4.மனோமயக் கோஷமும் - ஹோமியோபதியும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வெளியிலிருந்து பார்த்தாலும், உள்ளிருந்து பார்த்தாலும் மனோமயக்கோஷம் ஐந்து உடல் அடுக்குகளுக்கு நடுநாயகமானது. மனோமயக் கோஷம் மூன்றாவது அடுக்கு.
மனிதனின் குழப்பப் பெட்டகம் மனோமயக் கோஷம்.
மனோமயக் கோஷத்தில் ஆழ்ந்து வேலை செய்யும் திறன் பெற்றது ஹோமியோபதி. இந்த கோஷத்திலிருந்து தோன்றும் பிரச்சனைகள், உபாதைகளுக்கு ஹோமியோபதியைவிட சிறந்த தீர்வு தரும் மருத்துவம் வேறில்லை.
மனோமயக் கோஷம் முழுக்க, முழுக்க மனம் சம்பந்தப்பட்டது. நீங்கள் தூங்கும் போது, எந்த இடத்தில் பகல்கனவு காண்கிறீர்கள்? இரவில் கனவு காணும்போது எந்த உடலைப் பயன்படுத்துகிறீர்கள்? என்பதெல்லாம் இந்த மனம் சம்பந்தப்பட்டது.
ஹோமியோபதி :
பகலில், இங்கே ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு பக்கத்து வீட்டில்போய் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வருவதைப்போல், என்னென்ன நினைக்கிறோமோ, அது எல்லாம் முடிகிறது. அதைச் செய்கிற உடல் எது? அந்த உடல் எங்கே இருக்கிறது ?
உதாரணத்திற்கு...
ஒரு இடத்தில் இருப்போம், அருகில்
இருப்பவரைப் பார்த்துப் பேசிக்கொண்டு
இருப்போம், ஆனால் மனதுக்குள் அந்த
நபரைப் பற்றி வேறு ஒன்று யோசித்துக்
கொண்டிருப்போம். இது நடப்பது எங்கே?
இவை எல்லாம் நடக்கக்கூடிய இடம்தான்
மனோமயக்கோஷம். இந்த மனோமயக்கோஷம்
சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஹோமியோபதி
சிறந்த முறையில் சரி செய்கின்றது.
ஹோமியோபதி மருத்துவர்களைப்
பார்த்தீர்கள் என்றால், திரும்பத் திரும்ப
கேள்வியைத்தான் கேட்பார்கள். கேள்வி
கேட்பது மூலம் நோயாளியின் மனநிலையை
படித்து விடுவார்கள். ஹோமியோபதியின்
அடிப்படேயே மனதை ஆராய்வதுதான்.
மனோமயக்கோஷம்
சம்பந்தப்பட்ட
பிரச்சினைகளை
ஹோமியோபதி
சிறந்த முறையில் சரி
செய்கிறது. ஹோமியோபதி
மருத்துவர்களைப் பார்த்தீர்கள்
என்றால், திரும்பத் திரும்பக்
கேள்வியைத்தான்
கேட்பார்கள். கேள்வி
கேட்பது மூலம் நோயாளியின்
மனநிலையைப்
படித்துவிடுவார்கள்.
ஹோமியோபதியின்
அடிப்படேயே மனதை
ஆராய்வதுதான்.
மனநிலை வெளிப்பாட்டை அறிய முடியவில்லையென்றால், அவர்களால் நோயைக் கண்டறிய முடியாது. அந்த முழு மருத்துவமும் உடலின் மூன்றாவது அடுக்கில் போய் வேலை செய்கிறது. நோயின் காரணம் மனோமயக் கோஷத்தில் இருக்கும் பட்சத்தில் அன்னமயக் கோஷத்திற்கு மருத்துவம் செய்வதால் நோய் குணமாகாது.
ஒரு சின்ன சம்பவம். 'கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதை' என்பதைப் போல் நடந்த ஒரு சம்பவம். 'முல்லா நஸ்ருதீன்' என்பவர், எங்கேயோ போய், இந்தப் பேய்களை அழைத்து விளையாடும் விளையாட்டைக் கற்றுக்கொள்கிறார்.
