சிரங்கு நோய் குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Eczema
நோய் பற்றிய விபரம்
கிரந்தி அல்லது சிரங்கு என்பது ஒரு வகை சரும அழற்சி வியாதியாகும். கிரந்தி அல்லது சிரங்கு என்ற சொல் தோல் தடிப்புக்கள், தோல் சிவத்தல், வீக்கம், நமைச்சல் மற்றும் வறட்சி, பக்கு உதிர்வு, செதில் செதிலாக மாறுதல், கொப்புளம், வெடிப்பு விடுதல், நீர் கசிதல் அல்லது இரத்தம் வருதல் போன்ற பலவகைப்பட்ட அறிகுறிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சில நேரங்களில் இவை குணமான காயங்களிலிருந்தும் கூட உருவாகலாம். குணமாகும் ஒரு காயத்தை சொறையும்போது, அது புண்ணாகி கிரந்தி ஆகலாம். இதனால் தற்காலிக தோல் நிறமிழப்பு ஏற்படலாம்.
இங்கிலாந்து மக்கள் தொகையில் 5.7 மில்லியன் மக்கள் அதாவது ஒன்பது பேருக்கு ஒருவர்வீதம் இந்நோயால் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பாதிக்கப்படுகின்றனர்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 26, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பத்மாஸனம்
- ஸமானகும்பகம்
- ஊர்த்வஜகும்பகம்
- சந்த்ரகும்பகம்
- பஹி:கும்பகம்
1. பத்மாஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேஸம் 2, ஸ்லோகங்கள் 31-33
அத பத்மாஸனம்
உத்தானௌ சரணௌ க்ரு’த்வா சோரு-ஸம்ஸ்தௌ ப்ரயத்னத: /
உருமத்யே ததோத்தானௌ பாணீ க்ரு’த்வா து தாத்ரு’சௌ' // 2.31
த்ரு’ஷ்டிம் வின்யஸ்ய நாஸாக்ரே தந்தமூலம் ச ஜிஹ்வயா /
உத்தப்ய சிபுகம் வக்ஷஸ்யுத்தாப்ய பவனம் ச'னை: // 2.32
இதம் பத்மாஸனம் ப்ரோக்தம் ஸர்வ-வ்யாதி-விநாச'னம் /
துர்லபம் யென கேனாபி தீமதா லப்யதே புவி // 2.33
மொழிபெயர்ப்பு
மேல் நோக்கி திருப்பிய பாதங்களை முயற்சிசெய்து தொடைகளில் வைத்து, உள்ளங்கைகளையும் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக் கொள்ளவும். (2.31)
மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தி, முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, காற்றை மெதுவாக மேல் நோக்கி உயர்த்தவும், அதாவது பிராண வாயுவை மெதுவாக மேல் நோக்கி இழுக்கவும். (2.32)
பத்மாஸனம் (தாமரை ஆஸனம்) என்றழைக்கப்படும் இந்த ஆஸனம் எல்லாவகை நோய்களையும் அழிக்கும் சக்திபடைத்தது. எல்லோராலும் இது அடையப்படுவதற்கு சிரமமாக இருந்தாலும், இதை சில புத்திசாலி மனிதர்கள் கற்றுக்கொள்கிறார்கள். (2.33)

பத்மாஸனம்
செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும்.
- இடது காலை மடித்து வலது தொடை மீது வைக்கவும்.
- வலது உள்ளங்கையின் மேல் இடது பின்னங்கையை வைத்து, தொடைகளுக்கு இடையில் வைத்துக்கொள்ளவும்.
- மூக்கின் நுனிப் பகுதியைக் கூர்ந்து கவனித்து, நாக்கை மேல் தாடை பல்லின் தொடக்கத்தில் வைத்து அழுத்தவும்.
- முகவாய்க்கட்டையை மார்பில் பதித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.
- முகவாய்க் கட்டையைத் தளர்த்தி, இயல்பான பத்மாஸனத்தில் அமரவும்.
2. பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஸமானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62
அத ஸமானகும்பக:
நாபாவாபூர்ய வாயுச்’சேத் தேஹே வ்யாப்ய விதாரித: /
கும்பீதே ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்க பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸமானகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவுவதாக பாவனை செய்யுங்கள்.
- பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
- உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. பத்மாஸனத்தில் இருந்தபடியே
ஊர்த்வஜ கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 54, 55
அத ஊர்த்வஜ கும்பக:
க்ரு’காடிகா-ப்ரு’ஷ்ட-பார்ஷ்ணி-ப்ரு’ஷ்டாந்தேஷு ஸ்தித: ச’சி’ /
ரேசகாப்யாஸ-பாஹூல்யாத் க்ரமாத்-ஸ்தான-நியோகத: // 54
ஊர்த்வோர்த்வம்-இத்யபானஸ்ய கும்பகோர்த்வஜ-ஸம்ஜ்ஞித: /
பரகாய-ப்ரவேச’: ஸ்யாத்தடிகாத்விதயோன்மிதே // 55
மொழிபெயர்ப்பு
கழுத்து, முதுகு, குதிகால் மற்றும் கீழ்முதுகு ஆகிய பகுதிகளில் சந்திர சக்தி இருக்கிறது. தொடர்ந்து ரேசகத்தைப் பயிற்சி செய்வதும், அபானாவை ஒவ்வொரு இடமாக பாவனை செய்வதூமே ஊர்த்வஜ கும்பகா எனப்படும். ஒருவர், இதனை இரண்டு கடிகா (48 நிமிடங்கள்) பயிற்சி செய்தால், அவருக்குப் பரகாய ப்ரவேச ஸித்தி வாய்க்கும் (இன்னொரு உடலுக்குள் செல்லும் வல்லமை).
செய்நுட்பம்
- சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை வெளிவிடும் போது, முதுகெலும்பின் நுனிப்பகுதியில் (மூலாதாரம்) சந்திரனை பாவனை செய்யுங்கள்.
- மீண்டும் சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு நேரம் உள்ளே நிறுத்துங்கள். இம்முறை சுவாசத்தை வெளியேற்றும்போது ஸ்வாதிஷ்டானப் பகுதியில் சந்திரனை பாவனை செய்யுங்கள்.இவ்வாறு ஸஹஸ்ரார சக்கரம்வரை ஒவ்வொரு சக்கரமாக பாவனை செய்யுங்கள்.
4. பத்மாஸனத்தில் இருந்தபடியே
சந்த்ரகும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகம் 41
அத சந்த்ரகும்புக:
அபானேனோன்முக: வாயுரந்தச்'சாந்த்ர'கும்புக: /
யஸ்மின்ஸ்திதௌ ஸாக்ஷிமாத்ரே ப்ரணாபானஜயோதயௌ // 41
மொழிபெயர்ப்பு
அபான வாயுவின் காரணமாக பிராண வாயு மேல்நோக்கி நகரும்போது, அது சந்த்ரகும்பகம் என்றழைக்கப்படுகிறது. இக்கும்பகத்தில் நிலைபெறும்போது ஸாக்ஷியாக இருக்கும் ஒருவர் பிராண, அபான வாயுக்களைக் கட்டுப்படுத்தும் திறனையும் அடைகிறார்.
செய்நுட்பம்
- ஆழமாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- அப்போது மூல பந்த முத்ராவைச் செய்யுங்கள். (இடது குதிகாலை ஆஸனவாய் மேல் வைத்து அழுத்தி, ஆஸனவாயை இறுக்கிச் சுருக்கிக்கொள்ள வேண்டும்.)
- உங்களால் இனி சுவாசத்தை உள்நிறுத்த முடியாது எனும்போது, மூல பந்த முத்ராவை விடுவித்துவிட்டுத் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
5. பத்மாஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத பஹி:கும்புக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹிஃகும்பஸ்து ரேசிதஃ // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்
- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.