KAILASA Library/வாழும் அவதார புருஷர்/ஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

ஒற்றைத்தலைவலி வராமல் பாதுகாக்கும் கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care for Migraine

நோயைப் பற்றிய குறிப்பு

மைக்ரேன் எனப்படும் நரம்புமண்டல பாதிப்புகளால் ஏற்படும் தலைவலியை, குமட்டல்களால் ஏற்படுகின்ற சுமாரான தலைவலி மற்றும் கடுமையான தலைவலி என இருவகையாகப் பிரிக்கிறார்கள். இது ஆண்களை விட பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக வருகின்றது.

மைக்ரேன் தலைவலி, ஒற்றைத் தலைவலியாகவும் (தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலிப்பது), இயல்பாகவே துடிப்புமிக்கதாகவும் மற்றும் 2 லிருந்து 72 மணிநேரம்வரை வலி நீடிப்பதாகவும் இருக்கிறது; இதற்கான அறிகுறிகள் குமட்டல், வாந்தி, போட்டோபோடியா (வெளிச்சத்தை கண்டால் ஆகாது),போனோ போபியா (ஒலியைக் கேட்டால் சகிக்க முடியாது). இந்த அறிகுறிகள் தினசரி செயல்பாடுகளால் அதிகரித்துவிடுகின்றன.

மைக்ரேன் தலைவலியினால் பாதிக்கப்பட்டவர்களில் (சுமாராக) மூன்றில் ஒரு பகுதியினர், சில முக்கியமான முன் அறிகுறிகளை உணர்கின்றனர். அவை, தற்காலிகமான காட்சிகளாகவோ, புலன்கள் சார்ந்த உணர்ச்சிகள், மொழி மற்றும் கைகால் செயல்பாடுகளில் தடுமாற்றங்களாகவோ வெளிப்படுகின்றன.

வலியின் கடுமைத் தன்மையும், தலைவலி நீடிக்கின்ற நேரமும், இரு தாக்குதல்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளியும் மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

மைக்ரேன்-ஏன் ஏற்படுகின்றது என்பதற்கான அடிப்படை காரணம் மருத்துவரீதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. எப்படியிருந்தாலும், உடல்ரீதியான பல நிகழ்வுகள் மைக்ரேனுடன் தொடர்புடையதாக இருக்கின்றன.

பொதுவாக மன அழுத்தம், பசி, மற்றும் களைப்பு ஆகியவை மைக்ரேனை அதிகரிக்கச் செய்வதாகச் சொல்லப்படுகின்றன.

கிரியா கொடுக்கப்பட்ட நாள் - நவம்பர் 9, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. க்ரு’த்ராஸனம்
  1. சும்பராஜகும்பகம்
  1. சீ’தலீகும்பகம்
  1. ஸீத்காரீ ப்ராணாயாமம்

1. க்ரு'த்ராஸனம்,

மத்ஸ்யேந்த்ர ஸம்ஹிதா, ஸ்லோகங்கள் 25-27

அத க்ரு'த்ராஸனம்

ஏதஸ்யாங்குஷ்டயோர்மூலே கார்பூரே ஸந்நிவேச'யேத் /
பரிவர்த்த்ய கரௌ ஸ்ப்ரு'ஷ்ட வாவங்குலீதல-கோபிதா // 25

அங்குலீப்ரு'ஷ்டயோஹேது சிபுகம் ஸந்நிதாபயேத்
அங்குஷ்டௌ ஸரலோ க்ரு'த்வா தாலுமூல-ஸமாச்'ரிதௌ // 26

த்ரு'த்வா ஸ்திரமனா பூத்வா க்ரு'த்ராஸனமிதம் பரம் /
ஸர்வதோஷக்ஷயகரம் ஸர்வோபத்ரவ-நாச'னம் // 27

மொழிபெயர்ப்பு

பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டு, முழுங்கைகளைப்ப் பாதங்களில் வைத்து க்கொண்டு, விரல்களை ஒன்றுடன் ஒன்றாகக் கோர்த்து, உங்கள் தாடையை விரல்மூட்டுக்களின் மேல் வைக்கவும். பெருவிரல் தொண்டையை அழுத்தியவாறு இருக்கட்டும். இது எல்லாவித நோய்களையும், அதனால் உண்டாகும் பிரச்சி னைகளையும் போக்குகிறது.

செய்நுட்ப்பம்

  1. வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
  1. இரு முழுங்கைகளையும் அததற்குரிய பாதங்களில் வைக்கவும்.
  1. விரல்களை ஒன்றோடு ஒன்றாகக் கோர்த்துக் கொள்ளவும்.
  1. தாடையை விரல் மூட்டுக்களின் மேல் வைத்துக் கொள்ளவும்.
  1. தொண்டைப் பகுதியை பெருவிரல்களால் அழுத்திக் கொள்ளவும்.
  1. இதே நிலையில் 60 வினாடிகள் அமர்ந்திருக்கவும்.
க்ருத்ராஸனம்

க்ருத்ராஸனம்

2. க்ரு'த்ராஸனத்தில் இருந்தபடியே கும்பராஜகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 134

அத கும்பராஜகும்பக:

பலாதாகர்ஷயேத்வாயும் யாவத் த்ராணஸுமுத்ரணம் /
கும்பயேச்ச ததா வாயுப் கும்பராஜோSயமீரித: // 134

மொழிபெயர்ப்பு

வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நிறுத்தி, நாசிகளை முறையாக மூடவும். இதுவே கும்பராஜகும்பகம் எனப்படும்.

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. மிகவும் வேகமாக சுவாசத்தை உள்ளிழுத்து நுரையீரலை நிரப்பவும்.
  1. நாசிகளை விரல்களால் அடைத்துக் கொண்டு சுவாசத்தை முடிந்த அளவிற்கு உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. உங்களால் மேற்கொண்டு சுவாசத்தை நிறுத்த முடியாதபோது, இரண்டு நாசிகளாலும் சுவாசத்தை மெதுவாக வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

3. க்ரு'த்ராஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74

அத சீ'தலீகும்பக:

ஜிஹ்வயா வாயுமாஃக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73

ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74

மொழிபெயர்ப்பு

வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள். (5.73)

தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது. (5.74)

செய்நுட்பம்

  1. கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
  1. கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
  1. நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
  1. குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
  1. சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. க்ரு'த்ராஸனத்தில் இருந்தபடியே

ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43

அத ஸீத்காரீ ப்ராணாயாமம்

ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43

மொழிபெயர்ப்பு

மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதே ரவனாகலாம்.

செய்நுட்பம்

  1. மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
  1. பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
  1. பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
  1. சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.