KAILASA Library/வாழும் அவதார புருஷர்/சீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

சீரற்ற தைராய்டு சுரப்பு வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Hypothyroidism

நோய் பற்றிய விபரம்

தைராய்ட் சுரப்பிகள் சரியாக தைராய்ட் ஹார்மோன்களைச் சுரக்காத ஒரு நிலையையே ஹைப்போ தைராய்டிஸம் என்கிறோம். அயோடின் சத்துக்குறைபாடே இந்நோய்க்குக் காரணமாகப் பொதுவாக அறியப்பட்டாலும் இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஹைபோதாலமஸ் (Hypothala-mus) எனப்படும் பிட்யூட்டரியிலிருந்து சுரக்கப்படும் தூண்டல் இயக்கு நீர் (Stim-ulating Harmones) குறைவாகச் சுரந்தாலும் இது ஏற்படும். மேலும் மன அழு த்தத்தினாலும், அது வெளி சூழ்நிலையின் காரணமாக எழும் மன அழுத்தமாகவும் இருக்கலாம் அல்லது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவற்றால் உடலின் சமநிலையைப் பாதுகாக்க ே வண்டிய உறுப்புகளில் ஏற்படும் அழுத்தமாகவும் இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் தைராய்டிஸம் ஏற்படுகிறது.

இதன் முன் அறிகுறிகள்; குளிரைப் பற்றிய அதிக உணர்ச்சி, மலச்சிக்கல் உடல் எடை அதிகரிப்பு, உடலில் நீர்த்தேக்கம், குறைவான இதய துடிப்பு (நிமிடத்திற்கு 60 முறைக்கும் குறைவாக இதயதுடிப்பு இருக்கும் Brodycardia) சோர்வு, ே வர்வையின் அறவுகுறைந்துவிடுதல், தசை மற்றும் மூட்டுகளில் வலி, வறண்டே தால், உடல் அரிப்பு, மெலிந்து ஒடிந்துவிடும் நகங்கள், மன அழுத்தம், பெண்களின் மலட்டுத்தன்மை, மாதவிடாய்ச் சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள் என இதன் முன் அறிகுறிகள் பலவிதங்களில் வெளிப்படுகின்றன.

இன்றைய விஞ்ஞானம் மேலும் சில அறிகுறிகளைச் சுட்டிக்காட்டுகிறது. அவையாவன: தைராய்டு கிளாண்டில் ஏற்படும் வீக்கம் (Goiter), மெதுவான பேச்சு, கரப்பான குரல், குரல் உடைந்து வருதல், வறண்ட உப்பிய தோல் (முக்கியமாக முகத்தில்), வெளிப்பக்க புருவங்கள் ஒல்லியாக இருத்தல், மாதவிடாய்ச் சுழற்சியில் காணப்படும் குறிப்பிடத்தக்க கால இடைவெளி, உடலின் வெப்பநிலை தாழ்ந்து விடுதல் என இவையெல்லாம் கூட ஹைபோதைராய்டின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 24, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. பத்மாஸனம்
  1. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிநேத்ரகும்பகம்
  1. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிகு’லரும்பகம்

4. ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமநேத்ரகும்பகம்

1. பத்மாஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33

அத பத்மாஸனம்

உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ' // 2.31

த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்ட்ப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாய்ய பவனம் ச’னை: // 2.32

இதம பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் /
துர்லபம் யேன கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் அடையப்படமுடியாத அரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்க

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும்.
பத்மாஸனம்

பத்மாஸனம்

  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
  1. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
  1. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே

ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
னியம்ப பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாகடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும். இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பிறகு சுவாசத்தை வெளிவிடாமலேயே ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பிறகு சுவாசத்தை வெளிவிடாமலேயே ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.(இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை ள்ளடக்கவும்.

7. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.

8. இதை 21 முறை செய்யுங்கள்.

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய த்ரிசூ'லகும்புக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லகும்புக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் த்ரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று த்ரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

1. அதே ஆஸனத்தில் அமரவும்.

2. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.

3. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.

4. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.

5. இதை 21 முறை செய்யுங்கள்.

4. பத்மாஸனத்தில் இருந்தபடியே ஜாலந்தர பந்தத்துடன் கூடிய க்ரமநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 191

அத க்ரமநேத்ரகும்பக:

ஸக்ரு’த்ஸூர்யேண சாபூர்ய தூர்ய சந்த்ரேண பூரயேத் /
தாரயேச்ச ப்ரயத்னேன ரேசயேத் க்ரமதஸ்ததா //191

மொழிபெயர்ப்பு

வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து அடக்கி, மீண்டும் இடது நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசத்தை வலுவில் உள்ளேயே அடக்கி, மீண்டும் அதே படிகள் கொண்டு சுவாசத்தை வெளிவிடும் இக்கும்பகத்திற்கு க்ரமநேத்ரகும்பகம் என்று பெயர்.

செய்நுட்பம்

  1. வலது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை வெளிவிடாமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. மீண்டும் தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே அடக்கியபின், ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை வெளியேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தில் இருந்து மட்டும் விடுபட்டு, சுவாசத்தை உள்ளிழுக்காமலேயே இடது நாசியின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைத்து, ஜாலந்தர பந்தனத்தைக் கடைபிடித்து, சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.

இதை 21 முறை செய்யுங்கள்.