அவமானம் எனும் நாடகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
✪ ‘அவமானம்’ என்பது நம் அந்தஸ்து, வயது, குலம், கோத்திரம் பொருத்து நம் மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய கண்டுபிடிப்பு.
✪ பொதுவாக அந்தஸ்து, வயது, பதவி நம்மை விட அதிகமாக இருப்பவர்கள் சற்று மரியாதைக் குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - ‘உரிமை’ (ஆஹா! எவ்வளவு உரிமை எடுத்துக்கிறாங்க! எல்லாம் பாசம்!)
✪ மாறாக, அந்தஸ்து, வயது, பதவி நம்மைவிட குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாக பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - ‘அவமானம்’ (கொஞ்சம் இடம் கொடுத்தா என்மேல எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம்!)
✪ அவமானம் நிஜமா? கற்பனையா? பதில் - உங்களின் மனநிலையைப் பொருத்தது.
✪ நிஜத்தில் அவமானம் - மனதின் ஒரு மாயத் தோற்றம்தான்.
✪ பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்:
முதல்வகை : மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும் திரும்ப; திரும்ப அதே மனிதர்களிடம் சென்று மூக்கு உடைபடுவார்கள் முதல் வகை.
அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி யோசிக்க கூட மாட்டார்கள்.
மந்த மனம் படைத்தவர்கள்.
இரண்டாவது வகை : இவர்கள் தொட்டதற்கெல்லாம் கோபித்துக் கொள்வார்கள். புதிது, புதிதாக கண்டுபிடித்து “நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய்”, “என் மதிப்பென்ன...” என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.
அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள்!
மூன்றாவது வகை : அற்புதப் பிறவிகள். பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தவர்கள். நம் Egoவிற்கு விழும் அடியைத்தான் நாம் அவமானம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்து தாண்டியவர்கள். Egoவை தொலைத்தவர்கள்.
அப்படியே மனிதர்கள் அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.
✪ தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது. அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள் உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது.
✪ எதனாலும் பாதிக்கப்படாமலிருக்கும் உணர்வுப் பக்குவத்தை பெற்ற இவர்களுக்கு அவமானம் என்ற ஒன்று ஏற்படாது. ஆனந்த மனிதர்கள்.
அவமானத்தை மூன்று விதமாக அணுகலாம்:
- அவமானத்தை அலட்சியப்படுத்துவது.
- அவமானத்தை எதிர்கொள்வது.
- அவமானம் என்னும் மாயையை தாண்டிச் செல்வது.
மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள் புத்திசாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.
✪ அவமானத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதை அலட்சியப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!
✪ அவமானத்தை அலட்சியப்படுத்துபவர்கள் அதை தாங்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
✪ அவமானத்தைத் தாங்கத் தெரிந்தவர்கள் அதைத் தாண்டக் கற்றுக் கொள்ளுங்கள்!
| தியானபீடத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் | | --- | | ✪ நித்யானந்தர் ஓர் அறிமுகம் | | ✪ பாத பூஜையின் மகத்துவம் | | ✪ யந்திர தியானம் | | ✪ கதவைத் திற... காற்று வரட்டும்! - (பாகம் 1) | | ✪ பரமஹம்சரின் ஞானமொழிகள் | | ✪ தியானம் உங்களுக்காக | | ✪ மனம் கடந்த நிலை | | ✪ தியானம் ஞானத்தின் திறவுகோல் | | ✪ அமைதியின் முழக்கம் | | ✪ தியானம் ஒரு மருந்தாக! | | ✪ மகாமைத்ர தியானம் | | ✪ கதவைத் திற... காற்று வரட்டும்! - (பாகம் 2) | | ✪ தியானம் |