வரலாற்றுச் செய்தி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
டேல் கார்னகி என்பவர் அமெரிக்காவின் மிகப்பெரிய எழுத்தாளர். அவர் எழுதியிருக்கின்ற இரு பிரபல புத்தகங்கள்: "How to win friends and Influence people?" மற்றும் "How to stop worrying and start living?" அதாவது, 'நண்பர்களை உருவாக்குவதும், நாம் சொல்வதை மக்களை கேட்கவைப்பதும் எப்படி?' என ஒரு புத்தகம்.
'கவலைகளை விட்டுவிட்டு நிம்மதியாக வாழ்வது எப்படி?' என மற்றொரு புத்தகம்.
உலகத்திலேயே பைபிளுக்குப்பிறகு அதிக புத்தகங்கள் விற்றிருப்பது இவருடைய இந்த புத்தகங்கள்தான்.
Mமுதல் புத்தகத்தில் 'தற்கொலை எண்ணத்தை விட்டுவிட்டு எப்படி இனிமையாக வாழ்வது?' என்று சொல்கிறார், இரண்டாவது புத்தகத்தில், 'எப்படி உங்கள் மனைவியோடும், சமூகத்தோடும் நல்ல உறவை வளர்த்துக்கொள்வது?' என்று சொல்கிறார்.
அவருடைய வாழ்க்கை வரலாறை யாராவது படித்திருந்தீர்களானால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர் எந்த இரண்டு காரணங்களுக்காக புத்தகங்கள் எழுதினாரோ அதே காரணத்தால் அதாவது, மனைவியோடு நிம்மதியாக வாழமுடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார்.
இது சத்தியமான உண்மை.
தன்னாலேயே கடைபிடிக்க முடியாத கருத்துக்களை அவர் மக்களை கடைபிடிக்கச் சொன்னார்.
பெரியபெரிய வார்த்தைகளை உபயோகித்தால் பதவியை வேண்டுமானால் பிடிக்கலாம். பதவி ஆசைவருவதே தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காகத்தான். அதேபோல் மிகவும் பயந்தவர்கள்தான் கூட்டத்திலிருந்து கல்லெறிவது போன்ற செய்கைகளைச் செய்பவர்கள். அவர்களைத் தனியே அழைத்து விசாரித்தால் மிகவும் பயந்தவர்களாக இருப்பார்கள். இதற்கு Mob psychology என்று பெயர்.