KAILASA Library/தியானம்/3. பிராணமயக் கோஷமும் - பிராணாயாமமும்Sign in
தியானம்

3. பிராணமயக் கோஷமும் - பிராணாயாமமும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பிராணமயக் கோஷம் வெளியிலிருந்து உடலில் இரண்டாவது அடுக்கு. பிராணமயக் கோஷம் பிராணசக்தி சம்பந்தப்பட்டது.

மனிதனின் சக்திப் பெட்டகம் பிராணமயக் கோஷம்.

பிராணமயக் கோஷத்தில் ஆழ்ந்து செயல்படும் மருத்துவ முறைகளில் மிக முக்கியமானவை பிராணாயாமம், யோகாசனம், அக்குபஞ்சர்.

நோயின் மூலகாரணம் பிராணமயக் கோஷத்தில் இருக்கும் போது அல்லோபதி மருந்துகளும், மற்ற மருத்துவங்களும் எவ்வளவுதான் முயன்றாலும் நோய் குணமாகாது.

பல நோய்களை அதிசயிக்கத்தக்க விதத்தில் பிராணாயாமம், யோகாசனம், அக்குபஞ்சர் போன்ற முறைகள் குணப்படுத்தியிருக்கின்றன. இந்த மருத்துவ முறைகளின் கண்டுணரும் முறைகள் (Diagnostic Methods) மற்றும் மருத்துவம் செய்யும் விதம் எளிமையானது. பல நேரங்களில் நோய்களுக்கு நிரந்தரத் தீர்வும் தருகின்றன.

ஆனால் பிராணமயக் கோஷத்தையும் தாண்டி நோயின் மூலகாரணம் ஆழமாக இருக்கும்போது இவர்களும் கைவிரித்துவிடுவார்கள். நம் உடலுக்குள் சக்தி பரவ, மூச்சுக் காற்றோடு சேர்ந்து நம்முள் நுழையும் பிராணசக்திதான் காரணம்.

நாம் சுவாசிக்கும்போது வெறுமனே, மூச்சுக்காற்றை மட்டுமே உள்ளிழுத்து வெளிவிடுவதில்லை. வெறும் காற்றால் மாத்திரமே நம்மால் உயிர்வாழ முடியுமென்றால், இறந்துபோன உடலின் மூக்கில், காற்றைச் செலுத்தினால், அது பிழைத்துக்கொள்ள வேண்டும், நாம்தான் மூச்சுக் காற்றை உள்ளே செலுத்துகிறோமே! அது பிழைத்துத்தானே ஆகவேண்டும்! ஆனால் பிழைப்பதில்லை. ஏன் பிழைக்க வில்லை? ஏனென்றால் அந்த மூச்சுக் காற்றுடன் சேர்ந்து ‘பிராணன்’ உள்ளே செல்லவில்லை. மூச்சுக் காற்றோடு சேர்ந்து வரும் பிராண சக்தியை உள் இழுத்துக்கொள்ளும் அந்தப் பிராணன் வெளியேறிவிட்டது.

பிறக்கிறபோது உள்ளே வருகிற பிராணன் உள்ளேக்குள் சுழன்று கொண்டேயிருக்கும். அந்த சுழற்சியை நாம் தொடர்ந்து பாதுகாத்துக்கொண்டு வருகிறோம்.

எது மூலமாக?

மூச்சு மூலமாக.

வெறுமனே மூச்சை இழுக்காமல், அந்த மூச்சுடன் கூடவே பிராணன் என்கிற சக்தியும் உள்ளே போகிறது. இப்போது இருக்கிற உயிரியல் ஆய்வாளர்கள் (Biologist) கூட இதை ஏற்றுக்கொள்கிறார்கள். வெறுமனே நாம் காற்றை மட்டும் சுவாசிக்கவில்லை. காற்றுடன்கூடவே ஒரு சக்தி சேர்ந்து உள்ளே போகிறது என்பது வரைக்கும் அறிவியல் புரிந்துகொண்டுள்ளது. அதற்குமேல் அறிவியலால் உணர முடியவில்லை. யோகம், பிராணாயாமம் ஆகியவை செய்வதனால் மட்டுமே இந்த பிராணமயக் கோஷத்தில் இருக்கிற பிரச்சினைகளைச் சரிசெய்ய முடியும்.

| நாம்தான் மூச்சுக் காற்றை உள்ளே செலுத்துகிறோமே! அப்படியென்றால் இறந்துபோன உடல் பிழைத்துத்தானே ஆக வேண்டும்! ஆனால் பிழைப்பதில்லை. ஏன் பிழைக்க வில்லை? ஏனென்றால் அந்த மூச்சுக் காற்றுடன் சேர்ந்து 'பிராணன்' உள்ளே செல்லவில்லை. மூச்சுக் காற்றோடு சேர்ந்து வரும் பிராண சக்தியை உள் இழுத்துக்கொள்ளும் பிராணன் வெளியேறிவிட்டது. | | --- |