KAILASA Library/தியானம்/6. ஆனந்தமயக் கோஷமும் - ஆனந்த தியான சிகிச்சையும்Sign in
தியானம்

6. ஆனந்தமயக் கோஷமும் - ஆனந்த தியான சிகிச்சையும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடுத்து, ஆனந்தமயக் கோஷம். வார்த்தையே
மிகவும் அழகாக இருக்கிறதல்லவா!
மற்ற எல்லாக் கோஷங்களும் தொக்கித் தொக்கி
நின்றன. ஆனந்தமயக் கோஷம் - இந்த
வார்த்தையை உச்சரிப்பதே ஒரு ஆனந்தம்.
இந்த அடுக்கே ஆனந்தம். அதைத் தொட்டு
விட்டாலே ஆனந்தம் தான்.

மனோநிலையை
நிர்ணயித்தல் என்பது
உறவினருடன் வரும்
பிரச்சினைக்கு மட்டுமல்ல,
படிப்பு விஷயத்திலும்
கூட படிப்பிற்கென்று
ஒரு குறிப்பிட்ட
மனோநிலையை
உருவாக்கி
வைத்திருக்கிறீர்கள்
என்னால் இவ்வளவு
நேரம்தான் படிக்கமுடியும்
இவ்வளவுதான் புரிந்துகொள்
முடியும்.

சிறுவர்களுக்கு, பூங்காவிற்குள் நுழைந்தாலே குஷி என்பது போல, அந்த அடுக்கில் காலடி எடுத்து வைத்தாலே ஆனந்தம் தான். முழுக்க முழுக்க ஆனந்தம்! இந்த ஆனந்தமயக் கோஷத்தில்தான் இந்த உலகம் உருவானதற்கான காரண சக்தி பொதிந்திருக்கிறது. அந்தக் காரண சக்தியால்தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அது இல்லையென்றால் நாம் இல்லை.

வெளியிலிருந்து ஐந்தாவது அடுக்கு இது.

மனிதனின் ஆனந்தப் பெட்டகம் இந்த ஆனந்தமயக் கோஷம்.

இந்த சக்திதான் நம்மை முழுக்க முழுக்க இயக்கிக்கொண்டு இருக்கிறது. இந்த ஆனந்தமயக் கோஷத்தில் இருந்து, சக்தியை நேரடியாக நாம் விரும்பும் அளவு விரும்பும்போதெல்லாம் எடுக்கிற திறமை மட்டும் நமக்கு வந்துவிட்டால், நம்முடைய 99.999 சதவீதப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். இனிமேல் பிரச்சினையே இல்லை என்ற ஒரு நிலைக்கு நாம் வந்துவிடலாம்.

இந்த ஆனந்தகந்தத்திலிருந்து, ஆனந்த சக்தியை எப்படி எடுத்து, நமது உடல் முழுவதும் அதை பரவச் செய்வது என்கிற சூட்சமம் மட்டும் தெரிந்து விட்டால் போதும்.

நானே சாட்சி :

நேற்று நான் தூங்கச் சென்ற நேரம் காலை 6 மணி இதை யாராலும் நம்ப முடியாது! சுத்தமான பொய் மாதிரி தோன்றும். இரவு 3 மணிக்குதான் பெங்களூரிலிருந்து இங்கே வந்து சேர்ந்தேன்.

தொடர்ந்து 12 கல்லூரிகளுக்கு சென்று உரையாற்ற வேண்டும். அதற்கான தலைப்புகள் மற்றும் ஏற்பாடுகள் பற்றி... அதன்பின் தினமும் பார்த்து, பதில் அளிக்கப்பட வேண்டிய E-mail, reply... கதவைத் திற... காற்றுவரட்டும் புத்தகத்தின் Proof reading ஆகியவற்றை முடித்துவிட்டுத் தூங்கும் போது காலை மணி 5.30.

7.30 மணிக்கு ‘சாப்பாடு தயார்’ என்று எழுப்பி விட்டார்கள். என் கண்களில் தெரிகிறதா அந்தத் தூக்கம்? கண்கள் எப்படி இருக்கின்றன பாருங்கள்! இவைதான் சாட்சி. ஆனந்தமயக் கோஷத்திலிருந்து சக்தி பொங்க ஆரம்பித்துவிட்டால் நம் உடலும், நம் உணர்வும் நம் கட்டுப்பாட்டிலிருக்கும்.

அந்த வேதத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்கள், இந்த புத்தகத்தில் இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது என்று எவ்வளவு நாள் கதை சொல்லிக் கொண்டே இருக்க முடியும்? வாழ்ந்து காட்ட வேண்டாமா! நான் வாழும் சாட்சி. ஆனந்தம் என்பதை அனுபவித்துக்கொண்டு இங்கே உட்கார்ந்து இருக்கிறேன்.

