KAILASA Library/வாழும் அவதார புருஷர்/உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care for Hypertension

நோய் பற்றிய விபரம்:

உயர் ரத்த அழுத்தம் என்பது நாட்பட்ட நோயின் நிலை. உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் சமயங்களில் தமனியில் ரத்தம் அழுத்தம் உயர்ந்து காணப்படும். அப்போது இதயம் தனது இயல்புக்கு அதிகமாக வேலை செய்து ரத்தத்தை ரத்த நாளங்களின் மூலம் சுற்றியனுப்ப வேண்டியுள்ளது. உயர் ரத்த அழுத்தம் என்பது 140/90 mmHg என்ற அளவில் இருப்பதே நல்லது.

இரத்தக் குழாய்களில், உயர் இரத்த அழுத்த நோய் இதற்கு மேல் தொடர்ந்து காணப்பட்டால் பக்கவாதம், மாரடைப்பு (Heart attacks, Stroke) இருதய செயலிழப்பு (Heart Failure) வழக்கத்திற்கு மாறாக இரத்தக்குழாய்கள் விரிவடைதல் (Aneurysms of The arteries) மற்ற இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இது சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன.

இதற்கென்று எந்த அறிகுறிகளும் குறிப்பாகக் காணப்படுவதில்லை. வேறு ஏதாவது நோய்க்கு மருத்துவ சிகிச்சை எடுக்கச் செல்லும்போதுதோ அல்லது நம் உடலைப் பொதுவாக மருத்துவ பரிசோதனை (General Check-Up) செய்யச் சொல்லும்பொழுதுதான் இந்நோயைக் கண்டறிய முடிகின்றது. உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்குப் பெரும்பாலும், காலை நேரங்களில், பின் மண்டைப் பகுதியில் 'தலைவலி', தலை லேசானது போன்ற உணர்வு, தலைசுற்றல், காதிரைச்சல், மயங்கிவிழுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 1, 2011.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. சின் முத்ராவுடன் ம்ரு'தாஸனம்
  1. உட்டியான பந்தம்
  1. ஜாலந்தர பந்தம்
  1. முக்தாஸனம்
  1. பஸ்்தரிகாகும்பகம்
  1. ப்ராமரீகும்பகம்

1. சின் முத்ராவுடன் ம்ரு'தாஸனம், கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 19

அத ம்ரு'தாஸனம்

உத்தானம் ச'வவத் பூமௌ ச'யானம் து ச'வாஸனம் /
ச'வாஸனம் ச்'ரமஹரம் சித்தவிச்'ராந்திகாரணம் // 2.19

மொழிபெயர்ப்பு

தரையில் ஒரு சவத்தைப் போல படுத்திருப்பதுதான் ம்ருதாஸனம் (சவ நிலை) ஆகும். இந்த நிலையானது களைப்பைப் போக்கி, மன அமைதிக்கு வழிவகுக்கிறது.

சின் முத்ராவுடன் ம்ருதாஸனம்

சின் முத்ராவுடன் ம்ருதாஸனம்

செய்நுட்பம்

  1. தரையில் சமமாகப் படுத்துக் கொண்டு உள்ளங்கைகளை மேல் நோக்கியவாறு வைத்துக் கொள்ளவும். (விரிப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தலைக்கு தலையணை போன்ற எதுவும் பயன்படுத்த வேண்டாம்.)
  1. கைகளைச் சின் முத்திரையில் வைக்கவும்.(பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைக்கவும்.)
  1. இதே நிலையில் 30 வினாடிகள் உங்களைத் தளர்த்திக் கொண்டு நிலைகொள்ளவும்.

