KAILASA Library/இன்று பிறக்கட்டும்/5000 வருட கனவு கனவாகவே இருப்பதேன்?Sign in
இன்று பிறக்கட்டும்

5000 வருட கனவு கனவாகவே இருப்பதேன்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு சிறிய கதை...

ஒரு நாட்டில் பொதுவுடைமைக் கொள்கை வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த பொதுவுடைமைப் பற்றி பெரிய பேச்சாளர் மேடையில் வீராவேசமாக பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது, கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து திடீரென்று கேள்வி கேட்கிறார்: "என்னய்யா பொதுவுடைமை? பொதுவுடைமனு சொல்றியே... ஒருவேளை உனக்கு ரெண்டு வீடு இருந்தால், அதில் ஒரு வீட்டை மற்றவருக்குக் கொடுப்பாயா?"

பேச்சாளர் சொல்கிறார், 'சத்தியமாகக் கொடுத்துவிடுவேன்'

'இரண்டு கார் இருந்தால் ஒன்றை மற்றவருக்குக் கொடுப்பாயா?'

'நிச்சயம் கொடுத்துவிடுவேன்'

"ஒருவேளை, இரண்டு கோழி வைத்திருந்தால், அதில் ஒன்றை மற்றவருக்குக் கொடுப்பாயா?"

"இல்லை, அது மட்டும் முடியாதுங்க"

"ஏனப்பா? கார் தருகிறேன், வீடு தருகிறேன் என்கிறாய், கோழி கொடுக்கக்கூடாதா?"

"இல்லை, கோழி நான் வைத்திருக்கிறேன், அதனால்தான்" என்றார்.

அவரிடத்தில் காரோ, வீடோ இல்லை, அதனால் கொடுப்பது எளிது, ஆனால் கோழி அவரிடத்தில் உண்மையாகவே உள்ளது. அதனால் அவரால் தரமுடியவில்லை. அதாவது, தத்துவங்களும் கருத்துக்களும், வெறும் வார்த்தையாகவும், மேடைப் பேச்சுக்காகவுமே உபயோகப்படுவது என்று