இல்லாவிட்டால், இருபத்தியேழு வயதே நிரம்பிய இளைஞனைச் சுற்றி ஓர் ஆன்மிக இயக்கம் உலகளவில் மிகக் குறைந்த காலத்தில் உருவாக்க முடியுமா?

ஆனந்த சக்திதான்
நம்மை முழுக்க முழுக்க
இயக்கிக்கொண்டு
இருக்கிறது. இந்த
ஆனந்தமயக் கோஷத்தில்
இருந்து. சக்தியை நேரடியாக
நான் விரும்பும் அளவு
விரும்பும்போதெல்லாம்
எடுக்கின்ற திறமை மட்டும்
நமக்கு வந்துவிட்டால்,
நம்முடைய 99.999
சதவீதப் பிரச்சி
னைகளுக்கு முற்றுப்புள்ளி
வைத்துவிடலாம். இனிமேல்
பிரச்சினையே இல்லை
என்று ஒரு நிலைக்கு நாம்
வந்துவிடலாம்.

எல்லாம் இறைசக்தியான ஆனந்த சக்தியின் அருள் எல்லாம் அந்த சக்தியின் விளையாட்டு.

இந்தத் தெளிவையும் நிதானத்தையும் கொடுக்கக் கூடியது, ஆனந்தச் சக்தி ஒன்றே! அந்த ஆனந்த சக்தியை பயன்படுத்தும் ஒரே ஒரு திறமை மட்டும் நமக்கு தெரிந்துவிட்டால் போதும், இந்த உலகமே சொர்க்கம்தான்.

எல்.கே.ஜி., யூ.கே.ஜி. (L.K.G, U.K.G) பயம் என்று ஒரு பயம் இருக்கிறது. ஆசிரியரைப் பார்த்ததுமே கையை எடுத்து பவ்யமாக வைத்துக்கொள்வது, பக்கத்தில் இருக்கிற குழந்தையினுடைய பொருளை எடுத்து வைத்துக்கொள்வது, அதற்காக சண்டை போடுவது இப்படி ஒரு நான்கைந்து பிரச்சினைகள்தான் இருக்கும். "அவன் அதை எடுத்துக்கிட்டான்!" "அவன் என்னை அடிச்சுட்டான், டீச்சர்!" "அவள் தரமாட்டேன்றா டீச்சர்" என்கிற இவைதான் அந்தக் குழந்தைக்கு உலகம். அதையெல்லாம் நாம் வாழ்ந்துவிட்டுத்தானே வந்திருக்கிறோம்! இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எப்படி இருக்கிறது? அது ஒரு நகைச்சுவையாக தோன்றுகிறது அல்லவா! அது பையத்தியக்காரத்தனமாக தோன்றவில்லையா? இதற்குப் போயா நாம் அடித்துக் கொண்டோம் என்று! அதற்கப்புறம், கொஞ்சம் பின்னால் வந்துப் பாருங்கள் ஒரு 5-வது, 6-வது, இப்போது ஒரு ஜியோமெட்ரிக் பெட்டிக்காக சண்டை போட்டிருப்போம். முதலில் பென்சிலுக்காக சண்டை போட்டிருப்போம்; இளம் வயதில் எதற்காக சண்டை போட்டிருப்போம்? நமக்குப் பிடித்த நண்பனோ, இன்னொரு தோழியோ மிகவும் நெருக்கமாக வேரொருவரிடம் பேசிவிட்டால், உடனே பொறுக்காது நமக்கு. இப்பொழுது இந்தப் பிரச்சினையைப் பேசினாலே நமக்கு சிரிப்பு வரும்.

இந்தப் தெளிவையும், நிதானத்தையும் கொடுக்கக் கூடியது, ஆனந்தகந்தச் சக்கரத்திலிருந்து வரும் ஆனந்த சக்தி ஒன்றே! அந்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தும் ஒரே ஒரு திறமை மட்டும் நமக்குத் தெரிந்துவிட்டால்போதும், இந்த உலகமே சொர்க்கம்தான்.

இப்பொழுது, இங்கே, பின்னால், வாழ்ந்து முடிந்த முதியவர்கள் கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் நான் உங்களிடம் கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டிருந்தால், அவர்கள் சிரித்திருப்பார்கள். அவர்களுக்கு வாலிப வயது பிரச்சினைகளெல்லாம் இன்று நகைச்சுவையாகத் தெரியும். ஏனென்றால் அவர்கள் உங்கள் நிலையைத் தாண்டிவிட்டார்கள். இவையெல்லாவற்றையும் தாண்டிய ஒரு நிலையிருக்கிறது. அதுதான் ஆனந்தகந்த அனுபவம்.

