புதுயுகத்தை படைக்கும் தகுதி பெற்றவராகுங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மக்களை தன்னுள் திரும்பிப் பார்க்க வைக்கும் உந்து சக்தியாக இருக்கும் தலைவர்கள் மட்டும்தான் மக்களுக்குப் புதுயுகத்தை அளிக்கமுடியும்.
இரண்டு விஷயங்களை நாம் ஆழ்ந்து நோக்கவேண்டும்.
ஒன்று: ஒரு கருத்தை சொல்வதன் மூலமாக அல்லது பேசுவதன் மூலமாக நம்முடைய சமுதாய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.
இரண்டு: நமக்கு முன்னால் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முடியும்.
ஒரு கருத்தை அடுத்தவருக்கு புரிய வைக்கும் தன்மை வந்தால் புதுயுகம் பிறக்கும்.
இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சத்சங்கம் நடந்தது. அதில் ஒரு அன்பர் கேள்வி கேட்டார்.
"நீங்கள் என்ன சுவாமி, நடைமுறை தமிழில் பேசுகிறீர்கள்.
ஒரு ஞானி என்பவர் சிக்கலான வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசுவார்கள். நீங்கள் இவ்வளவு எளிமையாகப் பேசுகிறீர்களே?" என்று கேட்டார்.
அதற்கு நான் சொன்னேன், "பல அகராதிகள் புரட்டிப் பல எளிய வார்த்தைகளைத் தெரிந்து எளிமையாய் பேசுகிறேன். ஏனெனில் கேட்பவர்களுக்குப் புரியும்படியாக பேச வேண்டும். அவர்களுடைய மொழியில் பேசினால் தான் அவர்களுக்கு அந்தக் கருத்து புரியும். என்னுடைய அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்றால், பெரிய பெரிய புரியாத வார்த்தைகளைப் போட்டு பேசினால் நீங்கள் 'இவர் ரொம்ப படிச்சவர் போல, அவர் சொன்னது புரியவேயில்லை, அவர் ரொம்ப பெரியவர்" என்று நினைப்பீர்கள்.
புரியாத வார்த்தைகளைப் உபயோகித்து மக்களை வசீகரிப்பது மிகவும் சுலபம். ஏனெனில் மனிதனுக்குள் இருக்கும் அடிப்படை குணம் தனக்கு ஒன்று புரியவில்லை என்றால் அது பெரிய விஷயம் என்று நினைத்துக் கொள்வது. அதனால்தான் நாம் பல நேரங்களில் சடங்குகளை மிகவும் பெரியது என நினைக்கிறோம். அங்கு உண்மையில் பெரிதாக ஒன்றும் நடைபெறுவதில்லை.
பெரிய பெரிய வார்த்தைகளைப் பிரயோகம் செய்தால் தன்னுடைய அந்தஸ்தை வேண்டுமென்றால் உயர்த்திக்கொள்ளலாம், ஆனால் அது கேட்பவர்களின் அந்தஸ்தை உயர்த்தாது. நான் அவருக்குச் சொன்னேன், 'ஐயா! நான் என்னுடைய அந்தஸ்தை உயர்த்த நினைத்தால் பெரியப்பரிய வார்த்தைகளை உபயோகிக்கலாம். அவ்வாறு செய்தால் நான் பேசிக்கொண்டிருப்பேன், நீங்கள் வெறுமனமே கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு என்ன? ஏது? என்று புரியாது", என்று சொன்னேன்.