KAILASA Library/தியானம்/2. அன்னமயக் கோஷமும் - ஆங்கில மருத்துவமும்Sign in
தியானம்

2. அன்னமயக் கோஷமும் - ஆங்கில மருத்துவமும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அன்னமயக் கோஷம் உடலின் திடப் பெட்டகம்; உடலின் வெளி அடுக்கு. இந்த அலோபதி மருத்துவ முறை, அன்னமயக் கோஷம் சம்பந்தப்பட்டது

அன்னமயக் கோஷம் என்பது திட உடல். நம்மால் தொட்டுப் பார்க்கக் கூடிய, ரசித்துப் பார்க்கக் கூடிய, ருசித்துப் பார்க்கக் கூடிய உடல்தான் அன்னமயக் கோஷம். அந்த அன்னமயக் கோஷத்தில் எந்த வகையான பிரச்சினைகள் வந்தாலும், அதைச் சரி செய்ய ஆங்கில மருத்துவத்திற்கு இணை ஆங்கில மருத்துவமே (அலோபதி). அலோபதியால் சரி செய்ய முடியவில்லையென்றால், வேறு யாராலும் அந்நோயைக் குணப்படுத்த முடியாது. அன்னமயக் கோஷம் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆங்கில மருத்துவத்தின் சேவை அற்புதமானது.

அன்னமயக் கோஷத்தில்தான் தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை எல்லாம் வரும். அன்னமயக் கோஷத்தில்தான் விபத்து நடக்கும். எலும்பு முறிவு, திடீர்விபத்து, இவை எல்லாவற்றுக்கும் உடனே சிகிச்சை அளிக்கக் கூடிய ஒரே முறை அலோபதிதான். ஆனால் அன்னமயக் கோஷத்துக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே தமது வேலை, கோஷத்தை மட்டும் குணப்படுத்துவதுதான் தமது

அன்னமயக் கோஷம் என்பது திட உடல், நம்மால் கண்களால் பார்க்கக் கூடிய, தொட்டுப் பார்க்கக் கூடிய உடல்தான் அன்னமயக் கோஷம், அந்த அன்னமயக் கோஷத்தில் எந்த வகையான பிரச்சினைகள் வந்தாலும், அதை சரி செய்ய ஆங்கில மருத்துவத் திற்கு இணை ஆங்கில மருத்துவமே [அலோபதி]. அலோபதியால் சரி செய்ய முடியவில்லையென்றால் வேறு எதனாலும் அந்நோயை குணப்படுத்த முடியாது. அன்னயக் கோஷம் சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆங்கில மருத்துவத்தின் சேவை அற்புதமானது.

வேலை என்பதை அறியாமல், அதற்கு உள்ளே இரண்டு அடி எடுத்து வைக்கும் வினைதான் - பக்க விளைவுகள். "என்னால் எல்லாம் முடியும் என்னால் எல்லாம் முடியும்" எனும் ஆர்வத்தில், சிறுபிள்ளைத்தனமாக, உள்ளே எடுத்து வைத்த அடியின் கண்டுபிடிப்புகள்தான் மாத்திரைகள். அவற்றின் விளைவுகள் தான் பக்கவிளைவுகள்.

மன நோய்களை மருந்தால் குணப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் புதுப்புது மருந்துகளை உபயோகித்துப் பார்த்தார்கள். குணம் கிடைக்கவில்லை.

பல மருந்துகளை உபயோகித்த பின் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை - 90% நோய்களுக்கு மனோரீதியான பிரச்சினைகள், குறைபாடுகள்தான் காரணம் என்பது. மருந்தால் மனதை நேரடியாக கட்டுப்படுத்தவோ, சரி செய்யவோ முடியாது என்ற உண்மையை வெளியிட்டிருக்கிறார்கள்.

நிறைந்த மனதோடு தங்களால் "முடியாது" என்றால் "முடியாது" என்று பகிரங்கமாக அறிவிப்பது ஆங்கில மருத்துவத்தின் நல்ல குணங்களில் ஒன்று.

