KAILASA Library/தியானம்/1. தியானம் ஒரு மருந்தாக...Sign in
தியானம்

1. தியானம் ஒரு மருந்தாக...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

♦ மருத்துவம் (MEDICATION) என்றால் என்ன?

மருத்துவம் என்றால் உடலின் உள்ளே உள்ள நோய்க்கு வெளியிலிருந்து மருந்து கொடுப்பது.

♦ தியானம் (MEDITATION) என்றால் என்ன?

தியானம் என்றால் உடலின் உள்ளே உள்ள பிரச்சினைக்கு காரணமான வஸ்துவை வெளியே துரத்துவது.

இதுதான் மருத்துவத்திற்கும் தியானத்திற்கும் உள்ள வித்தியாசம்.

மருத்துவ மேலைநாட்டு இறக்குமதி, தியானம் கீழை நாட்டில் பிறந்து, உலகம் முழுவதும் பரவி, உலகம் முழுவதையும் காத்துக்கொண்டிருப்பது.

மருந்து, தியானம் இவை இரண்டின் இறுதியான குறிக்கோள் என்வென்றால் "ஆரோக்கியம்" பெறுவதுதான். இதுவரை நம் எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.

ஆரோக்கியத்தைக் கொடுத்தே ஆகவேண்டுமென்பது மருந்தின் கட்டாயம்.

தியானத்திற்கு அந்த கட்டாயம் கிடையாது.

தியானத்தின் குறிக்கோள் வேறு. அது இறுதியான ஆனந்தத்தை, பேரானந்தத்தை கொடுப்பதுதான்.

மருந்தின் பக்கவிளைவு - நோய்கள்.

தியானத்தின் பக்கவிளைவு - குணமடைதல்.

நோயைக் குணமாக்குவதற்காக, தியானம் உருவாக்கப்படவில்லை. நோயில்லாமல் வாழ்ந்த மக்கள், இதற்குப் பிறகு வாழ்க்கையில் என்ன இருக்கிறது? அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்று தேடியபோதுதான் 'தியானம்' என்ற அற்புதமான முறை உருவானது.

சங்கரர் சொல்வார், "நம் மனம் திரும்பத்திரும்ப செய்யக் கூடிய ஒரே செயல், "அடுத்தது என்ன? அடுத்ததென்ன?" ... (ததக்கிம், ததக்கிம், ததக்கிம். ததக்கிம் என்றால் "அடுத்தது என்ன?" என்று பொருள்) திரும்பத் திரும்ப இந்த ஒன்றைத்தான் மனம் நினைத்துக் கொண்டேவிருக்கும்" என்பார்.

"நான் நன்றாக இருக்கிறேன். மற்றவர்களுக்கு இருக்கக் கூடிய உபாதைகள் எனக்கில்லை. இதற்கு அடுத்து என்ன இருக்கிறது?" என்று கேட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட முறைதான் தியானம்.

மருத்துவம்

மருத்துவத்தை எடுத்துக் கொண்டால், அது உடலை பகுதி பகுதியாகக் கூறுபோட்டுப் கை தனியாக, கால் தனியாக... என்று கூறுபோட்டுப் பார்க்கும். பல் மருத்துவத்தை எடுத்துக்கொண்டால், அதிலேயே மொத்தம் 7 துறைகள் இருக்கின்றன. ஒரே வாய்க்கு 7 துறைகள்?! அந்த 7 துறைகளும் கொஞ்சம் உடைந்து இப்போது 9 சிறப்புப் பாடத் திட்டங்களோடு 9 துறைகளாகி இருக்கின்றன. அந்த ஒன்பதும் இன்னும் கொஞ்சம் உடைந்து பதினோறு துறைகளாக மாறப்போகின்றன. இது இங்கே நாம்

  • இந்தியாவில்.

"அமெரிக்காவில் நிபுணத்துவம் இன்னும் பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது," என்று ஒரு பல் மருத்துவ பக்தர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். இப்படிப் பிரித்து.. பார்த்தால், எதை உருப்படியாகப் பார்க்க முடியும்? வெறுமனே பல்லைப் பற்றி படிக்க மட்டும் 32 வயதாகி விடலாம்! 32 பற்களைப் பற்றிப் படிக்க 32 வருடங்கள் முடிந்துபோகும். இந்தச் சிறு நிபுணத்துவத்தால் உடம்பு முழுவதையும் எப்படி குணமாக்க முடியும்?

வேண்டுமானால் முன்னால் இருக்கிற நான்கு பற்களை, சிறப்புப் பிரிவில் கவனித்து அழகாக்கலாம்... முழு உடலை யார் பார்ப்பது? இதுதான் இன்றைய நவநாகரிக மருத்துவத் தின் பல இயலாமைகளுக்கும் காரணம். ஏன் என்றால், உடலை வெளியிலிருந்து அணுகுகிறார்கள். முழு அணுகுமுறையுமே வெளியிலிருந்துதான் உள்ளே போகிறது. வெளியிலிருந்து உள்ளே போக வேண்டியதாக இருப்பதால்தான், பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. வாய்க்கு ஒருவர், கண்ணுக்கு ஒருவர், எலும்புக்கு ஒருவர் என்று.

