பரமஹம்ச நித்யானந்தர் ஒரு அறிமுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பரமஹம்ச நித்யானந்தர் தமிழ்நாட்டின் ஆன்மீக நகராம் திருவண்ணாமலையில் ஜனவரி 1, 1978ஆம் ஆண்டில் பிறந்தார். பாலவயதில் பக்திமார்க்கத்தையும், சிறுவயதில் யோகமார்க்கத்தையும், தந்த்ரமார்க்கத்தையும் நுணுக்கங்களோடு கற்றுத் தேர்ந்தார்.
பனிரெண்டாம் வயதில், பவளக் குன்றில் 'உடல் தாண்டி அனுபவம்' எனும் பேரானந்த நிலையை முதல் ஆன்மீக அனுபவமாக அடைந்தார். தன்னுடைய பதினேழாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி பரிவராஜக வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
இரண்டாயிரம் மைல்களுக்கு மேல் பாதயாத்திரையாக சென்று இந்தியாவின் எல்லா ஆன்மீக நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகள் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்தார்.
திபெத் வரை சென்ற பரமஹம்ஸர், பின் இமயமலையில் பல கடுமையான தவங்களில் ஈடுபட்டார். இவற்றைத் தாண்டி...
ஞான அனுபூதி எனும் பேரானந்தநிலையை ஜனவரி 1, 2000ம் ஆண்டில் அடைந்தார் நம் பரமஹம்ஸர்.
தன்னுள் நிகழ்ந்துக் கொண்டேயிருக்கும் நித்திய ஆனந்தம் எல்லா மனிதர்களுக்குள்ளும் நிகழ வேண்டும்; மக்களின் வேதனைகள் மகிழ்ச்சியால் துடைக்கப்பட வேண்டும்; ஆரோக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரமஹம்ஸரின் சத்ய சங்கல்பங்களால் தியானபீடம் எனும் சேவை நிறுவனத்தை ஜனவரி 1, 2000ம் ஆண்டில் தோற்றுவித்தார்.
நடைமுறை வாழ்வியல் பிரச்சனைகளுக்கு பரமஹம்ஸர் தரும் நேரடி வாழ்வியல் தீர்வுகள்; நோய்களைக் குணமாக்கும் சக்தியை உடலுக்குள் பாய்ச்சும் எளிய தியானங்கள்; துக்கத்தைத் துடைக்கும் ஆன்மீக சூத்திரங்கள் ஆகியவற்றால் மனிதர்களுக்குள் நிகழும் மாற்றங்கள் மகத்தானவை. மகிழ்ச்சியானவை. துரிதமானவை.
நிற்க நேரமில்லாமல் ஓடும் மனிதனுக்குக் கூட தியானங்களை அந்தந்த மனிதர்களின் மனப்பக்குவத்திற்கேற்றபடி வகுத்தளிக்கும் பரமஹம்ஸரின் அணுகுமுறையால் ஆறுதல் பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனந்தமடைந்தவர்களின் எண்ணிக்கைப் பெருக்கால், மூன்றே வருடத்திற்குள் 800 கிளைகளோடு 21 நாடுகளில் ஐந்து கண்டங்களிலும் தியானபீடம் பரந்து விரிந்து கிளை விட்டிருக்கிறது.
தியானபீடம் மூலமாக தியானத்தையும், ஆனந்தத்தையும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் மகத்தான சேவையை பரமஹம்ஸர் செய்து வருகிறார்.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் தியான சொற்பொழிவு முடிவில் கல்லூரிப் பெண் ஒருவர் தியானபீடத்தின் அசாத்திய வளர்ச்சியைப் பார்த்து, பொறாமையோடு ஒரு துடுக்கான கேள்வியைக் கேட்டார், "நீங்கள் என்ன சுப்ரீம் ஆன்மீக வியாபாரியோ?!"
துடுக்கு கேள்விக்கு சட்டென பரமஹம்ஸர் சொன்ன பதில், "ஆம். நான் வியாபாரிதான். என் வியாபாரம் எல்லா வியாபாரத்தை விடவும் உயர்ந்ததுதான்.
காரணம், நான் விற்கும் பொருள்
இந்த உலகில் கிடைக்காதது. அது
ஆனந்தம்.
