கவனக்குறைபாடு கோளாறு வராமல் காக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Attention Deficit Disorder (ADD)
நோய் பற்றிய விபரம்.
கவனக் குறைவு, எளிதில் கவனம் சிதறுதல், ஒழுங்கு குலைதல், ஒத்திப்போடுதல், ஞாபக மறதி போன்றவை கவனக்குறைபாட்டுக் கோளாறின் குணாதிசயங்களாகக் கருதப்படுகின்றன. இது, சோம்பல்-சோர்வு என்பவற்றிலிருந்து வேறுபட்டது. மேலும் அதிக இயக்கம் அல்லது திடீர் உணர்ச்சி போன்ற சில அறிகுறிகள் இதில் காணப்படும். அல்லது அறிகுறிகள் இல்லாதும் இருக்கலாம்.
படிப்பதில் மகிழ்ச்சியடையும் குழந்தைகள்கூட சில சமயங்களில், ஒழுங்குபடுத்தப்பட்ட அல்லது திட்டமிட்ட செயல்களை எதிர்கொள்ளும்போது, குறிப்பாக அது நீண்ட செயல்முறையாகவோ குழுவுடன் சேர்ந்து செயல்படும் முறையாகவோ இருக்கும்போது அவர்கள் அந்தத் தலைப்புச் சார்ந்த விஷயத்தை முழுவதுமாகப் புரிந்துகொண்ட போதிலும் தங்களுக்குள் பயத்தினை உருவாக்கிக் கொள்வார்கள்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 21, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- வஜ்ராஸனம்
- தக்ஷிணாவர்த்தஸுந்தகும்பகம்
- வாமாவர்த்தஸுந்தகும்பகம்
- கதாகும்பகம்
1. வஜ்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12
அஅத வஜ்ராஸனம்
ஜங்கப்யாம் வஜ்ரவத்-க்ரு’த்வா குதபார்ச்’வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் பவேதேதத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
செய்நுட்பம்
- முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
- வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
- நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.

வஜ்ராஸனம்
2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே தக்ஷிணாவர்த்த ச'ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110
சக்ரகும்பம் த்விதூ குர்யாதக்னீஷோமம் ததை கதா /
ச'ங்ககும்பேயமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு'த: // 110
மொழிபெயர்ப்பு
சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககும்பகம் எனப்படுகிறது. சங்ககும்பகமும் இதற்குமுன் சொல்லப்பட்ட சக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
- ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
- மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள். (1-6 எண் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்னீஷோமாக்யகும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
இந்த மொத்த சுற்றை அதாவது இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீஷோமாக்யகும்பகச் சுற்றை 21 முறை செய்யுங்கள்.
3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
வாமாவர்த்த ச'ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110
அத_ வாமாவர்த்த ச'ங்ககும்பக:
சக்ரகும்பம் த்விதா குர்யாதக்னீஷோமம் ததைகதா /
ச'ங்ககும்போஶயமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு'த: // 110
மொழிபெயர்ப்பு
சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககும்பகம் எனப்படுகிறது. சங்ககும்பகமும் இதற்குமுன் சொல்லப்பட்ட சக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
- ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
- மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
(1-6 எண் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் இருசுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்னீஷோமாக்ய கும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
- இந்த மொத்த சுற்றையும் அதாவது இருசுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீஷோமாக்யகும்பகச் சுற்றையும் 21 முறை செய்யுங்கள்.
4 வஜ்ராஸனத்தில் இருந்தபடியே கதாகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112
அத கதாகும்பக:
உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்பு: சி'வேனோக்தோ யோகினோ பலகாரக: // 112
மொழிபெயர்ப்பு
இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.
செய்நுட்பம்
- இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசி களையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.