புதுயுகத்தை படைக்கப்போவது யார்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வரலாற்றை ஆராய்ந்தாலும், மூவாயிரம் ஆண்டுகளுக்குள், ஐந்தாயிரம் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. இவை எல்லாமே, புதுயுகத்தை நாம் படைப்போம் என்ற கருத்தை மக்களிடம் சொல்லி தலைவர்கள் நடத்தியவை. ஆனால் புதுயுகம் படைக்கப்படவில்லை. காரணம் என்னவென்றால் தவறான கோணத்திலிருந்து இந்தக் கருத்தை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள்.
புதுயுகம் என்னும் கருத்து, தனிமனித மாற்றத்தால்தான் நடக்குமே தவிர சமுதாய மாற்றத்தினால் நடக்காது. சமுதாய மாற்றம் என்ற ஒன்றே இல்லை. சமுதாயப் புரட்சி என்பதே தன்னைத் தலைவனாக உயர்த்திக் கொள்வதற்காக மனிதர்கள் பேசுகின்ற உபயோகமில்லாத வார்த்தைகள். தனி மனித எழுச்சியில் மட்டும்தான் “புதுயுகம்” படைக்க முடியும்.
ஒவ்வொரு தனி மனிதனும், தனக்குள் திரும்பிப் பார்க்கும் போதுதான், தனக்குள் மாற்றத்தைக் கொண்டுவரும்போது மட்டும்தான் புதுயுகம் மலரமுடியும்.
Tனக்குள் மாற்றத்தைத் தருகின்ற நுட்பத்தை மனிதர்களுக்கு கொடுக்கின்ற தலைவர்களால்தான் புதுயுகத்தை படைக்கும் தலைவர்களாக மாற்றமுடியும். மற்றவர்கள் தங்களுக்கு மட்டும் வேண்டுமானால் டூவீலரிருந்து காருக்கும், காரிலிருந்து ஹெலிகாப்டருக்கும் என தனிநபருக்கு புதுயுகம் வரும். ஆனால் மக்களுக்கு புதுயுகம் வராது.