இந்த அனுபவம் மொத்த வாழ்வையே தாண்டிய அனுபவம். வாலிபத்தில் பாலபருவப் பிரச்சினைகள் வேடிக்கையாக தோன்றும். முதுமையில் வாலிபப் பருவப் பிரச்சினைகள் வேடிக்கையாகத் தெரிகிறது. ஞானம் அடைந்துவிட்டால் ஆனந்தகந்த அனுபவத்திலிருந்து உலகைப் பார்க்கும்போது எல்லாமே வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் தெரியும்.

இன்று இரவில், உங்களுக்கு பிடித்தமான ஒருவர் இறந்துவிடுகிறார். அவரைக் கொலை செய்துவிட்டார்கள். (இதப் படிக்கும் போதே, எவ்வளவு துயரமாக, கஷ்டமாக உணர்கிறீர்கள் பாருங்கள்!) அவர் இறந்து போய்விடுகிறார். இரவு முழுவதும் ஒரே அழுகையாக இருக்கிறது. காலையில் ஒரு உதை உதைத்து 'எழுந்திரி' என அம்மா எழுப்பி விடும்பொழுது, 'ஆ! இது கனவுதானா!' என நினைக்கும் போது, எவ்வளவு பெரிய நிம்மதி பிறக்கிறது உங்களுக்குள் இருந்து?! ஒரு நிம்மதி பிறக்கிறதா? இல்லையா? அந்தக் கனவிலிருந்து நினைவுக்கு வரும்போது எவ்வளவு பெரிய ஒரு நிம்மதி பிறக்கிறது! இதிலிரந்து ஒரு சிறிய வாழ்க்கைச் சூத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியும் - 'கனவு கலைந்தால் நிம்மதி'.

'இந்த முழு உலகமும் வெறும் கனவு' என ராமகிருஷ்ணர் சொல்கிறார். இதை எத்தனை பேரால் ஏற்றுக்கொள்ள இயலும்? இப்போது உலகில் உங்களைச் சுற்றி நடந்துகொண்டிருக்கிறவரை, நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். ஏனென்றால் இதுவரை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். அனுபவம் ஆகிற வரைதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமேயொழிய, அனுபவிக்காத விஷயங்களை நம்பித்தான் ஆக வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஏற்றுக்கொள்வதற்கான ஒரே வழி, அதை அனுபவித்துப் பார்த்து விடுவதுதான்.

ஆனந்தம் என்பது என்ன என்று, உள்ளுக்குள்ளே போய், அதை அனுபவித்துப் பார்ப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு. அதைவிட வேறு தீர்வே கிடையாது. எப்படி அனுபவிப்பது?

சக்திப் படகு

மிகவும் நன்றாகப பேசினீங்க சாமி! ஆனந்தமயக் கோஷம் வரை எங்களை வார்த்தைகளால் இழுத்து வந்து விட்டீர்கள்! எப்படி சாமி அங்கே போவது? என்ற கேள்வி மனதில் தோன்றும்.

பதில், ஆனந்தமயக் கோஷத்தை அடைய ஒரே வழி - சக்திப் பாலம் சக்திப் படகு என்று வைத்துக்கொள்வோம். இது ஒன்றேதான் வழி. இந்த சக்திதான் வழி. சக்தியால், ஆன ஏதோ ஒன்றினால் மாத்திரமே, ஆனந்தமயக் கோஷத்தை அடைய முடியும்.

நம்முடைய உணர்வும் விழிப்புணர்வும்தான் நம்மை ஆனந்தமயக் கோஷத்திற்கு அழைத்துச் செல்லும் சக்திப் படகுகள்.

ஒரு நோயாளியும் ஒரு மருத்துவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஒரு பிரச்சினை அல்லது நோய் சம்பந்தமாக ‘என்ன பிரச்சினை’ என்று மருத்துவருக்குத் தெரிகிறது. கண்டறிந்து விட்டார்! அது சரிசெய்யக் கூடியது எது என மருத்துவருக்குத் தெரிகிறது. நோயாளிக்கும் அந்த உண்மை தெரிகிறது - இது அன்னமயக் கோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

நோயாளிக்குப் பிரச்சினை தெரிகிறது; ஆனால் மருத்துவருக்குத் தெரியவில்லை. மருத்துவம் செய்கிறார்; ஆனால் பிரச்சினை தீராமல் அப்படியே இருக்கிறது - இது மனோமயக் கோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

மனோமயக் கோஷத்திலிருந்து, எதிர்மறை சக்தி அன்னமயக் கோஷத்தை பாதித்திருக்கிறது. ஆனால் மருத்துவத்தின்படி பிரச்சினையின் மூலக் காரணத்தை ஆராய்ந்தால் அது அன்னமயக்கோஷத்தில் இருக்காது. ஏனென்றால் இது உணர்வு சம்பந்தப்பட்டது, சூட்சமம் சம்பந்தப்பட்டது.

