KAILASA Library/வாழும் அவதார புருஷர்/சிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

சிறுநீரகப்பை பிரச்சினை வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Urinary Problems

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 15, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. பத்மாஸனம்
  1. ஸ்வங்க-ச்’ருந்தலகும்பகம்
  1. ப்லாவினீகும்பகம்
  1. மூர்ச்சாகும்பகம்

1. பத்மாஸனம்,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகங்கள் 31-33

அத பத்மாஸனம்

உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ’ // 2.31

த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தápய பவனம் ச்’னை: // 2.32

இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச’னம் /
துர்லபம் யென கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33

மொழிபெயர்ப்பு

மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)

மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)

பத்மாஸனம் என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
  1. இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
  1. மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
  1. முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
  1. முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.
பத்மாஸனம்

பத்மாஸனம்

2. பத்மாஸனத்தில் இருந்தபடியே

ஸ்வங்க-ச்'ருங்கலா கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-178

அத ஸ்வங்க-ச்'ருங்கலகும்பக:

ரேசகம்கும்பதம் குர்யாத் குருதர்சி'த-மார்கத: /
ரேசகம் ரேசகம் குர்யாத் ஸ்வங்க-ச்'ருங்கலோதிதா // 178

மொழிபெயர்ப்பு

குருவின் உபதேசப்படி ஒருவர் சுவாசத்தை வெளியே விட்டு நிறுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் ரேசகத்தைச் செய்தலே ஸ்வங்க ச்ருங்கலகும்பகம் எனப்படும்.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை முழுவதுமாக வெளியேற்றவும்.
  1. முடிந்தளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு வெளியே நிறுத்த முடியாதபோது உடம்பு தானே சுவாசத்தை உள்ளே எடுத்துக்கொள்ள அனுமதிக்கவும்.
  1. மீண்டும் சுவாசத்தை வெளியேற்றி நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை முடிந்தளவு நேரம் வெளியே நிறுத்துங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. பத்மாஸனத்தில் இருந்தபடியே

ப்லாவினீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 171

அத ப்லாவினீகும்பக:

யதேஷ்டம் பூரயேத்வாயும் பந்தே ஜாலந்தரே த்ரு'டே /
ஹ்ரு'தி த்ரு'த்வா ஜலே ஸாப்த்வா ப்லாவினீகும்பகோ பவேத் // 171

மொழிபெயர்ப்பு

தண்ணீரிலே படுத்து மிதந்தபடி, நுரையீரல் முழுவதும் நிரம்பும் அளவிற்கு சுவாசத்தை உள்ளிழுத்து, பிறகு ஜாலந்தர முத்ராவில் உறுதியாக நிலைபெறும் இக்கும்பகம் ப்லாவினீகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்திலேயே இருங்கள்.
  1. சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையைச் சுருக்கி, தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
  1. முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உங்களால் சுவாசத்தை மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது, தாடையை மார்பின்மீதிருந்து விடுடுத்தி தளர்வடையுங்கள், பிறகு சுவாசத்தை வெளியேற்றுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10 -15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.

4. பத்மாஸனத்தில் இருந்தபடியே

மூர்ச்சனாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-170

அத மூர்ச்சனாகும்பக:

ஆபூர்ய கும்பீதம் ப்ராணம் பத்த்வா ஜாலந்தரம் ச'னை: /
ரேசயேந்-மூர்ச்சனா-கும்போ மனோமூர்ச்சா ஸுகப்ரதா // 170

மொழிபெயர்ப்பு

உள்ளிழுத்த சுவாசத்தை அப்படியே நிறுத்தி, ஜாலந்தர முத்ராவில் இருந்து, ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றே வண்டும். இந்த மூர்ச்சன ப்ராணாயாமம் செயலற்ற மனத்தையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.

செய்நுட்பம்

  1. சுவாசத்தை நன்றாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையைச் சுருக்கி இறுக்கமாக வைத்து, உங்கள் தாடையை மார்பின்மீது படுமாறு வைக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. முடிந்தவரை சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இனி முடியாது எனும்போது ஜாலந்தர பந்த முத்ராவில் இருந்தபடியே சுவாசத்தை மெதுவாக வெளியேற்றுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.