தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
21 நிமிட மகாமந்திர உச்சாடனத்திற்கு பிறகு 10 நிமிடங்கள் சாட்சியாக மாத்திரம் அமர்ந்திருக்கவும்.
வெறுமனே எண்ணங்களையும் சுற்றியிருப்பவைகளையும் கவனியுங்கள். எதையும் தீர்மானிக்காதீர்கள்.
இந்த தியானம் ஒரு சக்தி தரும் கற்பகத்தரு. தொடர்ந்து இந்த தியானத்தைச் செய்ய, உடலில் சக்திப் பற்றாக்குறை என்பதே இருக்காது.
நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தூண்டிப் புத்துணர்வூட்டும் தனித்தன்மை பெற்றது இந்த மகாமந்திர தியானம்.
இன்றைய மனிதனின் தினசரி அதிக சக்தி தேவைக்கான ஒரு ‘சக்தி மருந்து’ என்று இந்த தியானத்தை அழைக்கலாம்.
தியானத்தில் முழுப்பலன் பெற தொடர்ந்து ஒரு மண்டலம் செய்யுங்கள். (இடைவெளியில்லாமல் தொடர்ந்து 48 நாட்கள் செய்வதே ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது).
தியானத்தின் பலனை அறிந்து, என்றும் ஆனந்தமாக இருங்கள்!

வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகும்
இது பழமொழி அல்ல,
அற்புதமான தியான சூத்திரம்.
தொடர்ந்து இருபத்தொரு
நிமிடங்கள்
சிரிப்பதே ஒரு தியான முறை,
சொர்க்கத்தைப் பார்க்க
வேண்டுமா சிரி!
முழுமையாகச் சிரி!
- பரமஹம்ஸ நித்யானந்தர்
Ebook ISBN: 979-8-88572-354-1 Nithyananda Dhyanapeetam (Dhyanapeeta Charitable Trust) Nithyanandapuri, Kallugopahalli, Off. Mysore Road, Bidadi - 562 109. Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-27202801 / 27202084 Fax : +91-92430 48957 [email protected] www.nithyananda.org