அவருக்கு அப்போது 13, 14 வயதுதான். சிறுபயன். மிகவும் ஜாலியாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு பேயையும் அழைப்பது, 'அதைக்கொண்டு வா, இதைக்கொண்டு வா' என ஏவுவது, என்று குதூகலமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் ஒரு விவகாரம் பிடித்த பேய் வருகிறது. அந்தப் பேய்க்கு சக்தி அதிகம். அந்தப் பேய் வந்ததும் முல்லாவைப் பார்த்து, ஆக்ரோஷமாக ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு, 'நீ என்ன கேட்டாலும் நான் செய்கிறேன்; எனக்கு இரண்டே இரண்டுதான் தெரியும். ஒன்று செய்யத் தெரியும்; இன்னொன்று அழிக்கத் தெரியும். இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்து கொணடே இருப்பேன்.
இப்போது என்னை நீ அழைத்து விட்டதால், நீ சொல்வது எதுவாகயிருந்தாலும் அதைச் செய்வேன். உன்னால் எதுவும் சொல்ல முடியவில்லையென்றால், முதலில் உன்னை அழித்துவிடுவேன், பிறகு மற்றவர்களையும் அழித்துவிடுவேன். காரணம் என்னால் சும்மா இருக்க முடியாது' என்றது.
“என்ன பிரச்சினை” என
எல்லாவற்றையும்
கேட்டறிந்த பின், அந்த
ஞானி சிரித்துக்கொண்டே,
நான் சொல்வது எதுவாக
இருந்தாலும் அந்தப் பேய்
செய்யுமா எனக்கேட்கச்
சொல்’ என்றார்.
இதைக் கேட்டதும் முல்லாவுக்குப் பயம் வந்து விட்டது. ‘ஐய்யோ, எவ்வளவு பெரிய தவறு நடந்து விட்டது? விளையாட்டாகச் செய்யப்போய் வினையாகி விட்டதே!’
ஆனாலும் அந்தப் பேய் விடுவதாக இல்லை. 1,2,3, என எண்ண ஆரம்பித்து விட்டது. ‘10 எண்ணுவதற்குள் வேலை கொடுத்தாக வேண்டும். இல்லையென்றால் நான் உன்னை அழித்துவிடுவேன்’ என்று மிரட்டியது.
முல்லா யோசித்தார். அந்த ஊரில் ஒரு 30மாடிக்கட்டிடம் ஒன்று உண்டு. அதைக் கட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும்? என்று யோசித்தவாறே, ‘ஒரு 60மாடிக் கட்டிடம் ஒன்றைக் கட்டு’ என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள் - அங்கே 60மாடிக் கட்டிடம் உருவாகி நிற்கிறது! அடுத்து என்ன செய்வதென்றுத் தெரியவில்லை. பக்கத்து ஊரில் ஒரு பெரி பாலைவனம் ஒன்று உண்டு. ‘அந்தப் பாலைவனம் முழுவதையும் பூஞ்சோலையாக மாற்று’ என்று சொல்ல, உடனே பாலைவனம் பூஞ்சோலையாக மாறிவிட்டது. இப்படி தொடர்ந்து நான்கைந்து உத்தரவுகளைப்போட, உடனே, உடனே அந்தப் பேய் எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுகிறது.
முல்லாவால் அதற்குமேல் ஒன்றுமே செய்ய முடியவில்லை! சொல்லி முடிப்பதற்குள்ளாக, அந்தப் பேய் செய்து முடித்து விடுகிறது. பாவம்! இவர் என்ன செய்வார்? ஒரு அளவுக்கு மேல் அவரால் முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது, அந்தப் பக்கமாக ஒரு ஞானி நடந்து வருகிறார். இங்கே நடந்த மொத்தக் காட்சிகளையும் பார்த்து, ரசித்து, சிரித்துக் கொண்டே வருகிறார். ஞானி, முல்லாவை கடந்து செல்லும்பொழுது, இந்த ஞானியிடமாவது ஏதாவது உதவி கேட்கலாம் என, "ஐயா ஐயா, கொஞ்சம் நில்லுங்கள். ஒரு சிறு உதவி செய்துவிட்டுப்போங்கள். இந்தப் பேயிடம் நான் மாட்டிக்கொண்டு, மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். என்னை இந்தப் பேயிடமிருந்து காப்பாற்றுங்கள்" என்றார் பீதிக் குரலில்.
