KAILASA Library/வாழும் அவதார புருஷர்/உயர் இரத்த அழுத்தத்தைத் தீர்ப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

உயர் இரத்த அழுத்தத்தைத் தீர்ப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure for Hypertension

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 2, 2011

செய்முறைப் படிகள்

1. நாடீ சோ'தனா
2. பவன முக்தாஸனம்
3. ப்ராமரீகும்பக:
4. யோக நித்ரா

1. நாடீ சோ'தனா,

ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 11-13

அத நாடீ சோ'தனா

பத்த-பத்மாஸனா யோகீ ப்ராணம் சந்த்ரேண பூரயேத் /
தாரயித்வா யதாச'க்தி பூய: ஸூர்யேண ரேசயேத் // 4.11

யேன த்யஜேத்-தேன பீத்வ தாரயேத்திரோதத: /
ரேசயேச்ச ததோSந்யேன ச'னைரெவ ந வேகத: // 4.13

மொழிபெயர்ப்பு

பத்த பத்மாசனத்தில் அமர்ந்து, இடது நாசித்து வாரம் வழியாகச் சுவாசித்து, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தைள்ளேயே நிறுத்துங்கள். பிறகு வலது நாசித் துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.11)

எந்த நாசி வழியாக இப்போது சுவாசத்தை வெளியேற்றினீர்களோ, அதே நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மற்றொரு நாசி வழியாக மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும். (4.13)

பத்த பத்மாஸனம்

பத்த பத்மாஸனம்

ஸித்தாஸனம்

ஸித்தாஸனம்

பத்மாஸனம்

பத்மாஸனம்

செய்நுட்பம்

  1. பத்த பத்மாஸனம் அல்லது பத்மாஸனம் அல்லது சித்தாஸனத்தில் அமரவும்.
  1. இடது நாசித்துவாரம் வழியாக மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. வலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. சுவாசத்தை வெளியேற்றிய அதே வலது நாசித்துவாரம் வழியாகச் சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை சுவாசத்தால் நிரப்பவும். உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. இடது நாசித் துவாரத்தால் மெதுவாகச் சுவாசத்தை வெளியேற்றவும்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

2. பவனமுக்தாஸனம், யோகாஸனம், மூன்றாம் அத்யாயம், ஸ்லோகங்கள் 4-5

அத பவனமுக்தாஸனம்

த்வயோர்ஸ்து பாதயோ: பார்ஷ்ணி லாத்வாஸ்வஸ்வநிதம்பகே /
ஜானுனீ வக்ஷஸி ஸாதுர்பத்னாதி கரபந்தனை: // 3.4

ஏவம்-வித-ஸ்திதிர்யத்ர தத்ர வாயுமுக்தாஸனம் /
புவேதனேன வசா'சு'த்திர்மலஸ்தவாயோர்மோசனம் // 3.5

மொழிபெயர்ப்பு

இரண்டு குதிங்கால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து அமர்ந்து, இரு கைகளையும் கோர்த்து முழங்கால்களை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.(3.4)

இந்த ஆசனம் பவன (வாயு) முக்தாஸனமாகும். இந்த ஆசனத்தைச் செய்வதால், பெருங்குடல் காற்று வெளியேற்றப்பட்டு அடிவயிறு தூய்மையடைகிறது (3.5)

பவனமுக்தாஸனம்

பவனமுக்தாஸனம்

செய்நுட்பம்

1. தரையில் அமரவும்.

  1. முழங்கால்களை மடக்கி, இரண்டு குதிகால்களையும், பிறப்புறுப்பிற்கும் ஆசனவாயிற்கும் (Perennial region) இடைப்பட்ட பகுதியில் வைக்கவும்.
  1. கைகளால் முழங்கால்களைக் கட்டவும்.
  1. முழங்கால்களை மார்பின் மீது அழுத்தவும்.
  1. முதுகு நேராக இருக்கட்டும்.
  1. இந்த நிலையில் 30 நொடிகள் நீடிக்கவும்.

3. பவன முக்தாஸனத்தில் இருந்தபடியே

ப்ரமரீகும்பக:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82

அத ப்ரமரீகும்பக:

அர்த-ராத்ரே கதீ யோகீ ஜந்துனாம் ச’ப்த-வர்ஜிதே /
கர்ணௌ பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78

ச்ரு’ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு’பம் /
ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ’நாதம் தத: பரம் // 5.79

மேக_ஜர்ஜர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
துரீ-பேரீ-ம்ரு’தங்காதிநிநாதாக-துந்துபி:// 5.80

ஏவம் நாநாவிதோ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் /
அனாஹதஸ்ய ச’ப்தஸ்ய தஸ்ய ச’ப்தஸ்ய யோ த்வனி: // 5.81

த்வனேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: /
தன்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் /
ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82

மொழிபெயர்ப்பு

ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத பின்னிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும். (5.78)

பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஓசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஓசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஓசை போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், ஊதுகொம்பின் ஓசை போன்றும்பறை ஓசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஓசை மற்றும் துந்துபி ஓசை போன்றும் கேட்கிறார். (5.79-80) ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓசையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஓசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81)

மனம் கரைந்துவிடும்போது. அது விஷ்ணுவின் பரமபத்ததை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
  1. இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.

இந்தக் கும்பகத்தைச் செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.

4. யோக நித்ரா,

யோக தாராவளி, ஸ்லோகங்கள் 25-26

அத யோக நித்ரா:

விச்சின்ன-ஸங்கல்ப-விகல்ப-மூலே நிச்'சே'ஷ-நிர்மூலித-கர்ம-ஜாலே /
நிரந்தராப்யாஸ-நிதாந்த பத்ரா ஸாஜூம்பதே யோகீனி யோகநித்ரா // 25

விச்'ராந்திமாஸாத்ய துரீயதல்பே விச்'வாத்யகுவஸ்தூ-த்ரிதயோபரிஸ்தே /
ஸம்வின்மயீம் காமபி ஸர்வகாலம் நித்ராம் ஸகே நிர்விச' நிர்விகல்பாம் // 26

மொழிபெயர்ப்பு

எண்ணங்களின் மூலத்திலிருந்து விடுபடுவதற்கும் கர்ம வலையை நிர்மூலமாக்குவதற்கும் தொடர்ந்து பயிலும் யோகீயினால், மங்களகரமான யோக நித்திரை நிகழ்கிறது. (25)

ஓ நண்பனே, விழிப்புணர்வு என்னும் படுக்கையில் தளர்வாக இருந்துகொண்டு, மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்ட நிர்விகல்ப யோக நித்திரையில் வசி க்கும் நிலையானது தூய்மையான அறிவிற்கும் விழிப்புணர்விற்கும் உருவமாகத் திகழ்கிறது.(26)

யோக நித்ரா

யோக நித்ரா

செய்நுட்பம்

  1. மல்லாந்து படுத்துக் கொள்ளுங்கள்.
  1. உடனடியாக அன்-க்ளட்சிங் செய்யுங்கள். அன்-க்ளட்சிங் மற்றும் சோம்பல் தன்மையும் இணைந்த ஒருவித அரைத்தூக்கத்தில் இருக்கும் நிலையே இந்த யோக நித்ரா எனப்படும்.

(இதனை இரவு தூங்குவதற்கு முன்பு 21 நிமிடங்கள் செய்யுங்கள். இதைச் செய்வதன் மூலம் எளிதாகத் தூக்கத்தில் நுழைய முடியும்.

யோக நித்ராவைச் செய்து முடித்த பின் உணவு உட்கொண்டுவிட்டு, உறங்கச் செல்லவும்.)