பிரச்சினை இருக்கிறது என நமக்குத் தெரிகிறது; ஆனால் 'Medically you are all right' பிரச்சினை இல்லையென்று மருத்துவர் கூறுவார். பிரச்சினை என்னவென்று இரண்டு பேருக்குமே தெரிந்தால், அது அன்னமயக் கோஷம் சம்பந்தப்பட்டது. பிரச்சினை நமக்குத் தெரிகிறது; மருத்துவருக்குத் தெரிய வில்லையென்றால் - அது மனோமயக்கோஷம் சம்பந்தப்பட்ட நோய்.

இதற்கடுத்து ஒன்று இருக்கிறது. அது ஜீன் சம்பந்தப்பட்ட விஷயம். அது சந்ததியாக வரக் கூடியது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது. இத்தகைய பிரச்சினை விஞ்ஞானமயக் கோஷம் சம்பந்தப்பட்டது.

தாய், தந்தை இருவருடைய உயிர் சக்தியின் வெளிப்பாடுதான் நாம். அந்த சக்தியினுடைய வெளிப்பாடுதான் நாம். இந்த ஜீன் என்பது, உடலுக்குத் தேவையான சக்தியை தொடர்ந்து தயாரித்துக் கொடுக்கக் கூடிய DNA-வின் உற்பத்தி மையங்கள்.

இதில் பிரச்சினை இருந்தால், நோயாளிக்கும் தெரியாது; மருத்துவருக்கும் தெரியாது. விஞ்ஞானியால் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால் இது விஞ்ஞானமயக் கோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

அடுத்தது ஆனந்தமயக் கோஷம். ஆனந்தமயக் கோஷத்திற்குள் போகும்போதுதான் ஞானமே பிறக்கும்.

விஞ்ஞானிகளால்கூட கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கான காரணம் ஒளிந்து கொண்டிருப்பது ஆனந்தமயக்கோஷத்தில். இதைதான் ‘கர்மா’ என்றழைக்கிறார்கள். ஆனந்தமயக் கோஷத்திலிருக்கும் நோய்களுக்கு தியானமும், ஆனந்தா Healing மட்டுமே சிறந்த தீர்வு தரமுடியும்.

மருத்துவத்தில் இடியோபதிக் (Idiopathic) என்கிற ஒரு வார்த்தை உண்டு. ஒரு நோய்க்கான காரணங்களைப் பட்டியலிட்டால், நோய்க்கான காரணிகள் : (1). ஜீன் சம்பந்தப்பட்டவை, (2). பாக்டீரியா சம்பந்தப்பட்டவை, (3). வைரஸ் சம்பந்தப்பட்டவை என நீளும். அதற்கடுத்து சிறியதாக ஒரு வரியில் இடியோபதிக் என்று வரும். இடியோபதிக் என்ற வார்த்தையைப் புரிந்துகொள்ள ஒரு சிறிய சம்பவம்.

> விஞ்ஞான
> மயக்கோஷத்தில்
> பிரச்சினை இருந்தால்,
> நோயாளிக்கும் தெரியாது;
> மருத்துவருக்கும்
> தெரியாது.
> விஞ்ஞானியால்
> மட்டும்தான்
> கண்டுபிடிக்க முடியும்.

நிட்டி ராஜன், மருத்துவக் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த போது, ஒருமுறை நண்பர்களோடு சேர்ந்து மருத்துவ ‘வினாடி வினா’ போட்டிக்காகத் தயார் செய்து கொண்டிருந்தார்.

அப்போது “இந்த இடியோபதிக் என்ற சொல்லுக்கான சரியான அர்த்தம் என்ன? இந்த வார்த்தை கிட்டத்தட்ட எல்லா நோய்களின் காரணிகள் பட்டியலிலும் வருகிறதே! ஒரு பொதுவான சொல் போல இருக்கிறதே!” என பேசியபடி, அதற்கான அர்த்தத்தைத் தேடினார்கள் நண்பர்கள்.

இது கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கான ஆய்வுப் பட்டியலிலும் வரும். இன்னும் கேட்டால் நீங்கள் சிரிப்பீர்கள்... எல்லா நோய்களுக்கும் இந்த இடியோபதிக் அளவு மாத்திரம் கிட்டத்தட்ட 60% இருக்கும்.

நோய்களுக்கான காரணிகள் என்ற பட்டியலில், கடைசியில் ஒரே வரியில் இடியோபதிக் என்றிருக்கும் இதுவும் ஏதோ ஒரு காரணம் என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் மொத்தக் காரணிகளில் இது மட்டும் 60, 70 சதவீதம் இருக்கும். மீதம் 20, 30 சதவீதக் காரணிகளைத்தான் பிரித்துப் பிரித்து ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறார்கள் என்று நிட்டி ராஜனின் நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த நிட்டி ராஜன், படக்கென்று எழுந்து, "நான் சொல்கிற பதில் நன்றாக இருக்கிறதா என்று பாருங்கள்'' என்றார். ''சொல்'' என்றார்கள். "அந்த இடியோபதிக் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தவர் ஒரு Ph.D. வாழ்க்கை முழுவதும் நோய்களை ஆராய்வதற்காகவே அவர் செலவழித்தார். பாவம் அந்த ஆராய்ச்சியாளர்! கடைசியில் பல நோய்களுக்கு காரணங்கள் (காரணிகள்) 'எனக்குத் தெரியவில்லை' என்ற முடிவுக்கு வந்துவிட்டார்''.

