கீழ்முதுகுவலியில் இருந்து குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Lower Back Pain
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 6, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- பவன முக்தாஸனம்
- நாடீ சு'த்திகும்ப॒கம்
- நாககும்ப॒கம்
- ப்ரக்ரு'தி:கும்ப॒கம்
- க்ரு'த்திச்'ரேஷ்ட_கும்ப॒கம்
1. பவன முக்தாஸனம், யோகாஸனம், அத்யாயம் 3, ஸ்லோகங்கள் 4-5
அத பவன முக்தாஸனம்
த்வயோஸ்து பாதயோ: பார்ஷ்ணிம் லாத்வாஸ்வ-ஸ்வநிதம்-பகே /
ஜானுனீ வக்ஷஸி ஸாது: பத்னாதி கரபந்தனை: // 3.4
ஏவம்-வித-ஸ்திதிர்யத்ர தத்ர வாயுமுக்தாஸனம் /
பூவேதனேன தசா'சு'த்தி: மலஸ்தவாயோர்மோசனம் // 3.5
மொழிபெயர்ப்பு
இரண்டு குதிங்கால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் (Perennial region) அருகில் வைத்து உட்கார்ந்து கொள்ளவும். மேலும் இரு கைகளையும் கோர்த்து முழங்கால்களை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(3.4)
இந்த ஆசனம் பவன (வாயு) முக்தாஸனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், பெருங்குடல் காற்று வெளியேற்றப்படுவதால் அடிவயிறு தூய்மையடைகிறது (3.5)
செய்நுட்பம்
- தரையில் அமரவும்.
- குதிங்கால்களை குதத்தினருகில் வைக்கவும்.
- முழங்கால்களை மடக்கி, உயர்த்தி வைக்கவும்.
- கைகளால் முழங்கால்களைக் கட்டவும்.
- முழங்கால்களை மார்பின் மீது அழுத்தவும்.
- முதுகு நேராக இருக்கட்டும்.

பவன முக்தாஸனம்
2. பவன முக்தாஸனத்தில் இருந்தபடியே நாடீசு'த்திகும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகங்கள் 114, 115
அத நாடீசு'த்திகும்புக:
ஏகயாபூர்ய பரயா ரேசனாத்தம்பஸ-சிந்தனாத் /
யதா-ச'க்த்யா நிரு'த்யாத பூர்ய ரேசிதயா புன: // 114
ஏவம் நாட்யோர்விபேதேன சது:காலேஷ்ஷு விம்ச'தி: /
கும்பகான் யதி குர்வீத நாடீசு'த்யாக்யகும்பக: // 115
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'ஹம்ஸ' என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே, ஏதாவது ஒரு நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு சுவாசத்தை உள் நிறுத்தி, மற்றொரு நாசி வழியாக சுவாசத்தை வெளியேற்றி, எந்த நாசி வழியாக சுவாசத்தை வெளியேற்றப்பட்டதோ அதே நாசி வழியாக மீண்டும் சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். (114)
இதனை இரு நாசிகளின் வழியாகவும் மாற்றி மாற்றி 20 முறை செய்யுங்கள். இவ்வாறு, நாள் ஒன்றுக்கு நான்கு முறை வீதம் செய்யப்படும் இக்கும்பகம் நாடீ சுத்திகும்பகம் என்றழைக்கப்படுகிறது. (115)
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் நிமிர்ந்து அமருங்கள்.
- 'ஸம்' என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 3. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு ‘ஹம்’ என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே வலது நாசி வழியாக சுவாசத்தை வெளியே விடவும்.
- மீண்டும் வலது நாசி வழியாகவே ‘ஸம்’ என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- ‘ஹம்’ என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியே விடவும்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. பவனமுக்த ஆஸனத்தில் இருந்தபடியே
நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78
அத நாககும்பக:
ஓதன-க்ராஸவத்வாயும் கண்டேனாபூரயேச்சனை: /
தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு’டம் // 77
கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி’வோதித: /
க்ஷு தாம் ஜயேத் பிபாஸாம் ச பலமஸ்ய ஸமீரிதம் // 78
மொழிபெயர்ப்பு
ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
- எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி,
தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
7. இதை 21முறை செய்யுங்கள்.
4. பவனமுக்த ஆஸனத்தில் இருந்தபடியே ப்ரக்ரு'தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70
அத ப்ரக்ரு'தி:கும்பக:
வாந்விதேனாஸு'கம் கர்ஷந் குர்வந்துர்ச்சதரம் ஸ்வநம் /
தாரயேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு'தி:கும்பக: ஸ்ம்ரு'த: // 70
மொழிபெயர்ப்பு
ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.
செய்நுட்பம்
1. 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள். 2.முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
- பிறகு மெதுவாகச்ாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
- இதை 21முறை செய்யுங்கள்.
குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.
5. பவனமுக்த ஆஸனத்தில் இருந்தபடியே க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 69
அத க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:
நோப்யாம் சாகர்ஷயேத் வாயு்ம் பலாத் ஹ்ரு'த்-ஸ்தானமானயேத் /
உத்க்ரு'ஷ்யோத்க்ரு'ஷ்ய ஹ்ரு'த்-ஸ்தானாத் கண்ட_தாளெள ப்ரு'வோந்தரே //
மூர்த்தாந்தம் சேத்-கதாயாத-க்ரு'த்தி-ச்'ரேஷ்டாக்ய-கும்பக: // 69
மொழிபெயர்ப்பு
இரு நாசிகளாலும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து இருதய பகுதிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து வந்து, இறுதியில் உச்சந்தலையில் இருத்தி வைக்கும் இக்கும்பகம் க்ருத்திச்ரேஷ்டகும்பகம் எனப்படும்.
செய்நுட்பம்
- இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து உங்கள் இருதய பகுதிக்கு எடுத்துவரவும்.
- அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு மெல்ல மெல்ல எடுத்துவந்து உச்சந்தலையில் நிறுத்துங்கள்.
- சுவாசத்தை முடிந்து அளவு உச்சந்தலையிலேயே நிறுத்தி வைக்கவும்.
- உங்களால் மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.