காதிரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கான கிரியா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care for Tinnitus
நோய் பற்றிய விபரம்
காதிரைச்சல் என்பது சப்தம் வெளியில் இல்லாதபோதும் மனிதனுடைய காதில் உணரப்படுகின்ற சப்தம்.
இரு ஒரு நோயல்ல, ஆனால் குறுகிய நேரமேயானாலும் செவிப் பாதையில் ஏற்படுகின்ற அசாதாரணமான அதிக சப்தங்கள் (பெரும்பாலும் அவை எப்போதுமே குறிப்பிட்ட காலவரையறையைக் கொண்டவையாகவே இருக்கும்) காதில் நோய்த்தொற்று, காதில் வேற்றுப் பொருட்கள் இருத்தல், மூக்கில் ஏற்படுகின்ற ஒவ்வாமை சிலசமயங்களில் காதில் உள்ள திரவத்தையோ அல்லது குறும்பி ஏற்படுவதையோ உலரச் செய்துவிடும்போது அல்லது அவற்றைத் தூண்டிவிடும்போது, அடிமைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும்போது (Benzodiazepine addiction) என்று பல காரணங்களினால் காதிரைச்சல் ஏற்படலாம். காது ஒலிக் கருவிகளைப் பயன்படுத்தும்போது ஒலி எங்கும் சிதறாமல் நேரடியாகச் செவிப் பாதைக்குள் செல்லும்போதும், பொதுவாக ஒலி அளவுகளைத் தாண்டி ஒலியைப் பயன்படுத்தும்போதும் இந்தக் காதிரைச்சல் ஏற்படுகிறது.
காதிரைச்சல், பொதுவாக வயதான காலத்தில் இயற்கையாகவே ஏற்படலாம். மேலும் சில மருந்துகளின் பக்கவிளைவுகளால் மற்றும் மரபியல் காரணமாக ஏற்படலாம். எப்படியிருப்பினும் பெரும்பாலான காதிரைச்சல், அதிக சப்தத்தினால் ஏற்படும் காது கேளாமையினால் வருவதே.
காதிரைச்சல் பெரும்பாலும் உணர்ந்து அறியக்கூடிய விஷயமாக இருக்கிறது. அதனால் இதனைப் புறக்கருவிகள் கொண்டு அறிவது கடினம், ஆடியோ மெட்ரிக் சோதனை மூலமாக அலைவரிசை ஒப்பீடு மற்றும் ஒலித் தீவிரம் போன்றவற்றால் அளப்பது கடினம். இந்த நிலையை மருத்துவ ரீதியாக அறிய வேண்டுமானால், நடைமுறை கஷ்டங்களின் மூலம் அதாவது தூக்கத்தில் ஏற்படுகின்ற தொந்தரவு, அமைதியான செயல்பாடுகள் மற்றும் இயல்பான தினசரி நடவடிக்கைகளில் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகள் போன்றவற்றைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 28, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- அனஸூய ஆஸனம்
- ப்ராமரீ ப்ராணாயாமம்
1. அனஸூயாஸனம்,
யோக ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் -4
அத அனஸூயாஸனம்
ஜீமணா கோடா கீ ஸ்யந்தி உபரி டாவா கோடா கீ ஸந்தி மிலாஇ ராக்ஷ / * கோடாஸ்யௌ லே பகதல்யா ளௌ ஆடவாஇ ஸஃதா ராக்ஷ/
ஹாதா ஸ்யௌ பககா அகூடா பகடே அதாவா தோஹௌ ஹாத பாஸு நை கரி காகஸீ கரை /
மூலத்வார பாஸை காகஸீ ராக்ஷ / * ஹதேலீ பிஷ்டி மூலத்வார உர்த்த லகா ராக்ஷ / *
நாஸிகா த்ரதீ லகாவை த்ரிஷ்டி நாஸா அக்ர / * ஆஸன கெளகுண யஹு ஆஸன மாஸ தோஸ கரீ ஸாதை தெள கஞ்சனமா தேஹஹோசா // 4


அனஸூய-ஆஸனம்
செய்நுட்பம்
- தரையில் அமர்ந்து ஒரு முழுங்காலை மற்றொரு முழுங்கால் மேல் வைக்கவும்.
- கைகளைப் பின்னால் கட்டவும்.
- முன்னே குனிந்து மூக்கை பூமியின் மீது படச் செய்யுங்கள்.
- பார்வையை மூக்கின் நுனிப்பகுதியில் நிலைநிறுத்துங்கள்.
2. அனஸூய ஆஸனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169
அத ப்ராமரீகும்பக:
அலிச'ப்தயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: /
ஸாலிச'ப்தாச்சனை ரேகாத் ப்ராமரீகும்பகோ முனே: // 169
மொழிபெயர்ப்பு
ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள் அடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ராமரீகும்பகம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- 'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
- முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
- 'ம்' என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
இந்தக்கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.