சிறுநீரக அழற்சி நீர்க்கட்டைக் குணப்படுத்த...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Nephrotic Syndrome
க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 29, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- மத்ஸ்யாஸனம்
- கேவலீகும்பகம்
- சூ'ன்யககும்பகம்
- போரோலிகாகும்பகம்
1. மத்ஸ்யாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 21
அத மத்ஸ்யாஸனம்
முக்தபத்மாஸனம் க்ரு'த்வா உத்தான-ச'யனஞ்சரேத் /
கூர்பராப்யாம் சி'ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸனந்து ரோகஹா// 21
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளும் இந்த ஆஸனம் எல்லா வியாதிகளையும் போக்குகிறது.

மத்ஸ்யாஸனம்
செய்நுட்பம்
1. வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- முதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
- முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும்.
2. மத்ச்யாஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பக:,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84
அத கேவலீகும்பக:
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புந: /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தைள்ளிழுக்கும்போதும், அது 'ஸஹ' என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது 'ஹம்' என்ற ஒலி எழுப்புகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- ஒவ்வொரு சுவாசத்தைள்ளிழுக்கும்போதும், 'ஸம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'ஸோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
- சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 6 இதை 11 நிமிடங்கள் செய்யுங்கள்.
3. மத்ச்யாஸனத்தில் இருந்தபடியே சூ'ன்யககும்பக:,
ஸௌர புராணம்-12 வது அத்யாயம்-22-24வது வரிகள்
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது, உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
4. மத்ச்யாஸனத்தில் இருந்தபடியே போரோலிகாகும்பக்:,
யோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் இருக்கவும்.
- 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
- சிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.