KAILASA Library/தியானம்/தியானி கடைப்பிடிக்க வேண்டியவைSign in
தியானம்

தியானி கடைப்பிடிக்க வேண்டியவை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

✪ ஒரு நாளின் எல்லா நேரங்களும் தியானத்திற்கு உகந்தவையே. காலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை; மாலை 7 மணியிலிருந்து 7.30 மணி வரை. –தியானத்தில் ஈடுபட்டால் தியானத்தின் மூலம் ‘குருசக்தியோடு’ தொடர்பு கொண்டு அதிக பலனைப் பெறலாம்.

✪ தியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

✪ தியானம் முடித்தபின் அடுத்த அரை மணி நேரம் வரை எதுவும் சாப்பிட வேண்டாம். தியானம் செய்வதற்கு முன் குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.

✪ எந்தத் தியானமாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடுங்கள். உங்களின் முழு சக்தியையும், முழு உணர்வையும் பிரயோகித்து தியானத்தில் ஈடுபடுங்கள்.

✪ எல்லாத் தியானங்களிலும் கடைசி 10 நிமிடங்கள் சாட்சியாகப் பார்ப்பதைச் சிரத்தையோடு செய்யுங்கள். 30 நிமிட தியானத்தில் முதல் 20 நிமிடங்கள் நீங்கள் செய்வது, இந்த கடைசி 10 நிமிடங்களுக்காகத்தான்.

✪ ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து செய்து பார்த்தால் ஒருதியான முறையின் முழுப் பலனை உணர்ந்து கொள்ளலாம்.

✪ அதிக காரம், அதிக புளிப்பு, அதிக மசாலா, அதிக எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

✪ தியானத்தின் போது தளர்ந்த ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள்.

✪ தொந்தரவு இல்லாத தனி அறையில் தியானம் செய்வது நல்லது.

✪ புகை, புலால் தவிர்த்தல் நல்லது. முடியாவிட்டால் தப்பில்லை. தொடர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுங்கள். உடல் தானாகவே தன்னை இதுபோன்ற அடிமைத் தனங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும்.

✪ மது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

முக்கிய எச்சரிக்கை :

  • கடந்த சில மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை பெற்றவர்கள்.
  • அவசர சிகிச்சை பெற்ற நோயாளிகள் .
  • தீவிர இதய நோயாளிகள்.

– உங்களுக்கு அருகேயுள்ள தியானப்பீட கிளையை கலந்து ஆலோசித்த பின் தியானத்தில் ஈடுபடலாம்.

தியானி
என்றால்
சமஸ்கிருதத்தில்
தியானம் செய்பவர்
என்று பொருள்.

Figure 1

மேதகு குடியரசுத்தலைவர் கதவைத்திற... காற்றுவரட்டும்... முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

Figure 2

முன்னாள் பிரதமர் உயர்திரு. தேவகவுடா 2003 ஜெயந்தி திருவிழாவில்

Figure 3

USA-ன் ஒஹியோ மாநில கவர்னர் பரமஹம்ஸருக்கு அளித்த அரசாங்க மரியாதை

Figure 4

ASP, SSP, NSP, ATSP, ARSP, எனும் பல தியானமுகாம்களை பரமஹம்ஸர் நடத்துகிறார்கள்

Figure 5

அமெரிக்க தேவாலயம் ஒன்றில் பரமஹம்ஸர் தியான சத்சங்கத்தை நிகழ்த்துகிறார்.

Figure 6

லட்சக்கணக்கான மக்களுக்கு பரமஹம்ஸர் தியான சொற்பொழிவாற்றுகிறார்

மத, இன, கலாச்சார வேறுபாடுகள் இன்றி எல்லாதரப்பட்ட மக்களும் பரமஹம்ஸரின் தியானமுறைகளையும், ஞானக்கருத்துக்களையும் பெற்று பலன் அடைகிறார்கள்

Figure 7
Figure 8

பரமஹம்ஸர் தியான சிகிச்சை அளிக்கிறார்கள்

Figure 9

5 லட்சத்திற்கும் மேலான மாணவர்களுக்கு தியானம் கற்றுத்தரப்பட்டிருக்கிறது

அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் கனவு!
துரதிர்ஷ்டம் பயந்தாங்கொள்ளிகளின் பீதி !
சுறுசுறுப்பான தைரியசாலிக்கு இரண்டும் ஒன்றே
இரண்டின் மூலமும்
வாழ்வில் முதிர்ந்து கொண்டே இருப்பார்கள்
👉 நீங்கள் தைரியசாலி தானே?
- பரமஹம்ஸ நித்யானந்தர்

Figure 10

Dhyanapeetam

Nithyanandapuri, Kallugopahalli, Off. Mysore Road Bidadi - 562 109/ Bangalore District. Karnataka, India. ☎ 91-80-27288033, 56691844, Url : www.nithyananda.org email : [email protected] Ebook ISBN: 979-8-88572-352-7 விலை ரூ.5.00 ரூ.2.00