குடல் எரிச்சல் நோய் வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Irritable Bowel Syndrome
க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 26, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- சிவ தாண்டவத்தின் முதல் கரணம்
- பஸ்த்ரிகாகும்பகம்
- உட்டியான பந்தம்
- த்ரிகூ'லாகும்ம்பகம்
- த்ரிநேத்ரகும்பகம்
1. சிவ தாண்டவத்தின் முதல் கரணம்

செய்நுட்பம்
- நேராக நிற்கவும்.
- குதிங்கால்கள் ஒன்றையொன்று தொடுமாறும், முன்னங்கால்கள் எதிரெதிர்த் திசைகளை நோக்கி இருக்குமாறும் வைக்கவும்.
- முழங்கால்களை மட்டும் அகட்டி வைத்து, உங்களது உடல் எடையைத் தொடைகள் தாங்கும்படி நிற்கவும்.
- இடது உள்ளங்கையின் மேல் வலது பின்னங்கையை வைத்துக் கொள்ளவும்.
- கைகளை ஆனந்தகந்தத்திற்கு நேரே வைத்துக் கொள்ளவும்-(இதயத்திற்குச் சற்று கீழே மற்றும் தொப்புளுக்குச் சற்று மேலே)
சிவ தாண்டவத்தின் முதல் கரணம்
2. சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருந்தபடியே
பஸ்த்ரிகாகும்பக:,
கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 164,165
அத பஸ்த்ரிகாகும்பக:
பஸ்த்ரேவ லோஹகாரஸ்ய ரேசபூரௌ ச்'ரமாவதி/
வேகேன ஸ்தனயோரூர் த்வம் தத: பூரொSர்க-வர்த்மனா // 164
ஜாலந்தரம் த்ரு'ட'ம் பத்த்வா கும்பீதம் சந்த்ர-வர்த்தமனா /
ரேசயேத் பஸ்த்ரிகாகும்பு: ச'ரீராக்னிவிவர்த்தன: // 165
மொழிபெயர்ப்பு
ஒருவர், தாம் களைப்படையும்வரை, கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இதைத் தொடர்ந்து வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து, சுவாசத்தை உள்ளேயே நிறுத்தி, ஜாலந்தர பந்தத்தைச் செய்ய வேண்டும். பிறகு இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள். இந்த பஸ்த்ரிகாகும்பகம் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்நுட்பம்
- கொல்லனின் உலைத் துருத்தி போன்று வேக வேகமாக இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடும்போது உங்கள் இதயப்பகுதி சுருங்கி விரிவடைய வேண்டும். நீங்கள் களைப்படையும்வரை இதைச்செய்யுங்கள், பின்பு வலது நாசி வழியாக மட்டும் மூச்சை உள்ளிழுங்கள்.
- உள்ளிழுத்து முடித்தவுடன், தாடையை மார்பின் மீது அழுத்தி சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள். இதனால் தொண்டைப் பகுதி அடைக்கப்படும்.
- உங்களால் முடிந்தளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, தாடையை தளர்த்தி இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருந்தபடியே உட்டியான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10
அத உட்டியான பந்த:
உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாதக: /
உட்டியானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)
மொழிபெயர்ப்பு
தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டியான பந்தம் மரணத்தை வெல்கிறது.
செய்நுட்பம்
- தொடர்ந்து சிவ தாண்டவத்தின் முதல் கரணத்தில் இருங்கள். கண்கள் திறந்திருக்கட்டும்.
- சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
- வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
- அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
- முடிந்தவரை சுவாசத்தை வெளியேறே நிறுத்தி வைக்கவும்.
- இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
- அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பு நிலைக்கு மீளவும்.
- பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுகளுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுகள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
4. தரையில் அமர்ந்தபடியே
த்ரிசூ'லகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 193
அத த்ரிசூ'லகும்பக:
கோணாப்யாம் ச முகேனாபி யுகபத் பூரயேத் ஸதா /
த்ரிசூ'லினா த்ரிசூ'லாக்ய: கும்ப_ உக்தஸ்-த்ரிசூ'லனுத் // 193
மொழிபெயர்ப்பு
எப்பொழுதும் நாசிகள் மற்றும் வாயின் வழியாக ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுக்கும் இத் திரிசூலகும்பகம் மூன்று துன்பங்களில் இருந்து விடுதலையைத் தரவல்லது என்று திரிசூலியான சிவனால் அருளப்படுகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இரு நாசித்துவாரங்களின் வழியாகவும் வாயின் வழியாகவும் ஒருங்கே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- பின்னர் தளர்வாக, இரு நாசித்துவாரங்கள் வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள். 5. இதை 7 முறை செய்யுங்கள்.
5. தரையில் அமர்ந்தபடியே த்ரிநேத்ரகும்பஃ, கும்பக-பத்ததிஃ, ஸ்லோகம் 192
அத த்ரிநேத்ரகும்பகஃ
ஸக்ரு'ச்சந்த்ரேண சாபூர்ய தூர்ய ஸூர்யேண பூரயேத் /
நியம்ப்ய பூரயேன்-நோப்யாம் தாரயித்வா யதாவிதி //
த்ரிநேத்ரகும்பகஃ ப்ரோக்தஸ்-த்ரிநேத்ரேண த்ரிஸித்திதஃ //
மொழிபெயர்ப்பு
இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து உள்ளடக்கி, பின்னர் இரண்டு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுத்து முறையாக உள்ளடக்கவும். முக்கண்ணன் சிவனால் அருளப்பட்ட இத் த்ரிநேத்ரகும்பகம் மூன்று சித்திகளைத் தரவல்லது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வெளிவிடாமல், இரு நாசிகளின் வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும். (இவையனைத்தையும் சுவாசத்தை வெளிவிடுவதற்கு முன் ஒரேயடியாகச் செய்யுங்கள்).
- பின்னர் தளர்வாக இரு நாசிகளின் வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதை 7 முறை செய்யுங்கள்.