> நோயை
> குணமாக்குவதற்காக
> தியானம்
> உருவாக்கப்படவில்லை.
> நோயில்லாமல் வாழ்ந்த
> மக்கள், இதற்குப் பிறகு
> வாழ்க்கையில் என்ன
> இருக்கிறது? அடுத்தது
> என்ன? என்று
> தேடியபோதுதான் தியானம்
> என்ற அற்புதமான முறை
> உருவானது.

ஆனால் தியானத்தின் அணுகுமுறையோ உடலின் உள்ளுக்குள் இருந்து வெளியே பார்ப்பது.

தியானம் உடலை முழுமையாக அணுகுகிறது. தலைக்கு ஒரு தியானம். கைக்கு ஒரு தியானம். வயிற்றுக்கு ஒரு தியானம் என்றெல்லாம் இல்லை. எந்த தியானம் செய்தாலும் உடல் முழுவதும் சக்தி பரவும். முழு உடலும் பலன்பெறும்.

நிபுணத்துவம்! நிபுணத்துவம்! என்று மருத்துவம் கிளை விட்டு வளர்ந்ததால் மருத்துவ அறிவியல் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. ஆனால் மருத்துவம் வளரவில்லை.

மொத்த உடலையும் ஆராய்ந்து மருத்துவம் செய்யும் நிபுணர்கள் கனவில்கூட சாத்தியமில்லை என்னும் அளவுக்கு நிபுணத்துவம் கிளைகளாகப் பிரிந்து வளர்ந்து விட்டிருக்கிறது.

உடலில் நோய்கள் ஏற்படுவது தனிப்பட்ட உறுப்புகள் சம்பந்தப்பட்டது அல்ல - மொத்த உடல் சம்பந்தப்பட்டது.

பல நாள் ஆரோக்கியக் கேட்டின விளைவுதான், ஒரு நாள் நோயாக வெளிப்படுகிறது.

நோயுண்ட பாகத்திற்கு மாத்திரம் மருத்துவம் செய்வதால் நோயின் காரணத்தைச் சரி செய்ய முடியாது. உடலைத் துண்டு, துண்டாக பிரித்து ஆராய்ந்து மருத்துவம் செய்வதால் நோயின் மூலகாரணத்தை எளிமையாக அணுகும் முறை வழக்கத்திலிருந்து மறைந்துவிட்டது.

உடலில் நோய்கள்
ஏற்படுவது தனிப்பட்ட
உறுப்புகள் சம்பந்தப்பட்டது
அல்ல. மொத்த உடல்
சம்பந்தப்பட்டது.

பல நாள் ஆரோக்கியக்
கேட்டின் விளைவுதான்,
ஒரு நாள் நோயாக
வெளிப்படுகிறது.

இப்படித் துண்டு துண்டாகப் பிரித்து ஆராயும்முறை ஏன் உருவானது?

காரணம், உடலில் பல சூட்சமங்கள் ஒளிந்திருப்பதுதான். நமது உடலை, நாம் நினைக்கிற மாதிரி ஒரே உடலென்று சொல்லிவிட முடியாது. உடல், உயிர், மனம் என்ற மூன்று மாத்திரம்தான் இருக்கிறது என்றும் சொல்லிவிட முடியாது.

நமது உடலுக்குள்ளே ஐந்து அடுக்குகள்
இருக்கின்றன. அந்த அடுக்குகளை 'கோஷம்'
என்று சொல்வார்கள்.

கோஷங்கள்

(1). அன்னமயக் கோஷம்,
(2). பிராணமயக் கோஷம்,
(3). மனோமயக் கோஷம்,
(4). விஞ்ஞானமயக் கோஷம்,
(5). ஆனந்தமயக் கோஷம்

  • இப்படி நமது உடல் ஐந்து அடுக்குகளாகப் பிரிந்து இருக்கிறது. ஒரே ஒரு உடல் இப்படி ஐந்து அடுக்காகப் பிரிந்திருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கும். ஏனென்றால் இது மெய்ஞானம். மெய்ஞானத்திற்கு இணைகோடுபால விஞ்ஞானம் என்ற ஒரு துறையும் இருக்கிறது. அந்தத் துறையின் மூலம்தான் எல்லாவற்றையும் நாம் முட்டி மோதிப் படித்துக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானம் சொல்கிறபடியே சொன்னால், கோஷங்களை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

உதாரணத்திற்கு ஒரு வயர்.