2. ம்ரு'தாஸனத்தில் இருந்தபடியே உட்டியான பந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 10

அத உட்டியான பந்த:

உதரே பச்'சிமம் தானம் நாபேரூர்த்வம் து காரயேத் /
உட்டானம் குருதே யஸ்மாதவிச்'ராந்தம் மஹாகை: /
உட்டியானம் த்வஸௌ பந்தோ ம்ரு'த்யு-மாதங்க-கேஸரீ // (3-10)

மொழிபெயர்ப்பு

தொப்புள் பகுதிக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதியை உள்ளிழுங்கள். இதன்மூலம், மேலான பறவை (சுவாசம்), தானாகவே மேல் நோக்கிச் (ஸுஷும்னா நாடியை) செலுத்தப்பட்டு, தொடர்ந்து அங்கேயே சுகமாக நிலைக்கிறது. ஒரு சிங்கம் யானையைக் கொல்வதுபோல் இந்த உட்டியான பந்தம் மரணத்தை வெல்கிறது.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் படுத்திருக்கவும். கண்கள் திறந்திருக்கட்டும்.
  1. சுவாசத்தை ஆழமாக உள்ளிழுங்கள். சுவாசத்தை முழுவதுமாக அதேசமயத்தில் மெதுவாக வெளியேற்றவும்.
  1. வெளியேற்றி முடித்தவுடன், சுவாசத்தை உள்ளே இழுக்காமல், தோள்களை உயர்த்தி, ஜாலந்தர பந்தத்தைக் கடைபிடிக்கவும்.(தொண்டையை இறுக்கிச் சுருக்கி, முகவாய்க்கட்டையை நெஞ்சின் மீது வைக்கவும்.)
  1. அதற்குப்பின் தொப்புள் பகுதிக்கு மேலும் கீழும் உள்ள வயிற்றுப் பகுதியைச் சமஅளவில் உள்ளிழுக்க வேண்டும். வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள், குறிப்பாகக் குடல்பகுதி உடலின் பின்பக்கத்தைத் தொடவேண்டும்.
  1. முடிந்தவரை சுவாசத்தை வெளியேேயே நிறுத்தி வைக்கவும்.
  1. இனி நிறுத்த முடியாது எனும் நிலை வரும்போது, வயிற்றுப் பகுதியை விடுவித்து, ஜாலந்தர பந்தத்தை விடுவித்து, சுவாசத்தை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
  1. அடுத்த சுற்றை ஆரம்பிக்கும் முன், ஓரிரு நிமிடங்களுக்கு இயல்பாகச் சுவாசி க்கவும்.
  1. பயிற்சியின் ஆரம்பத்தில் 3 சுற்றுக்களுடன் ஆரம்பிக்கவும். பிறகு மெது மெதுவாக 10 சுற்றுக்கள்வரை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

3. ம்ரு'தாஸனத்தில் இருந்தபடியே

ஜாலந்தரபந்த:, கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 3, ஸ்லோகம் 12

அथ ஜாலந்தரபந்த:

கண்ட_-ஸங்கோசனம் க்ரு'த்வா சிபுகம் ஹ்ரு'தயே ந்யஸேத் /
ஜாலந்தரே க்ரு'தே பந்தே ஷோடசா'தார-பந்தம் //3-12

மொழிபெயர்ப்பு

தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும். இது ஜாலந்தர பந்தம் என்றழைக்கப்படுகிறது. இந்த முத்ராவின் மூலம் 16 ஆதாரங்களையும் முடிவிட முடியும்.

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. தொண்டையை இறுக்கமாக வைத்துச் சுருக்கி, முகவாய்க்கட்டையை மார்பின் மேல் வைக்கவும்.
  1. மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தவும்.
  1. எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
  1. ஜாலந்தர பந்தத்தில் இருந்து விடுபட்டு, பிறகு சுவாசத்தை மெதுவாக வெளியேற்றி, தளர்வடையுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

4. முக்தாஸனம்,

_கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 11_

அத முக்தாஸனம்

பாாயுமூலே வாமகுல்பம் தக்ஷகுல்பம் ததோபரி /
ஸமகாய-சி'ரோ க்ரீவம் முக்தாஸனம் து ஸித்திம் // 11

மொழிபெயர்ப்பு

இடது குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து, இடது குதிகாலின்மேல் வலது குதிகாலை வைத்து, தலையையும் கழுத்தையும் உடலையும் நேராக வைத்து அமரும் இந்த ஆஸனம் முக்தாஸனம் என்றழைக்கப்படுகிறது.

