KAILASA Library/தியானம்/தியானபீட சேவைத் தொகுப்புSign in
தியானம்

தியானபீட சேவைத் தொகுப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

(W.W.W dhyanapeetam.org - தியானபீட இணைய தளத்திலிருந்து சில தகவல்கள்)

ASP என்று அழைக்கப்படும் ஆனந்த ஸ்புரணா தியான முகாம் உலகம் முழுவதிலும் 1000 முறைக்கு மேல் நடத்தப்பட்டுள்ளது.ATSP என்று அழைக்கப்படும் ஆத்ம ஸ்புரணா தியான முகாம் நடத்தப்பட்டிருக்கிறது.
இரண்டே நாளில் 15 தியானங்களை கற்றுத்தரும் ஆரோக்கிய ஸ்புரணா தியானமுகாம் நடத்தப்பட்டிருக்கிறது.NSP என்று அழைக்கப்படும் நித்யானந்த ஸ்புரணா தியானமுகாம் 80 முறை பரமஹம்சரால் நடத்தப்பட்டு, அவரவரின் ஆன்மீக பாதையை உணர்த்தும் புதுப்பெயர்கள் 10,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
60 தியான சத்சங்கங்கள் இதுவரை பரமஹம்சரால் நேரடியாக நடத்தப்பட்டு இருக்கிறது. 2,00,000 வரை பொதுமக்கள் இலவச தியான முகாமில் பங்கேற்றிருக்கிறார்கள்.SSP என்று அழைக்கப்படும் சக்தி ஸ்புரணா தியானமுகாம் 10 இடங்களில் நடத்தப்பட்டிருக்கிறது.
1,00,000 மக்கள் தியான சிகிச்சை மூலம் நேரடியாக பரமஹம்சரால் தொடப்பட்டிருக்கிறார்கள்.இதுவரை 3,00,000 மாணவ, மாணவியர் ஞான தான சேவை திட்டத்தின் மூலம் நேரடி பயனைப் பெற்றுள்ளார்கள்.

இதுவரை இரண்டு முறை
இமயமலையிலே பரமஹம்சர்
தொடர்ந்து 10 நாட்கள்
உபநிஷத்துக்களின்
சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

★ 2வது ஹிமாலய
யாத்திரையின் மொத்த
சொற்பொழிவுத்
தொகுப்பும்
‘நித்யோ உபநிஷத்’
எனும் புத்தகமாக வர
இருக்கிறது.

ஆஸ்ரமத்தில் பிரம்மச்சரிய
பயிற்சி அளிக்கப்பட்டு,
பிரம்மச்சாரிகள்
உருவாக்கப்படுகிறார்கள்.

தியான முகாம்களை
தொடர்ந்து நடத்த உதவியாக
1000க்கும் மேற்பட்ட ஆனந்த
சேவையாளர்கள் தியான
பீடத்தோடு இணைந்து
சமுதாய சேவை செய்து
கொண்டிருக்கிறார்கள்.

தமிழிலும்,
ஆங்கிலத்திலும்
200க்கும் மேற்பட்ட ஒலி,
ஒளிநாடாக்கள்
தியானபீடம் மூலமாக
வெளியிடப்பட்டிருக்கிறது.

100 ஆஸ்ரமவாசிகள்
பெங்களூர்
தியானபீடத்தில்
முழுநேர ஆன்மீக
சேவை செய்து
கொண்டிருக்கிறார்கள்.

தமிழிலும், ஆங்கிலத்திலும்
100க்கும் மேற்பட்ட புத்தகங்கள்
தியான பீடம் மூலமாக
வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆங்கிலம், தமிழ், கன்னடம்,
குஜராத்தி, தெலுங்கு,
போர்ச்சுகீஸ்,
பிரெஞ்ச் ஆகிய மொழிகளில்
இந்த புத்தகங்கள் கிடைக்கிறது.

