எது சரி? எது தவறு?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உண்மையில் ஒரு கருத்து தனக்கு புரிந்திருந்தால் மற்றவர்க்கு புரியவைக்கும் பக்குவம் தானாக வரும்.
முட்டாளை அறிவாளியாக்கிய ஞானி:
பெரிய தத்துவவாதியாக யாருக்கேனும் ஆகவேண்டுமெனில் நான் சில விஷயங்களைச் சொல்கிறேன், செய்யுங்கள். உங்களை அனைவரும் புகழ்வர். இதை சில கதைகள் மூலம் உங்களுக்குப் புரிய வைக்கிறேன்.
ஒரு கிராமத்திலிருந்து ஒரு மனிதனை அத்தனை பேரும் முட்டாள் என்று
சொல்லிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சொல்வதால் அவனும் 'தான் ஒரு முட்டாள்' என்று நம்பத் தொடங்கி விட்டான். அப்போது, ஒருநாள் அவ்வழியாக ஒரு ஞானி வந்தார். அவரிடம் இவன், "ஐயா! எல்லோரும் என்னை முட்டாள் என்கின்றனர். எனக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.
அதற்கு ஞானி சொன்னார், "கவலைப்படாதே. ஒரே வாரத்தில் இந்தப்பட்டத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன், அதை மட்டும் செய்."
"ஒரே வாரத்தில் விடுபடவைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தலைகீழாக நிற்கச் சொன்னாலும் நான் நிற்கிறேன்" என்று கண்கள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டான்.
ஞானி ஒரு சின்ன உபதேசம் செய்தார். "அப்பனே! ஊரில் யார் என்ன சொன்னாலும் அதை விமர்சனம் செய்.
உதாரணத்திற்கு யாராவது "இந்தச் சந்திரன் என்ன அழகாக இருக்கிறது! " என்றால் நீ உடனே, "என்னய்யா அழகு அதில்? கருப்பு கருப்பாக திட்டு திட்டாக அதில் இல்லையா?" என்று சொல்.
இன்னும் யாராவது, "ஆஹா! என்ன அழகான ரோஜா செடி" என்று சொன்னால், நீ "என்ன அழகு? அதில் முழுவதும் குத்தும் முள் இல்லையா? அது அசிங்கமாக இல்லையா? கிட்டவே போக முடியாதே!"என்று சொல்.
வேறு யாராவது 'என்ன அழகான வெள்ளைச்சுவர்!" என்று சொன்னால், "என்ன அழகு அதில்? சுவரென்றால் வெள்ளையாகத்தான் இருக்கும்! இதில் அழகு எங்கு இருக்கிறது?" என்று கேள்.
யார் என்ன சொன்னாலும், நீ அதை விமர்சனம் செய். இதை மட்டும் நீ செய்' என்று சொல்லிவிட்டு அந்த ஞானி சென்று விட்டார்.
ஒருவாரம் கழித்து அந்த ஞானி அம்மனிதனைக் காண வந்தார். தூரத்திலேயே அவர் பார்த்த காட்சி, எந்த மரத்தடியில் அந்த முட்டான் இவரை சந்தித்தானோ, அதே மரத்தடியில் ஒரு மேடையில் அந்த முட்டாள் அமர்ந்திருக்க கீழே அந்த ஊர்மக்கள் அவன் சொல்வதைத் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஞானி அவனருகில் வந்து அவனிடம் பேச விரும்புவதாகச் சொன்னார். அதற்கு அவன், "அதெல்லாம் பிறகு பேசலாம். இப்போது வேண்டுமென்றால் சொற்பொழிவைக் கேளுங்கள்" என்றான்.
சொற்பொழிவு முடிந்ததும் அவன் ஞானியை ஒரு தனியறையில் சந்தித்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான், 'ஐயா! நல்ல யோசனை சொன்னீர்கள், ஒரே வாரத்தில் நான் எல்லாவற்றையும் விமர்சனம் செய்தபோது, மக்கள் தானாகவே என்னை புத்தिशाளி என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். நீங்களும் try பண்ணிப் பாருங்கள்" என்று சொன்னான்.
இரண்டாவது விஷயம்!
எல்லாவற்றையும் பிரச்சனையாகக் காண்பிக்க வேண்டும். ஆனால் தீர்வு கொடுக்கக்கூடாது.
அதாவது பெரிய தத்துவவாதியாகமாறுவதற்கு எளிய வழிகள். 'இது சரியில்லை, அது சரியில்லை' என்று எல்லாவற்றையும் பிரச்சனையாகக் காட்டவேண்டும். ஆனால் தீர்வு கொடுக்கக் கூடாது. தீர்வு தெரிந்தாலே அவர்கள் தத்துவவாதியாக மாறமாட்டார்கள் ஞானியாக மாறிவிடுவார்கள். தத்துவவாதிகள் வேறு, ஞானிகள் வேறு.
மூன்றாவது விஷயம்:
நம்மால் கடைபிடிக்க முடியாததெல்லாம் மற்றவர்களை கடைபிடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் செய்தால் பெரிய அறிவாளி, தத்துவவாதி என்று பெயரெடுக்கலாம்.