சிறுநீரகப்பை பிரச்சினையில் இருந்து குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Urinary Problems
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 16, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- வஜ்ராஸனம்
- ஸ்வங்கச்'ருந்தகும்பகம்
- ப்லாவினீகும்பகம்
- மூர்ச்சநாகும்பகம்
1. வஜ்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 12
அத வஜ்ராஸனம்
ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபள /
வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.

செய்நுட்பம்
- முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
- வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
- நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.
வஜ்ராஸனம்
2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
ஸ்வங்க-ச்’ரு’ங்கலா கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-178
அத ஸ்வங்க-ச்'ருங்கலரும்பக:
ரேசகம்கும்பகம் குர்யாத் குருதர்சி'த-மார்கத: /
ரேசகம் ரேசகம் குர்யாத் ஸ்வங்க-ச்'ருங்கலோதிதா // 178
மொழிபெயர்ப்பு
குருவின் உபதேசப்படி ஒருவர் சுவாசத்தை வெளியே விட்டு நிறுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் ரேசகத்தைச் செய்தலே ஸ்வங்க ச்ருங்கலகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
- சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றவும்.
- முடிந்தளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு வெளியே நிறுத்த முடியாதபோது உடம்பு தானே சுவாசத்தை உள்ளே எடுத்துக் கொள்ள அனுமதிக்கவும்.
- மீண்டும் சுவாசத்தை வெளியேற்றி நிறுத்துங்கள்.
- சுவாசத்தை முடிந்தளவு நேரம் வெளியே நிறுத்துங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
ப்லாவினீகும்புக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171
அத ப்லாவினீகும்பக:
யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸாப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171
மொழிபெயர்ப்பு
தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
- சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்மீன்மீதிருந்து விடுபடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
6. இதனை 21 முறை செய்யுங்கள்.
இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.
4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
மூர்ச்சநாகும்ப்ப:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-170
அத மூர்ச்சநாகும்ப்ப:
ஆபூர்ய கும்பீதம் ப்ராணம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேந்-மூர்ச்சனா-கும்பொ மனோமூர்ச்சா ஸுதப்ரதா // 170
மொழிபெயர்ப்பு
உள்ளிழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றே வேண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
செய்நுட்பம்
- சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
- தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
- சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது என்னும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.