KAILASA Library/தியானம்/5. விஞ்ஞானமயக் கோஷமும் - ஆயுர்வேதமும்Sign in
தியானம்

5. விஞ்ஞானமயக் கோஷமும் - ஆயுர்வேதமும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அடுத்தது விஞ்ஞானமயக் கோஷம். இது வெளியிலிருந்து நான்காவது அடுக்கு. மனிதனின் புதிர் பெட்டகம் விஞ்ஞானமயக் கோஷம்.

இந்த கோஷத்தில்தான் மனிதன் தனக்குள்ளிருக்கும் பல ஆச்சரியங்களை எதிர்கொள்கிறான்.

விளக்க முடியாத உணர்வுகள்...
விவரிக்க முடியாத அனுபவங்கள்...
மகிழ்ச்சியில் திளைத்தல்...
சொர்க்கத்தை உணர்தல்...

  • போன்ற பல புதிர்களை உள்ளடக்கியது இந்த விஞ்ஞானமயக் கோஷம்.

இந்த விஞ்ஞானமயக் கோஷம் வரை ஊடுறுவி உள்ளுக்குள் யாருமே போவதே இல்லை. வாசலிலேயே நின்றுவிட்டு வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். இந்த விஞ்ஞானமயக் கோஷம், மனோமயக் கோஷத்தையும் தாண்டிய ஒரு சூட்சமமான விஷயம் சம்பந்தப்பட்டது.

பாக்கெட் ஜூஸ் வாங்கிக் குடிக்கிறீர்கள்; நன்றாக இருக்கிறது. அதேநேரம், முழு மாம்பழத்தை தோல் சீவிய பின் சதையை எடுத்து அதை ஜூஸ் போட்டுக் குடிக்கிறீர்கள்.

இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா, இல்லையா?... என்ன வித்தியாசம் இருக்கிறது?... மாம்பழ ஜூஸ் சாப்பிடுவது போலவோபாக்கெட் ஜூஸ் இருக்கிறது? என்ன வித்தியாசம்? ஏதோ ஒன்று விடுபட்டுள்ளது! அது என்ன? அந்தப்பொருள்தான் விஞ்ஞானமயக் கோஷம் சம்பந்தப் பட்டது புதிரானது. விளக்க முடியாதது. அனுபவிக்கும்வரை விளங்கிக்கொள்ளவும் முடியாது.

விஞ்ஞானமயக் கோஷம் சரியாக இயங்க ஆரம்பிக்காதவரை, உங்கள் முன்னே பாரிஜாத மலரைக்கொண்டு வந்து வைத்தாலும் சரி, உங்களால் எவ்வளவு நுகர முடியுமோ, அவ்வளவுதான் நுகர முடியும். பாரிஜாத மலரின் நறுமணம் ஒரு நகர் முழுவதும் வீசும் என்றாலும், அதன் நறுமணத்தை முழுமையாக உங்களால் நுகர முடியாது.

அனுபவிக்கும் தன்மை, அதற்கு மேல் நமக்கு வரவே வராது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க விஞ்ஞானமயக் கோஷம் சம்பந்தப்பட்டது.

விஞ்ஞானமயக் கோஷம் திறந்து கொண்டால் அனுபவிக்கும் தன்மை அபரிமிதமாகக் வெளிப்படும். ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்க முடியும்.

வாழ்க்கையில் தொடர் மகிழ்ச்சிகளை சந்தித்துக் கொண்டே இருப்போம்.

ஆயுர்வேதமும், இயற்கை மருத்துவமும், விஞ்ஞானமயக்கோஷம்வரை சென்று வேலை செய்யும் திறன் பெற்றவை.