KAILASA Library/வாழும் அவதார புருஷர்/கிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

கிட்டப்பார்வை வராமல் தடுப்பதற்கான பராமரிப்பு கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Short Sightedness

நோய் பற்றிய விபரம்

மையோபியா (Myopia) அல்லது கிட்டப்பார்வை என்பது கண்லென்சி ன் புறவளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுறுவதாலும் ஏற்படுகிறது. உள்செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடையும் போது ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகிறது. இதனால் பிம்பம் தெளிவற்றதாக உணரப்படுகிறது. ஏனெனில் தூரத்தில் உள்ள பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்பட இயல்வதில்லை. மையோபியாவில் தூரத்தில் உள்ளவை மங்கலாகத் தெரியும்; பக்கத்தில் இருப்பவை தெளிவாகத் தெரியும். ஆனால் அதிகப்படியான மையோபியாவில் அருகில் உள்ளது தெரிவதுகூட பாதிக்கப்படும். நோயாளிகள் தூரத்தில் இருப்பதைக் கண்ணாடி இன்றிப் படிக்க முடியாது.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 22, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. அகோர ஆஸனம்
  1. கபாலபதி ப்ராணாயாமம்
  1. லஹரி ப்ராணாயாமம்
  1. அந்தோலி ப்ராணாயாமம்

1. அகோர ஆஸனம்,

ஜோக ப்ரதீபிகா-ஸ்லோகங்கள் 205-208

அத அகோர ஆஸனம்

பூர்வ கஹோ பீசி'கா ஜோஸ வாஹீ விதி ஜோ கீஜை ஸோச /
ஸப அங்குரீ முத் பாஹரி ஆனே முதகோ புனி ஸம்புட கரி டானே // 205

ஜிபா உலடி தாலவே துரை ஹாதாம்ஸோ ஆரம்ப புனி கரை /
ஆரம்ப கீ க்ரியா ஹை ஜோஸ விதிபூர்வ அப வர்ணோன் ஸோயீ // 206

ததி ஹதேலி முத பரி கரே ததின நாஸா அங்குஷ்ட துரை /
ஸூர்யஸு வாசு உரி ஆனேன ஸஹித மாத்ரா கும்பக டானை // 207

சந்த்ர நாடி கரி வாய உதாரே ஸம ஸரீர நீகீ விதி தாரே //
ஜோ துஜை ஸ்வர ஆரம்ப டானேன் தோ ஸப ஸ்வர விதி உலடி டானே // 208

அகோர ஆஸனம்

அகோர ஆஸனம்

செய்நுட்பம்

  1. குதிங்கால்களை அருகருகே வைத்து அமரவும்.
  1. முழங்கால்களை விரித்து வைக்கவும்.
  1. உடம்பை நேராக நிமிர்த்தி வைக்கவும்.
  1. வலது உள்ளங்கையை வாயின் மீது வைக்கவும்.
  1. நாக்கை உள் நோக்கி மடக்கவும்.
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு நேரம் சுவாசத்தை அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இப்பொழுது இடது உள்ளங்கையை வாயின் மீது வைக்கவும்.
  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. எவ்வளவு நேரம் சுவாசத்தை அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. வலது நாசி வழியாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
  1. இது போன்று மாற்றி மாற்றி சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிடுங்கள்.
  1. இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.

2. அகோர ஆஸனத்தில் இருந்தபடியே கபாலபாதி ப்ராணாயாமம்,

யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்- 100

செய்நுட்பம்

  1. வேக வேகமாக சுவாசத்தை வெளிவிடுங்கள்; சுவாசத்தைவெளிவிடும் போது வயிற்றை உள்ளிழுத்து மேலே இழுக்கவும்.
  1. உடலை தன்னாலேயே சுவாசத்தை உள்ளிழுக்க அனுமதிக்கவும்.
  1. இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.

3. அகோர ஆஸனத்தில் இருந்தபடியே லஹரி ப்ராணாயாமம்,

யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம் 100

செய்நுட்பம்

  1. ஒரு நாசி வழியாக சிறு அளவு (short inhalation) சுவாசமாக உள்ளிழுங்கள்.
  1. பிறகு மற்றொரு நாசி வழியாக, சிறு அளவு (short inhalation) சுவாசமாக வெளிவிடுங்கள்.
  1. இதை 3 நிமிடங்கள் செய்யுங்கள்.

4. அகோர ஆஸனத்தில் இருந்தபடியே அந்தோலி ப்ராணாயாமம்,

யோக ரஹஸ்யம், முதல் அத்யாயம், ஸ்லோகம்-100

செய்நுட்பம்

  1. சுவாசிக்கும் பொழுது நாக்கைக் குழாய்போல் மடிக்கவும்.
  1. வாய், மூக்கு இரண்டின் வழியாகவும் சுவாசிக்கவும்.
  1. முழுமையாகச் சுவாசித்து முடித்தவுடன் நாக்கை உள்நோக்கி இழுத்து, மேல் அண்ணத்தைத் தொடும்படி வைக்கவும்.
  1. எவ்வளவு நேரம் சுவாசத்தை உள்அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. உங்களால் இனியும் உள்அடக்க முடியாது எனும்போது மெதுவாக சுவாசத்தை மூக்கின் வழியாக வெளியேற்றவும். இதை 21 முறை செய்யுங்கள்.