அதற்காக நான் உங்களிடமிருந்து
பெறும் கூலியும் இந்த உலகில்
யாராலும் வாங்கிக் கொள்ள முடியாதது.
அது உங்களின் வேதனைகள்".
பரமஹம்ஸர் நாம் வாழும் காலத்தில் பிறப்பெடுத்தது நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். ஆயிரம் வருடமாக பூட்டப்பட்ட அறையின் இருளைக் கூட அரை நொடிக்குள் துடைத்தெறிந்துவிடும்... அப்போதுதான் புதிதாய் வந்த தீப ஒளி!
ஞானகுருவின் ஞானக்கருத்துக்களும், தியான முறைகளும் வழிதெரியாமல் தவிக்கும் மனிதனின் அறியாமை என்னும் இருளையும், சோம்பல் என்னும் இருளையும் போக்கிடும் சக்தி பெற்றவை.
புத்திசாலி மக்கள் வாழும் ஞானியைத் தவற விட மாட்டார்கள்.
அப்படித் தவற விடுபவர்கள் புத்திசாலியாக இருக்க முடியாது.
பரமஹம்ஸரால் உருவாக்கப்பட்ட தியானபீடம் ஒரு குணமளிக்கும் சக்தி சூழல்.
குணமளிக்கும் சக்தி சூழல்
பலருக்கும் இந்த ஆன்மீக உண்மை தெரியாமல் இருப்பது சற்றே சங்கடத்திற்கு உரியது.
இந்திய நாட்டு ரிஷிகள், ஞானிகளைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருப்பதற்கு காரணம் - ரிஷிகள், ஞானிகள் மூலம் வெளியிடப்படும் ஆனந்த சக்திதான்.
ஆனந்த சக்திக்கு இதமளிக்கும் பக்குவம் உண்டு. அந்த சக்திக்கு குணமளிக்கும் பக்குவம் உண்டு.
எப்படி ஒரு காந்தத்தைச் சுற்றி காந்த சக்தி, காந்த புலமாக இருந்து கொண்டு அதைச் சுற்றி வரும் இரும்பில் காந்த சக்தியை பாய்ச்சி ஈர்க்கிறதோ - அதேபோல், ஞானிகளை சுற்றி இருக்கும் ஆனந்த சக்தியால் உருவாக்கப் படும் ஆனந்த சக்தி தான் மக்களை ஈர்க்கிறது. மக்களை குணப்படுத்துகிறது. மக்களை சந்தோஷத்திற்குள்ளாக்குகிறது.
சரணாகதி நிகழாதவரை
மனிதன் கடவுளைத் தேடி
அலைவான்.
சரணாகதி நிகழ்ந்தகணமே
மனிதனைத் தேடி
கடவுள்
ஓடி வருவார்.
எப்படி மின்சாரத்தால் ஒரு தேனிரும்பு துண்டில் காந்த சக்தியை உருவாக்கி காப்பாற்றி வைக்க முடியுமோ - அதேபோல் ஒரு ஞானியால் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை, பொருளை சக்தியூட்ட முடியும். இதற்கு பிராண பிரதிஷ்டை செய்தல் என்று பெயர்! சாதாரண நிலப்பகுதியில் குறிப்பிட்ட தூரம் ஆனந்த சக்தியை தொடர்ந்து இருக்கச் செய்ய ஒரு ஞானியால் முடியும். இது மிகவும் சூட்சுமமான உண்மை.
அப்படி சக்தியூட்டப்பட்ட ஒரு நிலப்பகுதி தான் தியானபீடம் இருக்கும் நித்யானந்தபுரி. இந்த நிலம் ஆனந்த சக்தி நிறைந்தது.
இப்படி சக்தியூட்டப்பட்ட ஒரு நிலப்பரப்பில் ஒரு சில நாட்கள் தங்கியிருப்பது, ஒரு ஞானியின் அருகிலிருப்பதற்கு சமம். 24 மணி நேரமும் நாம் சக்தி ஒட்டத்தின் நடுவே தங்கியிருப்பது, நம் அறிவை தாண்டி நம் உடலுக்குள் ஆழ்ந்து வேலை செய்யும்.
பரமஹம்சரால் பயிற்றுவிக்கப்பட்ட தியான சிகிச்சையாளர்களின், தியான சிகிச்சையின் போது இதே சக்தியோட்டத்தை நீங்கள் பெற முடியும்.