"அவர், எல்லாவற்றையும் அலசி, ஆராய்ந்து,
இதுக்கு மேல் பல நோய்க்கு என்ன காரணம்
என கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றார்.

பல நோய்க்களுக்குக் காரணம் எனக்குத்
தெரியவில்லை. என்னை விட்டுவிடுங்கள்
என்கிற முடிவுக்கு இறுதியில் அவர்
வந்துவிட்டார்.

> ஒரு சின்னக் குழந்தை
> ஐஸ் க்ரீமைப் பார்த்ததும்
> பெற்றோரிடம் வாங்கித்
> தரும்படி கேட்கிறது:
> பெற்றோர் சூழ்நிலை
> அறிந்து உடனே வாங்கிக்
> கொடுத்துவிட்டால்,
> அந்தக் குழந்தையுடைய
> அந்த ஆசை, அந்த
> நிமிடத்திலேயே
> நிறைவேறி விடும்.

அப்போது அவருடைய மனோநிலை எப்படி இருந்திருக்கும்? சொல்லுங்கள்! பாவம், மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்திருக்கும். அந்த நிலையில் அவர் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும் 'Being I'am an Idiot and pathetic, I do Not know the reason, So I Call it as Idiopathic" என்றுதான் சொல்லியிருப்பார்'' என்று சொன்னார்...அறையில் சிரிப்பொலி.

ஆம்! உண்மையில் என்ற வார்த்தைக்கு அகராதி அர்த்தபடி “காரணம் என்னவென்று தெரியவில்லை” என்று தான் பொருள்.

60,80 சதவீதம் பல நோய்களுக்கான காரணம் தெரியவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் இல்லையா!? இப்படி தெரியாமல் இருப்பதற்கான காரணம், அது ஆனந்தமயக் கோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதே.

இடியோபதிக் என்பது யாருக்கும் தெரியாது. விஞ்ஞானியாலும்கூட என்னவென்று சொல்லமுடியாது. ஏன் இந்த நோய் வந்தது, எப்படி வந்தது என்று கண்டுபிடிக்கவே முடியாது. அப்படிப்பட்ட பிரச்சினைகள் இந்த ஆனந்தமயக் கோஷம் சம்பந்தப்பட்டது.

ஏன் இந்த நோய் வந்தது, எப்படி வந்தது என்று கண்டுபிடிக்க முடியாது.

இவற்றை ஞானிகளால் மட்டும்தான் சரி செய்ய முடியும். அந்த ஞானத்தின் அனுபவத்தை, ஞான சக்தியை அவர்களால் மட்டும்தான் நோயாளியின் உடல் முழுக்கப் பரவச் செய்ய முடியும். அவர்களால் அந்தப் பிரச்சினைகளை எளிதில் சரிசெய்துவிட முடியும்.

கர்மம், நிராசை, ஆனந்தம்!

இடியோபதிக் என்ற வார்த்தையை ஆன்மிக ரீதியாக கூறினால் அதுதான் கர்மா. இடியோபதிக், கர்மா இரண்டைப் பற்றியும் யாருக்கும் தெரியாது. யாருக்கும் புரியாது.

கர்மா என்றால் என்ன?

கர்மா என்பது நிராசையாக இருக்கும் ஆசைகள். (Unfulfilled Desires) திருப்திபடுத்தப்படாமலிருக்கும் ஆசைகள்.

ஒரு சின்னக் குழந்தை ஐஸ்க்ரீமைப் பார்த்ததும் பெற்றோரிடம் வாங்கித் தரும்படிக் கேட்கிறது; பெற்றோர் சூழ்நிலை அறிந்து உடனே வாங்கிக் கொடுத்துவிட்டால், அந்தக் குழந்தையுடைய அந்த ஆசை, அந்த நிமிடத்திலேயே நிறைவேறி விடும்.

அப்படி வாங்கிக் கொடுக்காமல், அந்தக் குழந்தையைத் தூக்கி வண்டியில் வைத்தால் என்ன ஆகும்? ஆசை நிராசையாக மாறும். அந்த நிராசை, அந்தக் குழந்தையின் மனதை எவ்வளவு நேரம் பாதிக்கும்? அந்தக் கஷ்டம், அந்தக் குழந்தையின் மனோ மயக் கோஷத்தில் இருந்தால், அந்தக் குழந்தை அழுதுவிடும். கத்த ஆரம்பித்து விடும்.

