KAILASA Library/வாழும் அவதார புருஷர்/சிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க...Sign in
வாழும் அவதார புருஷர்

சிறுநீரகக் கற்கள் வராமல் பாதுகாக்க...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Kidney Stones

கிரியாகொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 29, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. மத்ஸ்யாஸனம்
  1. சீதலகும்பகம்
  1. ஸீத்காரீ ப்ராணாயாமம்
  1. புஸ்த்ரிகாகும்Enterpriseபகம்

1. மத்ஸ்யாஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 21

அத மத்ஸ்யாஸனம்

முக்தபத்மாஸனம் க்ரு’த்வா உத்தான-ச’யனஞ்சரேத் /
கூர்பராப்யாம் சி’ரோவேஷ்ட்ய மத்ஸ்யாஸனந்து ரோகஹா// 21

மொழிபெயர்ப்பு

பத்மாஸனத்தில் அமர்ந்து, பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளும் இந்த ஆஸனம் எல்லா வியாதிகளையும் போக்குகிறது.

மத்ஸ்யாஸனம்

மத்ஸ்யாஸனம்

செய்நுட்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
  1. முதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
  1. முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும்.

2. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74

அத சீ'தலீகும்பக:

ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

மொழிபெயர்ப்பு

வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.

தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுடுத்துகிறது.

செய்நுட்பம்

  1. மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து இருக்கவும்.
  1. கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
  1. நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
  1. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
  1. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. மத்ஸ்யாஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம்,

ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43

அத ஸீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

மொழிபெயர்ப்பு

மூச்சுக்காற்று, வாயின் வழியாக ‘ஸ்ஸ்’ என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதே தவனாகலாம்.

செய்நுட்பம்

  1. மேற்கூறிய ஆசனத்திலேயே தொடர்ந்து இருக்கவும்.
  1. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
  1. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. மத்ச்யாஸனத்தில் இருந்தபடியே

பஸ்த்ரிகாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165

அத பஸ்த்ரிகாகும்பக:

பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச்'ரமாவதி/
வேகேன ஸ்தனயோரூர்த்வம் தத: பூரோSர்க-வர்த்மனா // 164

ஜாலந்தரம் த்ரு'ட'ம் பத்தவா கும்பீதம் சந்த்ர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும்ப: ச'ரீராக்னிவிவர்த்தன: // 165

மொழிபெயர்ப்பு

ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.

செய்நுட்பம்

  1. கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
  1. உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
  1. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.