KAILASA Library/தியானம்/9. மகாமந்திர தியானம்Sign in
தியானம்

9. மகாமந்திர தியானம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மகாமந்திர தியானம் மிகப் பழமையான திபெத்திய தியானம்.

ஆரம்ப காலத்தில் அதிகாலையில் இந்த தியானத்தை செய்வார்கள். இந்த தியானத்தின் தனிச்சிறப்பே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே. இந்த தியானத்தைச் செய்யும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும்.

சாப்பிட்ட உடன் இந்த தியானத்தைச் செய்யக்கூடாது. தியானத்தைச் செய்தவுடன் சாப்பிடக்கூடாது.

தனியாகவும், பலரோடு சேர்ந்து கூட்டுத் தியானமாகவும் இந்தத் தியானத்தைச் செய்யலாம்.

தியானம் முடிந்து குறைந்தது 15 நிமிடங்களுக்கு எந்த வேலையும் செய்ய வேண்டாம். ஓய்விருங்கள். 30 நிமிடங்கள் நீடிக்கும் இந்த தியானம் இரண்டு பாகங்களைக்கொண்டுள்ளது.

முதல் பாகம் :

21 நிமிடங்கள் முதுகெலும்பு, கழுத்து, தலை மூன்றும் நேர் கோட்டிலிருக்குமாறு, உங்களுக்கு வசதியாக இருக்கும் நிலையில் அமர்ந்துகொள்ளுங்கள்.

கண்கள் கூழாங்கல் ஆனது போல பாவித்து பார்வை முழுவதையும் உள் முகமாகத் திருப்புங்கள்.

‘ம்ம்ம்..!’ என்ற நாதத்தை அடிவயிற்றிலிருந்து உருவாக்குங்கள்.

◆ ‘ம்’ என்ற நாதத்தை எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக...

◆ ‘ம்’ என்ற நாதத்தை எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக...

◆ ‘ம்’ என்ற நாதத்தை எவ்வளவு சப்தமாக முடியுமோ அவ்வளவு சப்தமாக...

நாதத்தில் நீளம், ஆழம், சப்தம் ஆகிய மூன்றையும் முடிந்த அளவு சேர்த்து வெளியிடுங்கள்.

நாதத்தை உருவாக்குவதை தொடர்ந்து 21 நிமிடங்களுக்கு செய்யுங்கள். மகாமந்திர ஒலி நாடாவைப் பயன்படுத்தி செய்தால், 21 நிமிடங்கள் சரியாகச் செய்ய முடியும்.