KAILASA Library/தியானம்/முன்னுரைSign in
தியானம்

முன்னுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

குமுதம் வார இதழின் 26-10-2005 தீபாவளி சிறப்பு மலரின் 'மனதைத் திற... மகிழ்ச்சி பொங்கட்டும்!' தொடருக்காக கேட்கப்பட்ட சுவையான கேள்விகளும்... ஞான பதில்களும், இதோ உங்களுக்காக...

✪ காதல் தோல்வியால் துறவியானீர்களா?
இல்லை, காதலில் ஜெயித்ததால்.

✪ யாரைக் காதலித்தீர்கள்?
என்னுள்ளிருக்கும் என்னை.

✪ உண்மைக் காதல் என்றால்?
பாசம், காமம், காதல், அன்பு, நட்பு இவையெல்லாவற்றையும் கடந்ததுமான விழிப்புணர்வே 'உண்மைக் காதல்'. அது உங்களுக்கும், உங்களுக்குமான ஊடுறுவல்!

✪ கடவுளை நிரூபிக்க என்ன ஆதாரம்?
கடவுளை நிரூபிக்க முடியாது என்பதே, கடவுள் இருப்பதற்கான ஆதாரம். சிறு உபகரணங்களால் நிரூபிக்கப்படும் அளவுக்குச் சிறியவர் அல்ல கடவுள்.

✪ பக்தி?
அது ஒரு முக்தி வழிச் சாலை.

✪ ஆத்திகவாதி என்பவர் பற்றி...
'கடவுள் உண்டு' என்ற வார்த்தையை உதிர்த்ததால் அவர் ஆத்திகவாதியாகிவிட முடியாது.

✪ நாத்திகவாதி பற்றி...
கடவுள் உண்டு என நம்புவது எளிது. கடவுள் இல்லை என நம்புவதற்கு இன்னும் கொஞ்சம் போராட வேண்டும். அவரது கொள்கை மேல் அளவுகடந்த பக்தி கொண்டவரே நாத்திகவாதி.

✪ 'பக்தி!' நாத்திகத்தில்... எப்படி ஒத்துவரும்?
பக்தி முக்கியம். பக்தி செய்யப்படும் பொருளை விட 'பக்தியுணர்வு' முக்கியமானது. பக்தியுணர்வு ஒரு மாபெரும் தியானம்.

✪ ஆன்மீகம்...?
ஆத்திகத்தின் உச்சமும், நாத்திகத்தின் உச்சமும் மோதிக் கொள்ளும் நாற்சந்தியே ஆன்மீகம். கடவுள் உண்டு, இல்லை என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டதே ஆன்மீகம்.

✪ தியானம் ஆரோக்கியமான தூக்கத்தைத் தருமா?
தரும். நீருக்குள் விரலை விட்டு எவ்வளவு சுலபமாய் வெளியே எடுக்க முடிகிறதோ; அவ்வளவு சுலபமாக தியானம் செய்பவரால் தன்னுள் நுழைந்து, தூங்கி எளிதாய் வெளிவர முடியும்.

✪ எந்த குருவிடம் போகக் கூடாது?
'மற்ற குருமார்களிடம் போகாதீர்கள்' என்று சொல்லும் குருமார்களிடம்.

✪ மற்ற ஆன்மீக கூட்டங்களுக்குச் செல்லலாமா?
நிச்சயமாக!

✪ தியானம்?
ஞானத்தின் திறவுகோல்.

✪ ஞானம்?
தெய்வ மாளிகை.

✪ தெய்வம்?
சந்தேகமே வேண்டாம், நீங்களேதான்.

✪ யார் தியானம் செய்யக் கூடாது?
சிரிக்கும் குழந்தை. ஆனந்தமாயிருக்கும் ஞானி.

கடவுளைப் பற்றி...

✪ யார் தியானம் செய்ய வேண்டும்? மற்ற எல்லோரும்.

✪ எப்போது தியானம் செய்யக் கூடாது? தியானம் என்பது அருமருந்து. நீங்கள் ஏற்கனவே முழு ஆரோக்கியமானவராகவும் ஆனந்தம் நிறைந்தவராகவும் இருந்தால்... மருந்து தேவையில்லை.

✪ சரியான தியானம் எது? வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் தியானம்.

✪ அந்த 3 நாட்களில் பெண்கள் தியானம் போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடலாமா? உடலும், மனமும் சோர்ந்திருக்கும் அந்தக் காலங்களில்தான்

  • சக்தியூட்டும் தியானம் வேண்டும்.

✪ சிரிப்பு, தியானம் மருந்தாமே? அது ஒரு ஞான வெளிப்பாடு.

✪ தியானத்தின் அடிப்படை குணம்? அகங்காரத்தை அழிக்கும்.

✪ எது சிறந்த தியானம்?
நிதானம். இதை தானம் அளியுங்கள்.
இதைப் பெறுவோரும், கொடுப்போரும்
புண்ணியவான்கள்.

✪ இன்றைய ஆன்மீகத்தை நம்பலாமா?
“நம்பாதீர்கள்”. தியானத்தை ஏற்றுக்
கொள்ளுங்கள். அது ஒன்றே போதும்.

✪ எது ஆத்மா? இந்தக் கேள்வியைக் கேட்கக் காரணமாயிருப்பது.

✪ எது தர்மம்? உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆனந்தமளிக்கும் எல்லாச் செயல்களும் தர்மங்கள்.

✪ எது அதர்மம்? உங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பமளிக்கும் எல்லாச் செயல்களும் அதர்மங்களே.

✪ பதவியின் நோக்கம்? உதவி செய்வது.

✪ சொர்க்கம் எங்கே இருக்கிறது? சொர்க்கமும், நரகமும் புவியியல் ரீதியானதல்ல. அவை மனோரீதியானவை. சொர்க்கம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

  • இவ்வளவு அழகாகவும், சுவையாகவும், எளிமையாகவும், ஆனந்த வாழ்வு கலைப் பற்றிய தியானத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பரமஹம்ஸரைப் பற்றிய சுருக்கத் தொகுப்பே ‘தியானம்’ எனும் இப்புத்தகம்.
Illustration
வெளியீடு: நித்யானந்தா பதிப்பகம் நித்யானந்தபுரி, மைசூர் ரோடு, பிடதி - 562109. பெங்களூர், கர்நாடகா, இந்தியா.
அட்டை வடிவமைப்பு: தியானபீடம்
முதல் பதிப்பு: 2005
பக்கம்: 18
விலை: ரூ. 5.00

இப்படிக்கு
நித்யானந்தத்தில்
ஆனந்த சேவக்.