உள்ளங்கை மற்றும் பாதங்களில் ஊற்றெடுக்கும் அதிக வியர்வையில் இருந்து குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Excessive Sweating Of Palms & Feet
நோய் பற்றிய விபரம்
ஹைப்பர்ஹைட்ரோஸிஸ் (Hyperhidrosis) என்னும் வியர்வை நோய், உடம்பின் உஷ்ணத்தைச் சீர்ப்படுத்துவதற்குத் தேவைப்படும் அளவைவிட அதிகமாக வியர்த்தலைக் குறிக்கிறது. இது உடலின் ஏதாவது ஒரு பாகத்தில் மட்டும் அதாவது கை, கால் அக்குள் பகுதிகள் மற்றும் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் என்று வியர்வை நாளங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஒரு சிலருக்கு அதிக வியர்வை ஏற்படுகிறது. ஆனாலும் உடலின் மற்ற பாகங்கள்கூட இந்த நோயால் பாதிக்கப்படலாம்.
இது மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.
1. தொடக்க நிலை. 2. பிறவிக் குறை. 3. இடைப்பகுதியில் ஏற்படும் குறை.
- ஆரம்பநிலை வியர்த்தல் என்பது விடலைப்பருவத்தில் ஏற்படும்.
- சில சமயங்களில் சிலருக்குக் பரம்பரை காரணமாக அதற்கு முன்பே கூட ஏற்படும்.
- இடைப்பகுதியில் ஏற்படும் அதிக வியர்வைக் கோளாறானது வாழ்வின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இது தைராய்ட் கோளாறு, சர்க்கரை நோய், கட்டிகள், மாதவிடாய் நிற்கும் காலம், வாதநோய், குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் மெர்குரி விஷத்தால் ஏற்படலாம்.
மேலும் இது Palmoplantar எனப்படும் கை கால்களில் வியர்த்தல், உண்ணும் போது வியர்த்தல், பொதுவாக உடல் முழுவதும் வியர்த்தல் என்றும் வகைபடுத்தப்படுகிறது.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 18, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- வஜ்ராஸனம்
- கேவலீகும்பகம்
- சூன்யகும்பகம்
- போரோலிகாகும்_பகம்
1. வஜ்ராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 12
அத வஜ்ராஸனம்
ஜங்காப்யாம் வஜ்ரவத்-க்ரு'த்வா குதபார்ச்'வே பதாவுபௌ /
வஜ்ராஸனம் உபவேதேத்-யோகீனாம் ஸித்திதாயகம் // 12
மொழிபெயர்ப்பு
தொடைகளை இரும்பைப்போல இறுக்கமாக்கி, கால்களை ஆசனவாய்க்கு இருபக்கங்களிலும் ஒட்டி வைக்கும் இந்த நிலை வஜ்ராஸனம் எனப்படுகிறது. இது, யோகிகளுக்கு மனோரீதியான ஆற்றலை அளிக்கிறது.
செய்நுட்பம்
- முழங்கால்களும், கணுக்கால்களும், கால விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போடவும்.
- வலது குதிங்காலின் மேல் வலது ப்ருஷ்டப் பகுதியும், இடது குதிங்காலின் மேல் இடது ப்ருஷ்டப் பகுதியும்படுமாறு அமரவும்.
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து தொடைகளின்மீது வைக்கவும்.
- நுனி மூக்கைக் கூர்ந்து கவனிக்கவும்.

வஜ்ராஸனம்
2. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே
கேவலீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகம் 84
அத கேவலீகும்பக:
ஹம்காரேண பஹிர்யாதி ஸ:காரேண விசே'த் புந: /
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், அது ‘ஸஹ’ என்ற ஒலியை எழுப்புகிறது. அதேபோல் சுவாசத்தை வெளிவிடும்போது, அது ‘ஹம்’ என்ற ஒலி எழுப்புகிறது.
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- ஒவ்வொரு சுவாசத்தை உள்ளிழுக்கும்போதும், 'ஸம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தும்போது, 'ஸோஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் மெதுவாக எழுப்புங்கள்.
- சுவாசத்தை வெளிவிடும்போது, 'ஹம்' என்ற ஒலியை மனத்திற்குள் எழுப்புங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
3. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே சூன்யகரும்பக:,
ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- அவ்வாறு சுவாசத்தை வெளியே நிறுத்தும்போது,உச்சந்தலையில் நிலா இருப்பதாகவும், அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
4. வஜ்ராஸனத்தில் இருந்தபடியே போரோலிகாகும்பக:,
ஜோகப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 477-481
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- 'ம்ம்ம்' என்ற ரீங்கார ஒலியுடன் சுவாசத்தை முழுமையாக நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- கைகளைப் பயன்படுத்தி நாசிகளை மூடாமல், மனத்தாலேயே எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- ரீங்கார ஒலியில்லாமல் சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள். 6. சிறிது நேரம் அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.