தியான பீடத்தின் ஆன்மீக
புத்தகங்கள் மற்றும் ஒலி,
ஒளி நாடாக்களை
பொதுமக்களுக்கு சென்று
சேர்க்கும்
‘Divine Shop’
என்றழைக்கப்படும்
நடமாடும்
ஆன்மீக சேவை மையம்
தமிழகத்தின் பொது
விழாக்களுக்கும், ஆன்மீக
நிகழ்ச்சிகளுக்கும் சென்று
கொண்டிருக்கிறது.

சந்நியாசிகள்
ஆஸ்ரமத்தில் தொடர்ந்து
உருவாக்கப்படுகிறார்கள்.

100க்கும் மேற்பட்ட
ஆச்சாரியர்கள் பரமஹம்சரால்
பயிற்றுவிக்கப்
பட்டிருக்கிறார்கள்.
இவர்களின் மூலமாக
10,000க்கும் மேற்பட்ட
மக்கள்தியானபயிற்சியை
தியானமுகாம்களில்
பெற்றிருக்கிறார்கள்.

குமுதம் வார இதழில்
'மனதைத் திற... மகிழ்ச்சி
பொங்கட்டும்!' உற்சாகத்
தொடரும், மலேசியாவின்
வாணம்பாடி இதழில்
'உன்னைப் பார்... வாழ்வு
வளமாகும்' ஆன்மீகத்
தொடரும் தொடர்ந்து
வெளியிடப்பட்டுக்
கொண்டிருக்கிறது.

1000க்கும் மேற்பட்ட
தியான சிகிச்சை
அளிக்கும் யோகிகள்,
தியான சிகிச்சை
அளிக்கும் தீச்சை பெற்று
'இலவச ஆனந்த
தியான சேவை'யை
செய்து வருகிறார்கள்.
இவர்கள் மூலமாக
தினம் 10,000 பேர்
தியான சிகிச்சையை
உலகெங்கும்
பெறுகிறார்கள்.

'ஆனந்தம் ஆனந்தம்'
எனப்படும் ஆன்மீக மாத இதழ்
தொடர்ந்து வெளிவந்துக்
கொண்டிருக்கிறது.

சந்தா பதிவிற்கு
தொடர்பு கொள்ள
வேண்டிய முகவரி:
தியானபீடம் - கோவை கிளை
No. 36, டாட்டாபாத்,
9வது வீதி,
கோவை - 641 012.

ஜனவரி 1ஆம் தேதி தியானபீடத்தின் முப்பெரும் திருவிழா நாள். இது ஒவ்வொரு வருடமும் ஆஸ்ரமத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

★ 1978ஆம் ஆண்டு ஜனவரி-1ல் பரமஹம்சர் பிறந்தார். ★ 2000-ம் ஆண்டு ஜனவரி-1ல் பரமஹம்சர் ஞானமடைந்தார். ★ 2003ஆம் ஆண்டு தியானபீடம் என்னும் மாபெரும் தியான சேவை நிறுவனம் தொடங்கப்பட்டது.

பரமஹம்சரின் ஞான வெளிப்பாடுகள் மீது நடத்தப்பட்ட வியத்தகு ஆராய்ச்சி ‘மனம் கடந்த நிலை’ புத்தகத்திலிருந்து உங்களுக்காக சில வரிகள்...

Figure 1

1. சுவாமிகள் கூறியபடி அவர் மனம் தாண்டிய மனமில்லா பெரு நிலையில் இருப்பது ஆராய்ச்சியில் ஆதாரப்பூர்வமாக நிரூபனமாகி இருக்கிறது.

2. எல்லையற்ற உணர்வு நிலையை சுவாமி உணர்வது சோதனை மூலம் நிரூபனமாகி இருக்கின்றது.

Figure 2

3. சுவாமிஜி கூறியபடி அவருக்குள் பேரானந்த நிலை இருந்துகொண்டே இருக்கின்றது.

4. எண்ணங்களும், உணர்ச்சிகளும் சுவாமிஜியின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளன.

