம்
  1. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிசூ'லரும்பகம்
  1. பச்'சிமோத்தான-ஆஸனம்
  1. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமநேத்ரகும்பகம்

1. பர்வதாஸனம்,

யோக ரஹஸ்யம், அத்யாயம் 5, ஸ்லோகம் 22

அத பர்வதாஸனம்

மூத்ரபிண்ட-யக்ரு'த்-ப்லீஹவபா-சு'த்தயே நிரந்தரம் /
உபவிச்'ய ச ஸுப்தாத பர்வதாஸனமப்யஸேத் // 5.22

பர்வதாஸனம்

பர்வதாஸனம்

செய்நுட்பம்

1. வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.

  1. இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி உள்ளங்கைகளை இணைத்துக் கொள்ளவும்.
  1. இதே நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.

(இந்த ஆஸனத்தை உட்கார்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஆனால் கீழ்வரும் கும்பகங்களை உட்கார்ந்த நிலையிலேயே செய்யுங்கள்)

2. பர்வதாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்திக: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும். இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பிறகு சுவாசத்தை வெளிவிடாமலேயே ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பிறகு சுவாசத்தை வெளிவிடாமலேயே ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.

7. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளியிடுங்கள்.

8. இதை 21 முறை செய்யுங்கள்.

3. பர்வதாஸனத்தில் இருந்தபடியே

ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிசூ'லரும்ப_க_: கும்ப_க_-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லரும்ப_க_:

கோணாய்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாத்ய: கும்ப_ உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலரும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

1. அதே ஆஸனத்தில் அமரவும்.

2. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.

3. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.

4. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளியிடுங்கள்.

5. இதை 21 முறை செய்யுங்கள்

4. பச்'சிமோத்தான-ஆஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 26

அத பச்'சிமோத்தான-ஆஸனம்

ப்ரசார்ய பாதௌ புவி தண்டரூபௌ ஸம்ந்யஸ்த-ஃபாலம் சிதியுக்ம-மத்யே /
யத்னேன பாதௌ ச த்ரு'தௌ கராப்யாம் யோகீந்த்ர-பீடம்
பச்'சிமோத்தானமாஹு: // 2.26

மொழிபெயர்ப்பு

கால்களை ஒரு குச்சியைப் போல விரைப்பாகத் தரையில் நீட்டி, குதிங்கால்களை ஒன்றையொன்று தொடாமல் வைத்துக் கொண்டு, முன்னால் குனிந்து நெற்றியை முழங்கால் மேல் வைத்து, பாதங்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளும் இந்நிலை பச்சிமோத்தான ஆஸனம் எனப்படுகிறது.

பச்சிமோத்தான-ஆஸனம்

பச்சிமோத்தான-ஆஸனம்

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டி அமருங்கள். குதிங்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.
  1. முடிந்தளவு முன்னால் வளைந்து, நெற்றியை முழங்கால்களின் மேல் வைக்கவும் (முழங்கால்களை மடக்க வேண்டாம்).
  1. பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ளவும்.

5. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

5. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191

அத க்ரமநேத்ரகும்பக:

ஸக்ரு'த்ஸூர்யேண சாபூர்ய தார்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191

மொழிபெயர்ப்பு

வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.

செய்நுட்பம்

  1. வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை வெளிவிடாமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. மீண்டும் தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கியபின், ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை வெளியேளே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை உள்ளிழுக்காமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. இதைக 21 முறை செய்யுங்கள்.