நிராசை மனோமயக் கோஷத்தில் இருக்கும் வரை முகம் வருத்தமாக இருக்கும்.

அந்த நிலையை விட்டு உள்ளே போனால், அடுத்து என்ன நடக்கும் என்றே விவரிக்க முடியாது. காலப்போக்கில் உள்ளுக்குள் ஜீன்களில் மாற்றம் ஏற்பட்டு ஏகப்பட்ட பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்துவிடும்.

நாம் நினைப்பது போல் ஏன் இருக்க முடிவது இல்லை? நினைப்பது போல் பேசமுடிவதில்லை? நினைப்பது போல் செய்ய முடிவதில்லை. ஏன்?... எல்லாம் முடியும். அப்படியென்றால் நாம் நினைப்பதுபோல் செயல்படவிடாமல் தடுப்பது எது? அது, ஆங்காங்கே, நம்முள், நமக்குத் தெரியாமல், நமது அனுமதி இல்லாமல் நமக்குள்ளே நுழைந்த(கர்மா) நிராசைகள் எனும் நச்சுதான், அது ஒரு எதிர்மறை சக்தி.

ஒரு சக்தியைப் பயன்படுத்தினால் அது சக்தி; பயன்படுத்தவில்லையென்றால் அது துர்சக்தி. பயன்படுத்தினால் பராசக்தி, பயன்படுத்தவில்லை என்றால் துர்சக்தி - சைத்தான். சைத்தான் என்பது, தனியாக, இரண்டு கொம்புகளோடு, வாலாட்டிக்கொண்டு நிற்குமென்று எண்ணி விடாதீர்கள். எதிர்மறைச் சக்திதான் சைத்தான் என்பது.

அன்பு ஒரு சக்தி. கோபம் ஒரு சக்தி. காமம் ஒரு சக்தி. சக்தியை முறையாக பயன்படுத்தப்படாவிட்டால் அது பிற்கால நோய்க்கு தற்காலத்தில் விதை விதைத்துவிடும்.

அருவ உருவ சக்தி

அவருவமாகவும் உருவமாகவும் நிறைந்திருக்கும் சக்தியை, நம் அனுபவமாக மாற்ற வேண்டும். இந்த அனுபவத்தைப் பெறவேண்டுமென்பதற்காக வெளி உலகில் உருவாக்கப்பட்ட முறைகள்தான் தெய்வத்துக்கான வடிவங்கள்.

நாம் நினைக்கிற மாதிரி பிரம்மா, சிவன் விஷ்ணு என்று அந்தந்த வடிவங்களில் அவர்கள் இருந்தால், அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அலங்காரங்கள் மட்டும் தான் வித்தியாசமா?

இல்லை... அந்த வடிவங்களில் மிகப்பெரிய ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. தெய்வ உருவங்களுக்கென்று ஒரு மிகப்பெரிய சக்தித் தத்துவம் இருக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை.

இதைய புரிந்து கொள்ள ஒரு எளிய உதாரணம்.

ஒரு இளைஞன், ஒரு கவர்ச்சி நடிகையின் படத்தைப் பார்க்கும் போது, உள்ளுக்குள் தோன்றுவது ஒருவித உணர்வு! அதே இளைஞன், தன் உறவினப் பெண் ஒருவரைப் பார்க்கும் போது ஏற்படுவது வேறொரு வகையான உணர்வு. அவனே தன் தாயைப் பார்க்கும் போது ஏற்படுவது மற்றொரு வகையான உணர்வு!

முதலில் தோன்றிய உணர்வுக்குப் பெயர் காமம்; இரண்டாவது தோன்றிய உணர்வுக்கு பெயர் மரியாதை; மூன்றாவது தோன்றிய உணர்வுக்குப் பெயர் பாசம். காமம், மரியாதை, பாசம் இந்த மூன்று வகையான உணர்வுகளையும் ஏற்படுத்தியது எது? மூவருமே பெண்கள்தான். என்ன வித்தியாசம்? ஆடை, அலங்காரங்களும் தனிமனிதனின் உணர்வு ரீதியான தொடர்பும்தான் இத்தகைய வேறுபாட்டை உருவாக்குகின்றன. இந்தச் சிறிய மாற்றம் அந்த இளைஞனின் மொத்த குணத்தையே நொடியில், இடத்திற்கேற்றார்போல் மாற்றிவிடுகிறது. கொஞ்ச நேரம் காதலனாக, கொஞ்ச நேரம் மரியாதைக்குரியவனாக, கொஞ்ச நேரம் குழந்தையாக செயல்படுகிறான். இந்த மூன்று நிலைகளுக்கும் அவனை மாற்றுவது - ஒரு சிறிய தோற்ற மாற்றமும், சிறிய உணர்வு மாற்றமும்தான். இந்தச் சிறிய தோற்ற மாற்றமும், சிறிய தோற்ற மாற்றங்களுக்கே இவ்வளவு சக்தி இருந்தால், உணர்வு பற்றிய முழுக் கலையையும் அறிந்த ஒருவர் செய்யும் தோற்ற மாற்றத்திற்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும்?