Figure 3

5. சுவாமிஜியின் ஆற்றலை முழுமையாக கணக்கிட முடியவில்லை. எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கூற வேண்டுமானால் - சாதாரண மனிதனை விட குறைந்தது 6 மடங்கு அதிக ஆற்றலையும் புத்திக் கூர்மையும் சுவாமிஜி பெற்றிருக்கின்றார்.

Figure 4

6. சுவாமிஜியின் உடற்கூற்றின் உள்ளே இருந்து மருத்துவ அறிவியலின் கணக்கிற்கு எட்டாத சக்தி (Energy) வெளிப்படுகிறது.

7. இதுவரை வெறும் கருத்துவடிவில் மாத்திரமே பிரச்சாரம் செய்யப்பட்ட .மூன்றாவது கண் . சம்மந்தப்பட்ட ஒரு ஒளி வெளிப்பாடு சுவாமிகளிடம் ஒளிர்வதை ஆதாரப் பூர்வமாக என்னால் பார்க்க முடிகிறது.

Figure 5

8. சுவாமிஜி தியான சிகிச்சை செய்யும் போது மருந்து மாத்திரைகள் வேலை செய்யும் வேகம் அதிகரிக்கின்றது. உடல், மன வியாதிகளிலிருந்து மீள உதவும் நோய் எதிர்ப்பு சக்தியும், மன அமைதியும் தியானசிகிச்சையால் நோயாளிக்கு கிடைக்கின்றன.

Figure 6

இடம்: விஸ்கான்ஸின்
பல்கலைக்கழகம்
ஒக்லஹாமா.

Figure 7

பரமஹம்சரின் ஞான வெளிப்பாடுகள் மீதான இரண்டாவது மருத்துவ ஆராய்ச்சி பற்றி www.dhyanapeetam.org இணையதளத்திலிருந்து...

மெய்சிலிர்க்க வைக்கும் மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்காக...

A doctor examining a patient

✪ உலகம் இதை நம்பப் போவதில்லை! (The world is not going to belive this!) காரணம் பரமஹம்சரிடமிருந்து வெளிப்படும் தியானசக்தி அற்புதமானது. ஆச்சரியமானது. ஆனந்தமானது.

Medical graphs or monitor displays

✪ மெய்ஞானமும் விஞ்ஞானமும் கைகோர்த்தது.

பரமஹம்சரின் தியான சக்தியின் மீது டாக்டர் கோலின்ஸ் ஆராய்ச்சி செய்து நிரூபித்து உறுதிபடச் சொன்னவை:

1. பரமஹம்சரிடமிருந்து தியான சக்தி கதிர் வீசுகிறது.

Doctor with patient and laptop equipment

2. நோயாளி டேவிட்டினுடைய மூளைக்குள், ஒரு நொடிக்குள் கோடிக்கணக்கான இணைப்பு களை தியானசக்தி உருவாக்குகிறது.

3. தியானசிகிச்சை முடிந்த பின்பும்கூட டேவிட்டினுடைய மூளைக்குள் உருவான புதிய இணைப்புகள் அப்படியே இருந்தன.

Hands pointing to medical screen/data

4. நோயாளியின் மூளை பரமஹம்சரின் மூளையைப் போலவே சுறுசுறுப்பானது எப்படியென பரமஹம்சரிடமே கேட்டபோது, "சாதாரண நிலையில்... பிரபஞ்ச சக்தி, நோயாளி, நான் எல்லாம் தனித் தனியாக இருப்போம். தியான சிகிச்சையில் எல்லாம் ஒன்றாகின்றன. அதனால்தான்..." எனச் சொன்னார்.

Medical examination scene

இடம்: செயிண்ட் லூயிஸ், U.S.A.
நோயாளி: திரு. டேவிட்.
மருத்துவ விஞ்ஞானி: டாக்டர் கோலின்ஸ்

மகாமந்திர தியானம் உங்களுக்காக...

மகாமந்திர தியானம்

மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம்.

