வாழும் அவதார புருஷர்
கிட்டப்பார்வையைக் குணப்படுத்தும் கிரியா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Short-Sightedness
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 23, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- அனஸுய ஆஸனம்
- கபாலபாதி ப்ராணாயாமம்
- லஹரி ப்ராணாயாமம்
- அந்தோலி ப்ராணாயாமம்
1. அனஸுயாஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 88-89
அத அனஸுயாஸனம்
தசின கோடௌ நீசை டானை பாவோம் தாகே ஊபர ஆனை /
கோடா ஸந்தி நிலாவை பரீ ஆடாபத புனி தேஸ பஸாரீ // 88
தோஉ பதகே அங்குஷ்ட ஜோஈ தோஉ பக கர தே பகரே ஸோஈ /
நாஸாத்ரிஷ்டி அசக கரி ரஹியே அனஸூயா ஆஸன யஹ கஹியே // 89

அனஸுயாஸனம்
செய்நுட்பம்
- தரையில் அமரவும்.
- இடது முழங்காலை மடிக்கவும். 3. வலது முழங்காலை இடது முழங்கால் மேல் வைக்கவும்.
- இடுப்புக்கருகில் இரு கால்களையும் வைக்கவும்.
- வலது காலை இடது கையாலும் இடது காலை வலது கையாலும் பிடிக்கவும்.
- பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
- 30 நொடிகள் இதே நிலையில் நீடிக்கவும்.
2. அனஸயாஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100
செய்நுட்பம்
- வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
- உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
- இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
3. அனஸயாஸனத்தில் இருந்தபடியே லஹரி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100
செய்நுட்பம்
- ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
- பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
- இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.
4. அனஸயாஸனத்தில் இருந்தபடியே அந்தோலி ப்ராணாயாமம், யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்-100
செய்நுட்பம்
- சுவாசிக்கும் பொழுது நாக்கைக் குழாய்போல் மடிக்கவும்.
- வாய், மூக்கு இரண்டின் வழியாகவும் சுவாசிக்கவும்.
- முழுமையாகச் சுவாசித்து முடித்தவுடன் நாக்கை உள்நோக்கி இழுத்து, மேல் அண்ணத்தைத் தொடும்படி வைக்கவும்.
- எவ்வளவு நேரம் சுவாசத்தை உள்அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- உங்களால் இனியும் உள்அடக்க முடியாது எனும்போது மெதுவாக சுவாசத்தை மூக்கின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.