KAILASA Library/வாழும் அவதார புருஷர்/கீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

கீழ்முதுகுவலி வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Lower Back Pain

நோய் பற்றிய விபரம்

லும்பகோ (Lumbago) எனப்படும் கீழ்முதுகுவலி 80% மக்களின் வாழ்வில் அவர்களை ஏதோ ஒரு தருணத்தில் பாதிக்கும் ஒரு பொதுவான தசை மற்றும் எலும்பு சார்ந்த சீர்குலைவு நோயாக உள்ளது. இந்த வியாதி, ஒரு மனிதனுக்குள் இருக்கும் வேலை செய்யும் ஆற்றலை இழக்கச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அமெரிக்காவில், இந்த வியாதி மிகப் பரவலாக உள்ளது. இதன் காரணமாக வேலையை இழப்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். தலைவலிக்கு அடுத்தபடியாக மக்களை அதிக அளவு பாதிக்கும் ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட நோயாக உள்ளது. இது மிகவும் கடுமையானதாகவோ அல்லது சிறிது கடுமையானதாகவோ அல்லது மிகவும் நாள்ப்பட்டதாக இருக்கலாம். கீழ்முதுகுவலியின் அறிகுறிகள் ஆரம்பித்த ஒரு சில வாரங்களுக்குள் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகிறது.

பெரும்பாலானோருக்கு கீழ்முதுகுவலி தீங்கற்ற தசை எலும்பு சார்ந்த சீர்குலைவுகளினால் ஆரம்பம் ஆகிறது. அதை ‘குறிப்பிட்டுக் கூற முடியாத கீழ்முதுகுவலி’ என வகைப்படுத்துகின்றனர். தசை அல்லது மிருதுவான திசுக்களில் ஏற்படும் சுளுக்கு அல்லது இழுப்பின் காரணமாகவும், குறிப்பாக முதுகுக்கு அதிகமான பளுவைக் கொடுக்கும் பொழுதும் இந்த முதுகுவலி முதுகு தண்டுக்குப் பக்கவாட்டில் ஏற்படலாம். 99% முதுகுவலி இப்படிப்பட்டவையாகவே இருக்கும். வேறு சில பொதுவான காரணங்களும் இதற்கு இருக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 5, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. துர்வாஸ ஆஸனம்
  1. நாடி சுத்திதும்ப்பகம்
  1. நாககும்ப்பகம்
  1. ப்ர்க்ருதிகும்ப்பகம்
  1. க்ருத்திச்ரேஷ்ட-கும்ப்பகம்

1. துர்வாஸ ஆஸனம்,

யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 87

அத துர்வாஸ ஆஸனம்

டாஸ ஜாங்ந பரிகரி ஜீமண்ணை பக டாஸ பாஷதீ ஆணி /
புணா தேஉ தரதி டேகீ பாரலா குலபு குலா கீ பாரலீ கானீ லகாவை /
டாவா ஹாதகீ ஆகுல்யா கீ பீசலீ ஸ்யந்தீ ஸ்யு /
ஜீமணா ஹாதகீ ஆகுல்யா கா அங்க்ர லகாவை /
ஊபரா தலீ ஸுதா ஹாத ராஷை ஹதேலீ கீ பாரலீ கோர மேட்ர உர்த்த
லகாவை /
த்ரிஷ்டி த்ரிகுட ஆஸண கெளகுண கரமி ஆதிதி ரோக ஜாய ஸீதல ரஹை // 87

துர்வாஸ ஆஸனம்

துர்வாஸ ஆஸனம்

செய்நுட்பம்

  1. தரையில் அமர்ந்து கொள்ளவும்.
  1. வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை இடுப்பின் இடது பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  1. இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது இடுப்பின் பக்கம் இருக்குமாறு வைத்துக் கொள்ளவும்.
  1. வலது கையின் விரல்நுனிகளை, இடது கை விரல்களின் நடு மூட்டுப்பகுதியால் தொடவும்.
  1. கைகளைப் பிறப்புறுப்பிற்கு மேல் வைத்துக் கொள்ளவும்.
  1. புருவ மத்தியைக் கூர்ந்து நோக்கவும்.
  1. இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

2. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே நாடீஸுத்திமும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 114, 115

அத நாடீஸுத்திகும்பக:

ஏகயாபூர்ய பரயா ரேசனாத்தம்ஸ-சிந்தனாத் /
யதா-ச'க்தயா நிரு'த்யாத பூர்ய ரேசிதயா புன: // 114

ஏவம் நாட்யோர்விபேதேன சது:காலேஷு விம்ச'தி: /
கும்பகான் யதி குர்வீத நாடீஸுத்யாத்யகும்பக: // 115

மொழிபெயர்ப்பு

ஒருவர், 'ஹம்ஸ' என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே, ஏதாவது ஒரு நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்தளவு சுவாசத்தை உள் நிறுத்தி, மற்றொரு நாசி வழியாக சுவாசத்தை வெளியேற்றி, எந்த நாசி வழியாக சுவாசத்தை வெளியேற்றப்பட்டதோ அதே நாசி வழியாக மீண்டும் சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். (114)