Mind-Body-Medicine என்றழைக்கப்படும் மருந்தில்லா மாற்று மருத்துவ முறைக்கான ஆராய்ச்சிகள் யந்திரகதியில் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன.

திட உடலைத் தாண்டி உள்ளே ஏதோ ஒரு அபார சக்தி, ஏதோ ஒரு ஆச்சரியம் உள்ளே இருக்கிறது என்று தேட ஆரம்பித்திருக்கிறார்கள். திட உடலில் (அன்னமயக் கோஷம்) இருந்து உள் நோக்கி, மனதைப் பற்றிய (மனோமயக் கோஷம்) ஆராய்ச்சிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அன்னமயக் கோஷத்திற்கும் மனோமயக் கோஷத்திற்கும் இடையே உள்ள பிராணமயக் கோஷத்தை அறிவியல் கண்டுகொள்ளவில்லை.

இந்த திட உடல் நாம் நினைப்பது போல் திட
உடல் அல்ல. யாரால் இதை உடனடியாக
ஏற்றுக்கொள்ள முடியும்?

ஏனென்றால் இது மெய்ஞானம்.

அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. மெய்ஞானம் பற்றித் தெரியாதவர்களிடம் இதைப் பற்றிக் கூறினால் புரியாது. இருந்தாலும், கல்வியறிவு என்ற ஒன்றால் இதைப் புரிய வைக்க முயற்சிக்கலாம்.

சக்தி

எங்குமிருக்கும் சக்தி பிரபஞ்ச சக்தி. அந்த சக்தியின் வெவ்வேறு வடிவங்கள்தான் நாம் காணுகின்ற மரம், மிருகம், உடல் இவையனைத்தும்.

பல மருந்துகளை
உபயோகித்த பின்
கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி
உண்மை என்னவென்றால்
90% நோய்களுக்கு
மனோரீதியான
பிரச்சினைகள்,
மனக்குறைபாடுகள்தான்
காரணம் என்பதாகும்.
இறுதியாக மருந்தால்
மனதை நேரடியாக
கட்டுப்படுத்தவோ.
சரிசெய்யவோ முடியாது
என்ற உண்மையை
வெளியிட்டிருக்கிறார்கள்.

எப்படி இந்த பிரபஞ்ச சக்தி இத்தனை வடிவங்களுக்கு மாறி, மாறி ஒன்றாக இருக்கிறது? சிறு உதாரணம் மூலம் விளக்குகிறேன். ஒரு நல்ல 6ல் இருந்து 12 அடி உயரம் எழும்பிய கடல் அலையின் புகைப்படம் உங்களிடம் இருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் உள்ள கடல் அலை உண்மையா? இல்லை. சில விநாடிகளில் மேலேறி, கீழே இறங்கிவிட்டது. ஆனால் மேல் ஏறும் போது பார்த்தால் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது? பௌர்ணமி இரவுகளில் கிட்டத்தட்ட இரண்டு மாடி உயரத்துக்கு எழுகிறது. ஆனால் அடுத்த நொடி அது இல்லை.

கடல் என்கிற அவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தின் ஒரு சிறு வெளிப்பாடுதான் கடல் அலை. அதேபோல், ஆத்ம சக்தி என்கிற பெரிய சக்தியினுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான் மனித உடல். புகைப்படம் வழியாக பார்க்கும் போது அந்த அலை நிஜமாக, தனிப் பொருளாகத் தெரிகிறது. புகைப்படமில்லா விட்டால் அலையை இப்படி ஒரு தனிப் பொருளாக மனிதனால் பார்க்கவே முடியாது.

அதேபோல் நாமும் மிருகங்கள், மரம், மனிதர்களை நம் மனம் வழியாகத்தான் பார்க்கிறோம். மனம் இருப்பதால் தான் வெளி உலகில் தனித்தனி பொருட்களைப் பார்ப்பது சாத்தியமாகிறது. மனம் இல்லாவிட்டால் பொருட்களைப் பார்ப்பது சாத்தியமில்லை. நம் உடல் இங்கே முடிகிறது. நாற்காலி இந்த இடத்தில் இருக்கிறது என்பன போன்ற எந்த வேறுபாடும் உணரமுடியாது. எல்லாம் ஒன்றாக உணரப்படும்.