"என்ன பிரச்சனை" என எல்லாவற்றையும் கேட்டறிந்த பின், அந்த ஞானி சிரித்துக் கொண்டே, 'நான் சொல்வது எதுவாக இருந்தாலும் அந்தப் பேய் செய்யுமா எனக் கேட்டுச் சொல்' என்றார்.
உடனே அந்தப் பேய் கிண்டலாகச் சிரித்துவிட்டு, 'என்னால் செய்ய முடியாத ஒரு விஷயம் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன? எதுவாகயிருந்தாலும் சொல்லுங்கள். செய்து காட்டுகிறேன்' என்றது. அந்த ஞானி திரும்பிப் பார்த்து, அங்கே நின்று கொண்டிருந்த நாயின் வாலை நிமிர்த்தும்படி, கூறிவிட்டுப் போய் விட்டார். இந்தப் போய், அந்த நாயுடைய வாலை நிமிர்த்துகிறது, நிமிர்த்துகிறது, நிமிர்த்திக் கொண்டே இருக்கிறது.
இந்த மனோமயக் கோஷம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை சரிசெய்ய வேண்டுமென்றால் - நாய் வாலை நிமிர்த்துகிற கதைதான். மனோ தத்துவ நிபுணர்கள் எவ்வளவோ உழைக்கிறார்கள்? ஆனால் எத்தனை பேரைக் காப்பாற்றுகிறார்கள்? காப்பாற்ற முடியாது. ஏன் என்றால், அது சூட்சமமான விஷயம்.
பிரச்சினை மிக ஆழத்தில் இருக்கிறது
அவ்வளவு ஆழத்தில் இருக்கிற பிரச்சினையை வெளியிலிருந்து அவ்வளவு எளிதில் அணுகிவிட முடியாது. எவ்வளவுதான் குகைக்குள்ளே கையை விடமுடியும்? எங்கே என்ன பொருள் இருக்கிறது என்பது எதுவுமே தெரியாமல்? இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேடுவதுபோல், எவ்வளவு நேரம் தேட முடியும்? பிரச்சினையின் வேரைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கு விடைதேடுவது, ஆனந்தமயக் கோஷத்தில் இருந்து, அன்னமயக் கோஷத்திற்கு வருவது. குழப்பத்திலிருந்து குழப்பத்திற்கு விடை தேடுவது, அன்னமயக் கோஷத்தில் இருந்து, மனோமயக் கோஷத்திற்குச் செல்வது. எப்படி விடை கிடைக்கும்? கிடைக்காது.
ஹோமியோபதியின் தத்துவம் மனோமயக் கோஷத்தில் செயல்படுகிறது. மனோமயக் கோஷத்தில்தான் அகங்காரம் என்னும் நஞ்சு குடிகொண்டிருக்கிறது.
நாம்
குழப்பத்திலிருந்து கொண்டு
குழப்பத்திற்கு விடை
தேடுகிறோம்.
தெளிவிலிருந்து
குழப்பத்திற்கு விடை
தேடவில்லை.
தெளிவிலிருந்து குழப்பத்துக்கு
விடை தேடுவது ஆனந்தமயக்
கோஷத்திலிருந்து
அன்னமய கோஷத்திற்கு
வருவது. குழப்பத்திலிருந்து
குழப்பத்திற்கு விடை
தேடுவது என்பது அன்னமயக்
கோஷத்தில் இருந்து
மனோமயக்
கோஷத்திற்குச் செல்வது.
தெளிவில்லாமல் எப்படி
விடை கிடைக்கும்?
கிடைக்காது.
ஹோமியோபதியின் தத்துவம்
மனோமயக் கோஷத்தில்
செயல்படுகிறது.
மனோமயக் கோஷத்தில்தான்
அகங்காரம் என்னும் நஞ்சு
குடிகொண்டிருக்கிறது.