இது (பூரணத்துவத்தை) ஸித்திகளை அளிக்கிறது.

செய்நுட்பம்

  1. கால்களை நீட்டி அமர்ந்து கொள்ளவும்.
  1. இடது குதிகாலை பிறப்புறுப்பின் தொடக்கத்தில் வைத்து, அதன்மேல் வலது குதிகாலை வைக்கவும்.
  1. தலையையும் கழுத்தையும் உடலையும் நேராக வைத்து அமரவும்.
முக்தாஸனம்

முக்தாஸனம்

5. முக்தாஸனத்தில் இருந்தபடியே ப॒ஸ்த்ரிகாகும்ப॒க:

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 75-77

அத ப॒ஸ்த்ரிகாகும்ப॒க:

ப॒ஸ்த்ரைவ லௌஹகாராணாம் யதா॒-க்ரமேண ஸம்ப்॒ரமேத் /
ததா வாயுப் ச நாஸாப்யாமுபாப்யாம் சாலயேச்சனை: // 5.75

ஏவம் விம்ச'திவாரம் ச க்ரு'த்வா குர்யாச்சகும்பகம் /
ததந்தே சாலயேத்-வாயும் பூர்வோக்தம் ச யதாவிதி // 5.76

த்ரிவாரம் ஸாதயேதேனம் ப॒ஸ்த்ரிகா-கும்ப॒கம் ஸுீதீ: /
ந ச ரோகோ ந ச க்லேச' ஆரோக்யம் ச தினே தினே // 5.77

மொழிபெயர்ப்பு

கொல்லனின் உலைக்களத்தில் இருக்கும் துருத்தி தொடர்ந்து விரிந்து சுருங்குவது போல், மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாகவும் சுவாசத்தை மெதுவாகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் உள்ளிழுத்து, நுரையீரலை விரிவடையச் செய்து, பிறகு சுவாசத்தை மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும். (5.75)

இவ்வாறு 20 முறை செய்யுங்கள். செய்து முடித்தவுடன் சுவாசத்தை உள்ளிழுத்து முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். பிறகு மேலே சொன்ன முறையில் சுவாசத்தை வெளியேற்றவும். (இது 1 சுற்று). இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யும் புத்திசாலி மனிதர் எந்த ஒரு நோயாலும் பாதிக்கப்பட மாட்டார். அவர் என்றென்றும் ஆரோக்கியமாகவே இருப்பார். (5.76-77)

செய்நுட்பம்

  1. தொடர்ந்து அதே ஆஸனத்தில் இருக்கவும்.
  1. நாசித் துவாரங்களின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். நுரையீரலைச் சுவாசத்தால் நிரப்பவும்.
  1. சுவாசத்தை நாசித் துவாரங்களின் வழியாக மெதுவாகவும் அழுத்தமாகவும் வெளியேற்றவும்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.
  1. 21 முறைகளுக்குப் பிறகு, சுவாசத்தை முழுமையாக உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை முடிந்தளவு உள்ளேயே நிறுத்துங்கள். உங்களால் இனி முடியாது எனும்போது மிகவேகமாக சுவாசத்தை மூக்கு வழியாக வெளியேற்றவும். (2லிருந்து 6வது எண்வரை சொல்லப்பட்டுள்ள செயல்முறை 1 சுற்று எனப்படுகிறது.)

7. இந்தச் சுற்றை மூன்றுமுறை செய்யுங்கள்.

