KAILASA Library/வாழும் அவதார புருஷர்/சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு வராமல் காக்க - Care For Nephrotic SyndromeSign in
வாழும் அவதார புருஷர்

சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு வராமல் காக்க - Care For Nephrotic Syndrome

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

நோய் பற்றிய விபரம்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிகளவில் புரதம் ரத்தத்தில் இருந்து (1.73அ2 உடல் மேல்பரப்பு பகுதியில் இருந்து குறைந்து நாள் ஒன்றுக்கு 3.5 கிராம் அளவில்) சிறுநீர் வழியாக வெளியேறுவதையே சிறுநீரக அழற்சி நீர்க் கட்டு என்கிறோம். இது எதனால் ஏற்படுகிறது என்பது குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக இருக்கிறது.

இந்த நோய் பாதிக்கப்பட்ட சிறு நீரகம் அதில் சிறு துளைகள் ஏற்பட்டுவிடும். இதனால் பெருமளவில் புரோட்டீன் யூரியா வெளியேறிவிடுகிறது. விளைவு... இரத்த நிணநீரில் புரோட்டீன் அல்புமினின் அளவு (Protein Albumin) குறைந்துவிடுகிறது. மேலும் இதனைத் தொடர்ந்து இரத்தச் சிறுநீர் (Hematuria) குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 28, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. வஜ்ராஸனம்
  1. கேவலீகும்பகம்
  1. சூ'ன்யகும்பகம்
  1. போரோலிகாகும்பகம்

1. வஜ்ராஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12

அத வஜ்ராஸனம்

ஜங்காய்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்தீதாயகம் // 12

மொழிபெயர்ப்பு

தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.

வஜ்ராஸனம்

வஜ்ராஸனம்

செய்நுட்பம்

  1. முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
  1. வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
  1. நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.

2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே கேவலீகும்பக:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84

அத கேவலீகும்பக:

ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புந: /

மொழிபெயர்ப்பு

ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது ‘ஸஹ’ என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது ‘ஹம்’ என்ற ஒலி எழுப்புகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், ‘ஸம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
  1. உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை உள் நிறுத்தும்போ து, ‘ஸோஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
  1. சுவாசத்தை வெளிவிடும்போது, ‘ஹம்’ என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள். 6 இதை 11 நிமிடங்கள் செய்யுங்கள்.

3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

சூ’ன்யகும்புக:, ஸெளர புராணம்-12 வது அத்யாயம்-22-24வது வரிகள்

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
  1. உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்ேபாது, உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே

போரோலிகாகும்புக:, ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477 - 481

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. ‘ம்ம்ம்’ என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
  1. கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.
  1. சிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.