சாதாரண தோற்றத்தின் மாற்றத்தால் காமத்திலிருந்து பாசம் வரைக்கும் செல்ல முடியும்போது, வேதகாலத்து ஞானக்கலைஞரால் செய்யப்பட்ட தெய்வ சிலையின் தோற்ற மாற்றத்தினால் நம் உணர்வை பக்தி வரை அழைத்துச் செல்ல முடியாதா! (அப்படி பக்தி வரை அழைத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட சித்திரங்கள்தான் லட்சுமி, பிரம்மன், கணபதி எல்லாம்).

உண்மையிலேயே அவர்கள் இப்படித் தங்கத்தோடும், தும்பிக்கையோடும் இருப்பார்கள் என நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். உண்மை அதுவல்ல. கலைஞர்கள் அருவமாக தாங்கள் உணர்ந்ததைச் சித்திரங்களாகப் படைக்கிறார்கள். இந்த உண்மைகளைப் புரிந்துகொள்வதற்கு சக்தி என்ற படகு வேண்டும். அந்த சக்தியென்ற படகின் வழியாகத்தான் இங்கிருந்து அந்தப் பக்கத்திற்குக் கடந்து செல்ல முடியும். (அன்னமயக் கோஷத்திலிருந்து ஆனந்தமயக் கோஷத்திற்கு) இல்லையென்றால் கடந்து செல்லவே முடியாது.

சிலருக்கு வெளி உலகிலிருந்து உள் உலகம் செல்லும் அனுபவம் இயற்கையாகவே நடக்கலாம். மற்றவர்கள், ஜென்ம ஜென்மமாக, அதுவாக நடக்கட்டும் என விட்டு விடுகிறார்கள். விட்டுவிட்டு வெளி உலகிலேயே அதாவது அன்னமயக் கோஷத்தின் வாசல்படியிலேயே வாழ்வைக் கழிக்க விடுகிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், நெருப்பு என்பது சுடும். அந்த நெருப்பு சுடும் என்று அறிய, பார்த்தும் தெரிந்துகொள்ளலாம், தொட்டும் தெரிந்துகொள்ளலாம்.

இரண்டு வழிகள் இருக்கின்றன. விளக்கின் நெருப்பும் சுடும்; மெழுகுவர்த்தியின் நெருப்பும் சுடும்; அடுப்பின் நெருப்பும் சுடும். ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்து, ஆ! சுடுகிறது; ஆ! சுடுகிறது; ஆ! சுடுகிறது என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, இறுதியாக 'நெருப்பு என்பது சுடும்' என்ற முடிவிற்கு வருவது, இது பல ஜென்ம தபஸ். "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று திரிந்து, எனக்கு எல்லாம் தெரியும்! யாருடைய உதவியும் எனக்குத் தேவையில்லை என்று முட்டி மோதி முன்னேற முயற்சிப்பது தபஸ்.

இன்னொன்று, நெருப்பை ஒரே ஒரு தடவை தொட்டுப் பார்த்துவிட்டு, 'அப்பா, நெருப்பு சுடுமப்பா' என்று உணர்ந்துகொள்வது. சில ஞானக்கருத்துக்களை, ஞானம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை ஒருமுறை கேட்டதும் பிடித்துக்கொள்வது - இரண்டாவது வகை.

பலநூறு நெருப்புகளைத் தொட்டுத் தெரிந்து கொண்டால் என்ன? தொடாமலேயே தெரிந்து கொண்டால் என்ன? ஒரே ஒரு நெருப்பைத் தொட்டுத் தெரிந்து கொண்டால் என்ன? நெருப்பு சுடும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

ஞானம் அஞ்ஞானத்தை சுட்டெரித்துவிடும். இந்த சத்தியம் உள்ளத்தில் ஊறிவிட்டால் போதும்.

அர்ப்பணம்

ஜென்மஜென்மமாகத் தவம் செய்தும் இந்த சக்தியைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு தியானமாக, ஒவ்வொரு குருமார்களாகப் பார்த்துப் பார்த்து கடைசியில் ஒரு முடிவுக்கு வரலாம்.

அடுத்தது, இறைவனளித்த புத்தியை முழுக்கவு்ம் ஒரே முறையில் பயன்படுத்திப் பார்த்து விடுவது. ஒரு தேர்ந்த ஞானி. அல்லது குருவிடம் தன்னை அர்பணித்து விடலாம். ஞானம் அடைவதற்கான வரைபடம் ஞானியின் கையில் இருப்பதால் மூன்றாவது முறையில் இலக்கை அடைவது எளிது. கஷ்டங்கள் குறைவு.

வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களுக்கு நம்மை அர்ப்பணம் செய்வோம். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் குருவிடம் அர்பணம் செய்ய மாட்டோம்; அம்மாவிடம் அர்ப்பணம் செய்ய மாட்டோம்; அப்பாவிடம் அர்ப்பணம் செய்ய மாட்டோம்; ஆனால் பஸ் ஓட்டுநரிடம் அர்ப்பணம் செய்து விடுவோம். எந்த பஸ்ஸின தரம் பற்றி உங்களிடம் யாராவது சான்றிதழ் கொடுத்திருக்கிறார்களா?

அடுத்து கொத்தனாரை முழுதாக நம்புகிறோம்! எந்த தைரியத்தில் இந்த மஹாலில் நீங்கள் எல்லோரும் உட்கார்ந்து இருக்கிறீர்கள்? இது இடிந்து விழாது என யார் உங்களிடம் சான்று வழங்கியுள்ளார்கள்?

திரும்பத் திரும்ப நம் வாழ்க்கையில் முக்கியமற்ற சாதாரண விஷயங்களுக்கெல்லாம் நாம் அர்ப்பணம் செய்கிறோம். அது எப்படி? இது எப்படி என்ற கேள்வியைக் கேட்பதில்லை.

பஸ், கட்டிடம் பற்றிச் சந்தேகித்துக் கேள்வி கேட்டால் வாசற்படியிலேயே நின்று கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஆன்மிகத்தைச் சந்தேகித்துக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். பதில் சொல்லி மாளாது. வாசிலிலேயே நின்று காலத்தை வீணடித்துவிட வேண்டியதுதான்.

கேள்விகளைக் கீழே போட்டுவிட்டு ஞானப்பாதையில் ஞானகுருவின் வழிகாட்டுதல் படி ஒரு முறை வாழ்க்கையில் முயற்சித்தால் என்ன?

எத்தனையோ விஷயங்களுக்கு துணிந்து முடிவெடுத்திருக்கிறோம். நல்லதுக்காக ஒருமுறை எடுத்துப் பார்ப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறோம் நாம்?

"மனமிருந்தால் மார்க்கம் உண்டு'' என்று பெரியவர்கள் கூறுவது இதைதான்.

தியானம், ஞானம் என்ற இரண்டின் மூலமும் ஆனந்தத்தை அடைவதுதான் ஆன்மிகம். மெய்ஞானம், ஆன்மிக மார்க்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு பயன்பெற எளிய வழி.

அது ஏன் உண்மையாக இருக்கக்கூடாது? அதை ஏன் நாம் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? என்று சிந்தித்து முயற்சி செய்து பார்ப்பதுதான் நற்செயலாக இருக்கும்.

நமக்கு உற்சாகமான சக்தி, உண்மையான சக்தி என்ற இரண்டும் தேவை. நம் ஒவ்வொருவருடைய புத்திசாலித்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு. சாதாரண கணிதத்தையும் உயிரியலையும் ஒருவர் புரிந்துகொள்கிற அளவிற்கு மற்றொருவர் புரிந்துகொள்ள மாட்டார். ஒருவர் ஓவியம் வரைகிற அளவிற்கு இன்னொருவர் வரைய மாட்டார். இது அனுபவ ஞானம் சம்பந்தப்பட்டது. முழுக்க முழுக்க உண்மையான சக்தி சம்பந்தப்பட்டது.

அடுத்தது, சாதாரண உலக வாழ்க்கைகள். நீங்கள் செய்யும் வேலை, ஆரோக்கியமாக இருப்பது, நோய் இல்லாமல் இருப்பது, பார்ப்பது, பேசுவது ஆகியவை. இவை முழுக்க முழுக்க இந்த உறுதியான சக்தி சம்பந்தப்பட்டவை.

தியானத்தை முறையாக, முழுமையாக செய்ய வேண்டும். ஊற்று போல, சக்தியை உள்ளிருந்து வெளியில் பாய்ச்சக் கூடிய ஒரு முறைதான் தியானம். இந்த தியானம் நம்முடைய பிரச்சினைகளுக்கு உண்மையான மருந்தாக இருக்க முடியுமா? அல்லது மருத்துவம் நம்முடைய பிரச்சினைகளுக்கு உண்மையான மருந்தாக இருக்க முடியுமா? நாம்தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும்!

தியானம் என்றால் என்ன? தியானத்தை எப்படிச் செய்வது? தியானத்தின் மகத்துவம் என்ன? தியானம் செய்வதால் பக்கவிளைவு ஒரு நன்மையாக கிடைக்கிறது; அதை குணமாதல் Healing என்று சொல்கிறார்கள் - அவற்றைப் பற்றியெல்லாம் அடுத்த புத்தகத்தில் பார்க்கலாம். இந்த கோஷங்கள் சக்தி, ஞானம் இவை பற்றி கேள்விகள் இருந்தால் இப்போது கேட்கலாம்.