KAILASA Library/வாழும் அவதார புருஷர்/செரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

செரிமானக் கோளாறுகள் வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Digestive Disorders

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 27, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. பச்'சிமோத்தான-ஆஸனம்
  1. நாககும்பகம்
  1. ஸமானகும்பகம்
  1. த்ரிசூ'லகும்பகம்
  1. த்ரிநேத்ரகும்பகம்
  1. கபாலபாதி ப்ராணாயாமம்
  1. பஸ்த்ரிகாகும்பகம்

1. பச்'சிமோத்தான-ஆஸனம்,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 26

அத பச்'சிமோத்தான-ஆஸனம்

ப்ரஸார்ய பாதௌ புவி தண்டரூபௌ ஸம்ந்யஸ்த-பாலம் சிதியுக்ம-மத்யே/
யத்னேன பாதௌ ச த்ரு'தௌ கராப்யாம் யோகீந்த்ர-பீடம்
பச்'சிமோத்தானமாஹுஃ // 2.26

மொழிபெயர்ப்பு

கால்களை ஒரு குச்சியைப் போல விரைப்பாகத் தரையில் நீட்டி, குதிங்கால்களை ஒன்றையொன்று தொடாமல் வைத்துக் கொண்டு, முன்னால் குனிந்து நெற்றியை முழங்கால் மேல் வைத்து, பாதங்களைக் கைகளால் பிடித்துக் கொள்ளும் இந்நிலை பச்சிமோத்தான ஆஸனம் எனப்படுகிறது.

பச்சிமோத்தான-ஆஸனம்

பச்சிமோத்தான-ஆஸனம்

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டி அமருங்கள். குதிங்கால்கள் ஒன்றையொன்று தொட வேண்டாம்.
  1. முடிந்தளவு முன்னால் வளைந்து, நெற்றியை முழுங்கால்களின் மேல் வைக்கவும் (முழுங்கால்களை மடக்க வேண்டாம்).
  1. பாதங்களைக் கைகளால் பிடித்துக்கொள்ளவும்.

2. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே

நாகரும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

அத நாககும்பக:

ஓதன-க்ராஸவத்வாயும் கண்டே_னாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு'டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி'வோத்தித: /
க்ஷுதா_ம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78

மொழிபெயர்ப்பு

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  1. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

3. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே ஸமானகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 62

அத ஸமானகும்பக:

நாபௌவாபூர்ய வாயுச்'சேத் தேஹே வ்யாப்ய விதாரித: /
கும்பீதே ஜ்வலனம் த்யாயேத் ஸமானஸ்ய து கும்பக: // 62

மொழிபெயர்ப்பு

தொப்புள் பகுதியைச் சுவாசத்தால் நிரப்பி, அதை உடல் முழுக்க பரப்பியபின், நெருப்பில் கவனத்தைச் செலுத்தும் இந்தக் கும்பகம் ஸமானகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. தொப்புள் பகுதி நிரம்புமாறு சுவாசத்தை முழுவதுமாக உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, அது உடல் முழுக்க பரவுவதாக பாவனை செய்யுங்கள்.
  1. பிறகு தொப்புள் பகுதியில் நெருப்பு இருப்பதைப் போன்று பாவனை செய்யுங்கள்.
  1. உங்களால் இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

4. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிசூ'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193

அத த்ரிசூ'லகும்பக:

கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193

மொழிபெயர்ப்பு

எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள். 3. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

5. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே த்ரிநேத்ரகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 192

அத த்ரிநேத்ரகும்பக:

ஸக்ரு'ச்சந்த்ரேண ஸாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ய பூரயேன்-நோப்யம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பக: ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்தித: //

மொழிபெயர்ப்பு

இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.

செய்நுட்பம்

பத்மாஸனம்
  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
  1. பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். 9 இதை 21 முறை செய்யுங்கள்.

பத்மாஸனம்

6. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம்,

யோக ரஹஸ்யம், அத்யாயம் 1, ஸ்லோகம்- 100

செய்நுட்பம்

  1. வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
  1. உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
  1. இதைக 21 முறை செய்யுங்கள்.

7. பச்'சிமோத்தான-ஆஸனத்தில் இருந்தபடியே பஸ்த்ரிகாகும் பக:,கும் பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165

அத பஸ்த்ரிகாகும் பக:

பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச்'ரமாவதி/
வேகேன ஸ்தனயோரூர் த்வம் தத: பூரோSர்க-வர்த்மனா // 164

ஜாலந்தரம் த்ரு'டம்பத்வா கும்பிதம் சந்த்ர-வர்த்மனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும் ப: ச்'ரீராக்னிவிவர்த்தன: // 165

மொழிபெயர்ப்பு

ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும் பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.

செய்நுட்பம்

  1. கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
  1. உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
  1. உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.

5. இதனை 21 முறை செய்யுங்கள்.