ஆரம்ப காலத்தில் அதிகாலையில் இந்த தியானத்தை செய்வார்கள். இந்த தியானத்தின் தனிச்சிறப்பே எந்த நேரத்தில் வேண்டு மானாலும் செய்யலாம் என்பதே. இந்த தியானத்தைச் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

சாப்பிட்ட உடன் இந்த தியானத்தைச் செய்யக்கூடாது. தியானத்தைச் செய்தவுடன் சாப்பிடக்கூடாது.

தனியாகவும், பலரோடு சேர்ந்து கூட்டுத் தியானமாகவும் இந்தத் தியானத்தைச் செய்யலாம்.

தியானம் முடிந்து குறைந்தது 15 நிமிடங்களுக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஓய்விலிருங்கள். 30 நிமிடங்கள் நீடிக்கும் இந்த தியானம் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது.

முதல் பாகம் : 21 நிமிடங்கள்

முதுகெலும்பு, கழுத்து, தலை மூன்றும் நேர்கோட்டிலிருக்குமாறு, உங்களுக்கு வசதியாக இருக்கும் நிலையில் அமர்ந்து கொள்ளுங்கள்.

கண்கள் கூழாங்கல் ஆனது போல பாவித்து பார்வை முழுவதையும் உள்முகமாகத் திருப்புங்கள்.

★ 'ம்ம்ம்...' என்ற நாதத்தை அடிவயிற்றிலிருந்து உருவாக்குங்கள்.

★ 'ம்' என்ற நாதத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக...

★ உடல் வலி ★ மனக்குழப்பம் ★ சோர்வு ★ குணக்குறைகள் ஆகியவை அனைத்தும் மகாமந்திர தியானத்தை தொடர்ந்து செய்பவரிடமிருந்து பறந்தோடிவிடும்.

★ ‘ம்’ என்ற நாதத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக...

★ ‘ம்’ என்ற நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வாளவு சப்தமாக...

நாதத்தில் நீளம், ஆழம், சப்தம் ஆகிய மூன்றையும் முடிந்த அளவு சேர்த்து வெளியிடுங்கள்.

நாதத்தை உருவாக்குவதை தொடர்ந்து 21 நிமிடங்களுக்கு செய்யுங்கள். மகாமந்திர ஒலி நாடாவை பயன்படுத்திச் செய்தால், 21 நிமிடங்கள் சரியாகச் செய்ய முடியும்.

இரண்டாம் பாகம் : 10 நிமிடங்கள்

21 நிமிட மகாமந்திர உச்சாடனத்திற்கு பிறகு 10 நிமிடங்கள் சாட்சியாக மாத்திரம் அமர்ந்திருக்கவும்.

பிரார்த்தனையில் கடவுளிடம் யாசிக்கிறீர்கள்.

தியானத்தில் நீங்களே கடவுளாகிறீர்கள்

வெறுமனே எண்ணங்களையும், சுற்றியிருப்பவைகளையும் கவனியுங்கள். எதையும் தீர்மானிக்காதீர்கள்.

இந்த தியானம் ஒரு சக்தி கற்பகதரு. தொடர்ந்து இந்த தியானத்தைச் செய்ய, உடலில் சக்திப் பற்றாக்குறை என்பதே இருக்காது.

நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டிப் புத்துணர்வூட்டும் தனித்தன்மை பெற்றது இந்த மகாமந்திர தியானம்.

இன்றைய மனிதனின் தினசரி அதிக சக்தி தேவைக்கான ஒரு ‘சக்தி மருந்து’ என்று இந்த தியானத்தை அழைக்கலாம்.

தியானத்தின் முழுப்பலன் பெற தொடர்ந்து ஒரு மண்டலம் செய்யுங்கள். (இடைவெளியில்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்வதே ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது).

தியானத்தின் பலனை அறிந்து, என்றும் ஆனந்தமாக இருங்கள்!

PARAMAHAMSA SRI NITHYANANDA 'ஞானமொழிகள்' என்ற புத்தகத்திலிருந்து உங்களுக்காக சில வரிகள்...