இதனை இரு நாசிகளின் வழியாகவும் மாற்றி மாற்றி 20 முறை செய்யுங்கள். இவ்வாறு, நாள் ஒன்றுக்கு நான்கு முறை வீதம் செய்யப்படும் இக்கும்பகம் நாடீ சுத்திகும்பகம் என்றழைக்கப்படுகிறது. (115)

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் நிமிர்ந்து அமருங்கள்.
  1. 'ஸம்' என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு 'ஹம்' என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே வலது நாசி வழியாக சுவாசத்தை வெளியே விடவும்.
  1. மீண்டும் வலது நாசி வழியாகவே 'ஸம்' என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள். உங்களால் முடிந்தளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. 'ஹம்' என்ற மந்திரத்தைச் சிந்தித்துக்கொண்டே இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியே விடவும்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே நாககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகங்கள் 77-78

அத நாககும்பக:

ஒதன-க்ராஸவத்வாயும் கண்டே_னாபூரயேச்சனை: /

தம் ரோதயேத்யதாகாலம் பத்வா ஜாலந்தரம் த்ரு’டம் // 77

கண்டேன ரேசனம் குர்யாத் நாககும்ப: சி’வோதித: /
க்ஷுசாதம் ஜயேத் பிபாஸாம் ச புலமஸ்ய ஸமீரிதம் // 78

மொழிபெயர்ப்பு

ஒருவர், சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை விழுங்கி, ஜாலந்தர பந்தனத்திலிருந்தபடியே, சுவாசத்தை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி, பிறகு தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்ற வேண்டும். இதுவே சிவனால் விளக்கக்கப்பட்ட நாககும்பகம்.இதைப் பயிற்சி செய்யும் ஒருவர் பசி தாகத்தை வெல்கிறார்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. சாதத்தை ஒவ்வொரு கவளமாகச் சாப்பிடுவதுபோல,மெது மெதுவாகச் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாக சுவாசித்த உடனேயே, தொண்டையை இறுக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
  1. பின் தாடையை நெஞ்சின் மீது வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இந்த நிலையிலேயே சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. பிறகு தாடையை நெஞ்சிலிருந்து விடுவித்து, தொண்டையைத் தளர்வாக்கி, தொண்டையிலிருந்து மெதுவாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

4. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே

ப்ரக்ரு’தி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-70

அத ப்ரக்ரு’தி:கும்பக:

வாங்விதேனாசு’கம் கர்ஷந் குர்வந்துர்ச்சதரம் ஸ்வநம்/
தூரேச்சே-துதானஸ்ய ப்ரக்ரு’தி:கும்பக: ஸ்ம்ரு’த: // 70

மொழிபெயர்ப்பு

ஒருவர், 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே வேகமாகச் சுவாசத்தை உள்ளிழுத்து, சுவாசக்காற்றை உள்ளேயே நிறுத்தும் இக்கும்பகம் ப்ரக்ருதிகும்பகம் என்றழைக்கப்படுகிறது.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. 'வா' எனும் பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. முழுமையாகச் சுவாசத்தை உள்ளிழுத்தபிறகு, சுவாசக்காற்றை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் உள்ளேயே நிறுத்தி வைக்கவும்.
  1. பிறகு மெதுவாகச்ாதாரணமாகக் காற்றை வெளியேற்றுங்கள்.
  1. இதை 21முறை செய்யுங்கள்.

குறிப்பு: உங்களுக்கு உயர் இரத்த அழுத்தமோ குடலிறக்கமோ இருந்தாலோ அல்லதுநீங்கள் கர்ப்பிணியாக இருந்தாலோ சுவாசக்காற்றை உள்ளே நிறுத்த வேண்டாம்.

5. துர்வாஸ ஆஸனத்தில் இருந்தபடியே க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 69

அத க்ரு'த்திச்'ரேஷ்டகும்பக:

நோய்யாம் சாகர்ஷயேத் வாயும் பலாத் ஹ்ரு'த்-ஸ்தானமானயேத் /
உத்க்ரு'ஷ்யோத்க்ரு'ஷ்ய ஹ்ரு'த்-ஸ்தானாத் கண்ட_தாலெள ப்ரு'வோந்தரே //
மூர்த்தாந்தம் சேத்-கதாயாத-க்ரு'த்தி-ச்'ரேஷ்டாக்ய-கும்பக: // 69

மொழிபெயர்ப்பு

இரு நாசிகளாலும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து இருதய பகுதிக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து வந்து, இறுதியில் உச்சந்தலையில் இருத்தி வைக்கும் இக்கும்பகம் க்ருத்திச்ரேஷ்டகும்பகம் எனப்படும்.

செய்நுட்பம்

  1. இரு நாசிகள் வழியாகவும் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து உங்கள் இருதய பகுதிக்கு எடுத்துவரவும்.
  1. அங்கிருந்து தொண்டை, மோவாய்க்கட்டை, புருவ மையம் ஆகிய பகுதிகளுக்கு மெல்ல மெல்ல எடுத்துவந்து உச்சந்தலையில் நிறுத்துங்கள்.
  1. சுவாசத்தை முடிந்து அளவு உச்சந்தலையிலேயே நிறுத்தி வைக்கவும்.
  1. உங்களால் மேற்கொண்டு நிறுத்த முடியாதபோது சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.