மெய்ஞானம் என்று ஒன்று உண்டு. மெய்ஞானத்தைக் கல்வியாக கற்றுக் கொடுக்கிற அமைப்புக்குப் பெயர்தான் குருகுலம். அந்தக்கால – குருகுலத்தில் குருவுக்கு கால்பிடித்து விடவோ, துணி துவைத்துப்போடவோ அங்கே சீடர்கள் இருக்கவில்லை. மெய்ஞானம் பற்றிக் கற்றுக் கொள்வதற்காகத்தான் சீடர்கள் அங்கே இருந்தார்கள்.

  • வயருக்குள்ளே என்ன இருக்கிறது?

ஒரு செப்புக் கம்பி.

  • அந்த செப்புக் கம்பிக்குள்ளே என்ன இருக்கிறது?

மின்சாரம்.

  • மின்சாரம் எதனால் ஆனது?

எலக்ட்ரான்களால்.

  • எலக்ட்ரான்கள் எதனால் ஆனது?

எலக்ட்ரான்கள் செய்திகளாலும், அதிர்வுகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது.

  • அந்த செய்திகளும், அதிர்வுகளும் எதனால் ஆனது?

அவை சக்தியால் ஆனவை.

மேற்கூறிய உண்மைகள் படித்தவர்களுக்குப் புரியும். இதையே படிக்காதவர்களிடம் சொல்லியிருந்தால், சொல்ல ஆரம்பிக்கும் போதே சிரித்திருப்பார்கள். இந்த வயருக்குள்ளே ஐந்து பொருள்கள் இருக்கின்றன என்று சொன்னால் சிரிப்பார்களா, இல்லையா? ஆனால் உங்கள் எல்லோருக்கும் விஞ்ஞானம் தெரியும். விஞ்ஞானம் தெரியுமென்பதால் நான் சொன்னதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதேபோல மெய்ஞானம் என்று ஒன்று உண்டு. மெய் ஞானத்தை கல்வியாக கற்றுக் கொடுக்கிற அமைப்புக்குப் பெயர்தான் குருகுலம். அந்தக்கால குருகுலத்தில் குருவுக்கு கால் பிடித்து விடவோ, துணி துவைத்துப்ப போடவோ அங்கே சீடர்கள் கிடையாது. மெய்ஞானம் பற்றிக் கற்றுக்கொள்வதற்காகத்தான் சீடர்கள் அங்கே இருந்தார்கள்.

வாழ்க்கையில் இறுதியாக நாம் எதைத் தேடுகின்றோம்? என்பதுகூட சரியாகத் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம் - அதைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கான கல்விதான் குருகுலக் கல்வி.

குருகுலக் கல்வி என்கிற அமைப்பு, கீழே நாட்டு அமைப்பு. இப்போது அந்த அமைப்பையே வெட்டி விட்டார்கள். வெளி நாட்டவர்கள் இந்தியாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் படையெடுத்து வந்தபோது, இந்த அமைப்புகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டார்கள். குருகுலத்தை அழித்துவிட்டு, மெய்ஞானத்தைத் துடைத்து, அதன்மேல் அஞ்ஞானம் என்ற சாக்கடையைப் பூசிவிட்டார்கள்.

'வாழ்க்கையில் இறுதியாக நாம் எதைத் தேடுகிறோம்? என்பது கூட சரியாகத் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம். அதைக் கண்டுபிடித்துக் கொடுப்பதற்கான கல்விதான் குருகுலக் கல்வி.

அறிவியல் உருவானது ஒரு நல்ல நோக்கத்தில்தான். ஆங்காங்கே குட்டிக் குட்டிப் போலி மருத்துவர்கள் இப்போது சில இடங்களில் இருப்பதைப்போல, அந்தக் காலத்திலும், மருத்துவர்கள் என்கிற பெயரில் போலி நபர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அந்த போலி ஆட்கள் நிறையப் பேர் இருந்தபோதுதான், 'ஹிப்போகிராட்ஸ்' என்ற ஒரு மனிதர் புதிய முறை ஒன்றை உருவாக்கினார்.

அவருடைய அனுபவத்தால், அவர் கொடுத்த முதல் விதி - 'உதவி செய்யமுடியாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாதே' என்பதே. அவர்தான் இன்றைய அலோபதி மருத்துவ அறிவியலின் தந்தை. ( அலோபதி என்பது நமக்கு தெரிந்த ஆங்கில மருத்துவம்தான்.) 'Do No Harm' என்று ஆரம்பித்தார். ஏனென்றால் அவர் வாழ்ந்த இடத்தில் மெய்ஞானம் இல்லை.

அந்தச சூழ்நிலையில், ஏதோ ஒரு வகை புத்திசாலித்தனம் உருவாகியே ஆகவேண்டிய கட்டாயம். உருவாகவில்லையென்றால், ஏதோ ஒரு வகையில் மக்கள் எல்லாம் வீணாகிவிடுவார்கள். அவர்களைக் காப்பாற்றியாக வேண்டும். இதையடுத்து உருவாக்கப்பட்ட முறைதான் அலோபதி.