6. முக்தாஸனத்தில் இருந்தபடியே ப்ராமரீகும்பக:,

கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள் 78-82

அத ப்ராமரீகும்பக:

அர்த-ராத்ரே கதே யோகீ ஜந்துனாம் ச'ப்த-வர்ஜிதே /
கர்ணௌ பிதாய ஹஸ்தாப்யாம் குர்யாத் பூரக-கும்பகம் // 5.78

ச்ரு'ணுயாத்-தக்ஷிணே கர்ணே நாதமந்தர்கதம் சு'பம் /
ப்ரதமம் ஜிஞ்ஜீநாதம் ச வம்சீ'நாதம் தத: பரம் // 5.79

மேக ஜர்ஜர-ப்ராமரீ கண்டாகாம்ஸ்யம் தத: பரம் /
துரீ-பேரீ-ம்ரு'தங்காகிநிநாதநக-துந்துபி:// 5.80

ஏவம் நாநாவிதொ நாதோ ஜாயதே நித்யமப்யஸாத் /
அனாஹதஸ்ய ச'ப்தஸ்ய தஸ்ய ச'ப்தஸ்ய யோ த்வனி: // 5.81

த்வனேரந்தர்கதம் ஜ்யோதிர்ஜ்யோதிரந்தர்கதம் மன: /
தந்மனோ விலயம் யாதி தத்-விஷ்ணோ: பரமம் பதம் /
ஏவம் ப்ராமரீஸம்ஸித்தி: ஸமாதி-ஸித்திமாப்னுயாத் // 5.82

மொழிபெயர்ப்பு

ஒரு யோகி, எந்தவொரு உயிரினத்தின் சப்தமும் இல்லாத நள்ளிரவு நேரத்தில், இந்தப் பூரகம் மற்றும் கும்பகத்தைக் கைகளால் காதினை மூடி செய்ய வேண்டும்.(5.78)

பிறகு அவர், தனது வலது காதில் பல உள் சப்தங்களைக் கேட்கிறார். முதலில் அது சில்வண்டின் ஓசை போன்றும், பிறகு யாழ் இசை போன்றும், பிறகு ஒரு இடியோசையைப் போன்றும், பிறகு மத்தளம் ஓசை போன்றும், பிறகு ஒரு பொன்வண்டின் ஓசை போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், பல உளிகள் சேர்ந்தொலிப்பது போன்றும், பிறகு மணி ஓசை போன்றும், ஊதுகொம்பின் ஓசை போன்றும், பறை ஓசை போன்றும், மிருதங்கம், இராணுவப் பறை ஓசை மற்றும் துந்துபி ஓசை போன்றும் கேட்கிறார். (5.79-80)

ப்ராமரீகும்பகத்தைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓசையை உணர்ந்து கொள்கிறார். இறுதியில், இருதயத்திலிருந்து எழும் அனாஹத த்வனியைக் கேட்கிறார். இந்த ஓசையிலிருந்து ஒரு அதிர்வும், அந்த அதிர்வில் ஓர் ஒளியும் தோன்றுகிறது. அந்த ஒளியில் மனம் கரைந்துவிட வேண்டும். (5.81) மனம் கரைந்துவிடும்போது. அது விஷ்ணுவின் பரமபதத்தை அடைகிறது. இந்த ப்ராமரீ கும்பகத்தைப் பயிற்சி செய்வதில் வெற்றி பெறும் ஒருவர், ஸமாதி நிலையை அடைவதிலும் வெற்றி பெறுகிறார். (5.82)

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமர்ந்து, கைகளால் காதினை மூடி, ‘ம்’ என்று ஒலியை அழுத்தமாகவும் ஆழமாகவும் சப்தமாகவும் எழுப்பவும்.
  1. இதனை ஏழுநிமிடங்கள் செய்யுங்கள்.

இந்தக் கும்பகத்தை செய்து முடித்த 10-15 நிமிடங்களுக்குள் ஏதாவது உணவை உட்கொண்டுவிட வேண்டும்.