KAILASA Library/வாழும் அவதார புருஷர்/கருப்பைக் கட்டி வராமல் காக்கSign in
வாழும் அவதார புருஷர்

கருப்பைக் கட்டி வராமல் காக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care For Polycystic Ovaries

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. மூல பந்தம்
  1. உட்டீயான பந்தம்
  1. ஜாலந்தரபந்தம்

1.மூல பந்த:

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகங்கள் 14,15

அத மூலபந்த:

பாார்ஷ்ணிணா வாமபாதஸ்ய யோனிமாகுஞ்சயேத் தத: /
நாபி்க்ரந்திம் மேருதண்டே ஸம்பீட்ய யத்னத: ஸுதீ: // 3-14

மேட்ரம் தக்ஷிண-குல்பே து-த்ரு'டபந்தம் ஸமாசரேத் /
ஜராவிநாசி'னீ-முத்ரா மூலபந்தோ நிகத்யதே // 3-15

மொழிபெயர்ப்பு

மூல பந்தம் என்றழைக்கப்படும் இந்த முத்ராவில், பயிற்சியாளர் தனது இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அழுத்தி, ஆசனவாயை இறுக்கிச் சுருக்கிக்கொள்ள வேண்டும். நாபிக்கருகில் இருக்கும் குடல் பகுதியை உட்பக்கமாகக் கவனத்துடன் சுருக்கி முதுகெலும்பைத் தொடுமாறு வைத்து, வலது குதிகாலை பிறப்புறுப்பிற்கு மேல் வைக்கவும். இந்த முத்ரா வயது முதிர்வதைத் தவிர்க்கிறது.

செய்நுட்பம்

  1. இடது குதிகாலை ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் வைத்து அழுத்தவும்.
  1. ஆசனவாயை இறுக்கிச் சுருக்கவும்.
  1. நாபிக்கருகில் இருக்கும் குடல் பகுதியை முதுகெலும்பைத் தொடுமாறு உட்பக்கமாகக் கவனத்துடன் சுருக்கவும்.
  1. வலது குதிகாலை பிறப்புறுப்பிற்கு மேல் வைக்கவும்.
மூல பந்தம்

மூல பந்தம்

2. மூல பந்தத்தில் இருந்தபடியே

உட்டியான பந்த:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10

அத உட்டியான பந்த:

உதரே பச்’சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்’ராந்தம் மஹாகக: /
உட்டியானம் த்வஸௌ பந்தோ ம்ரு’த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

மொழிபெயர்ப்பு

தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டியான பந்தம் மரணத்தை வெல்கிறது.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆசனத்தில் அமரவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
  1. சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். பின் சுவாசத்தை முழுவதுமாக மெதுவாக வெளியேற்றவும்
  1. வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்‌டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
  1. அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
  1. முடிந்தவரை சுவாசத்தை வெளியேறயே நிறுத்தி வைக்கவும்.
  1. இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
  1. அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசிக்கவும்.
  1. பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும்.

பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

3. மூல பந்தத்தில் இருந்தபடியே ஜாலந்தரபந்த:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 3, ஸ்லோகம் 12

அத ஜாலந்தரபந்த:

கண்ட_-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடஷா'தார-பந்தம் //3-12

மொழிபெயர்ப்பு

தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் முடிவிட முடியும்.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
  1. மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள். இதனை 21 முறை செய்யுங்கள்.