இதனால்தான், தியானத்தில் ஆழ்நிலைக்குச் சென்றவர்கள் எல்லோரும் ஒன்றுபோல் கூறுவது, 'நான் திடீரெண்டு மறைந்து விட்டதுபோல இருந்தது' என்பார்கள்.

இதற்கு காரணம் மனம் செயலற்றுப் போவதுதான். மனதை மனிதன் கடந்து விடுவது தான். இந்த அனுபவம் மனோமயக் கோஷத்தை தாண்டிச் செல்லும் அனுபவம்.

அடுத்து, உடல், மனம் தாண்டிய நம்முள் இருக்கும் இறை சக்தியைப் பற்றிப் பார்க்கலாம். மனித உடலின், வெளியில் இருக்கக்கூடிய அடுக்கில் உருவாகக் கூடிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு அலோபதி மருத்துவம்தான். எலும்பு முறிந்தால், அவர்களிடம்தான் கட்டுப் போடவேண்டும். ஆனால் கட்டுப்போட்டபின், அதைக் குணமாக்குவது அவர்கள் கையில் கிடையாது.

மருத்துவர்கள் மத்தியில் மிகச் சிறந்த வாசகம் ஒன்று உண்டு. Doctor Stitches, God Heals. 'மருத்துவன் தைக்கிறான், கடவுள் குணமாக்குகிறான்'. மருத்துவரால் அதிகபட்சம் அறுக்க முடியும் தைக்க முடியும். குணமாக்குவது என்பது கடவுளால்தான் முடியும்.

கடவுள் என்பது என்ன?

> கடல் என்கிற அவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தின் ஒரு சிறு வெளிப்பாடுதான் கடல் அலை. அதேபோல், ஆத்ம சக்தி என்கிற பெரிய சக்தியுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான் மனித உடல்.

எங்கும் நிறைந்திருக்கும் தூய சக்தி. கடவுள் என்பது நாம் நினைப்பது போல் ஒரு தனி ஆளோ, தனி அம்சமோ அல்ல.

இந்த தூய சக்தியோடு தொடர்பு நமக்குக்
கிடைத்தால், இந்த இளமையாயிருத்தல் என்பது
மிக எளிதாக நடக்கும். கடவுள் சக்தி, இறை
சக்தி, பராசக்தி என்பது அடுக்கு அடுக்காக
நம் உடலுக்குள் இருக்கிறது. அது ஒவ்வொரு
அடுக்கிலும் வடிகட்டி, வடிகட்டி வெளியில்
வருகிறது. உள்ளே ஆழமான மையத்தில்
இருக்கிற ஆனந்தமயக் கோஷத்தில், ஏராளமாக

அந்த இறைசக்தி ஊற்றுபோல பொங்கி வழிந்து கொண்டிருக்கும். அடுத்து விஞ்ஞான மயக்கோஷத்துக்கு வரும்பொழுது கொஞ்சம் குறையும். அப்படி ஒவ்வொரு அடுக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் குறைந்து கொண்டே வரும்.

◆ அன்னமய கோஷத்துக்கான மருத்துவமுறை - அலோபதி.

◆ பிராணமய கோஷத்துக்கான மருத்துவமுறை - யோகாசனம், ப்ராணாயாமம்.

◆ மனோமய கோஷத்துக்கான மருத்துவமுறை - ஹோமியோபதி.

◆ விஞ்ஞானமய கோஷத்துக்கான மருத்துவமுறை - இயற்கை மருத்துவம், ஆயுர் வேதம்.

◆ ஆனந்தமய கோஷத்துக்கான மருத்துவமுறை - ஆனந்தா ஹீலிங்.

(The Healing touch of Guru, or the Healling Energy of Divine Through meditation) இறைசக்தியின் தொடுதல். இந்த முறையில்தான் இந்த ஆனந்தகந்தச் சக்கரம் (ஆனந்த மயக் கோஷம்) சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை, உபாதைகளைச் சரி செய்ய முடியும்.