KAILASA Library/இன்று பிறக்கட்டும்/குற்ற சதவிகிதம் குறையும்Sign in
இன்று பிறக்கட்டும்

குற்ற சதவிகிதம் குறையும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு பெரிய சினிமா தயாரிப்பாளரிடம் ஒரு உதவியாளர், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசி கிட்டட்ட 50 லட்சத்திற்கான காசோலையை வாங்கிச் சென்றார். அந்த தயாரிப்பாளர் சாதாரணமாக ஒரு சாதுக்கு கூட ஒரு ரூபாய் தானம் செய்யாதவர். கேட்டால், சாதுக்களுக்கு உதவி செய்தால் அவர்கள் சோம்பேறியாகி விடுவார்கள் என்பார்.

பெரியபெரிய வார்த்தைகளை
உபயோகித்தால் பதவியை
வேண்டுமானால் பிடிக்கலாம். பதவி
ஆசைவருவதே தன்னுடைய தாழ்வு
மனப்பான்மையை
மறைப்பதற்காகத்தான். அதேபோல்
மிகவும் பயந்தவர்கள்தான்
கூட்டத்திலிருந்து கல்லெறிவது
போன்ற செய்கைகளைச்
செய்பவர்கள். அவர்களைத் தனியே
அழைத்து விசாரித்தால் மிகவும்
பயந்தவர்களாக இருப்பார்கள்.
இதற்கு Mob psychology
என்று பெயர்.

சாதாரண ஒரு மனிதன் கூட தனக்குத்
தேவையான வார்த்தைகளை அளிப்பதன்
மூலமாக தമ്മിடம் இல்லாத ஒரு தகுதியோ
அல்லது குணமோ அல்லது வாழ்க்கை
முறையோ அல்லது நடக்கப்போகிற ஒரு
விஷயம் நடப்பதாக பிரமையையோ
ஒருவருக்குள் ஏற்படுத்தி அவர்கள்
வாழ்க்கையை தன் கரத்திலே கொண்டு
வந்துவிட முடியும்.

நம் முன்னோர்கள் ஒவ்வொரு
சமுதாயத்தைப் பற்றியும்
யோசித்திருக்கிறார்கள். எல்லா
சமூகத்திலுமே, அந்த சமுதாய விதிகளைக்
கடைபிடிக்காமல் ஒரு விட்டேத்தியாக
இருக்கும் நிலையில் ஒரு 5% மக்களாவது
இருப்பார்கள். இப்படி சமுதாயத்திலிருந்து
விடுபட்ட நபர்கள் சமுதாயத்திற்கு எதிரான
செயல்களை செய்யும் நபர்களாக
மாறிவிடுகிறார்கள்.

நம் முன்னோர்கள், அவர்களுக்கு மரியாதையை கொடுத்து, உணவிட்டு நமஸ்காரம் செய்து அவர்களை சாதுக்கள் என்று சமுதாயத்தில் தனியாக ஒதுக்காமல் ஒரு பாகமாக முன்னிறுத்தி வைத்தார்கள். அதனால் அவர்கள் சமூகக் கேடு செய்பவராக மாறவில்லை. இதனால்தான் மற்ற நாடுகளை விட ...,இந்தியாவில் குற்றசதவிகிதம் குறைவாக உள்ளது.

மனஅழுத்தமும், ஆராய்ச்சி அறிக்கையும்

எந்த எந்த நாடுகளில் எல்லாம் சாதுக்கள் இல்லையோ அந்தந்த நாடுகளில் எல்லாம் குற்றசதவிகிதம் - அதிகமாக உள்ளது. உதாரணமாக அமெரிக்காவில் பொதுவாக ஒரு பிச்சைக்காரன் தன்மை நோக்கி வந்தால் அந்த நபர் பயந்து நடுங்கிவிடுவார். ஏனென்றால் அங்கு பிச்சைக்காரன் சமுதாயத்திற்கு எதிரான நபர்.

நம் முன்னோர்கள் காரணத்தோடுதான் சமுதாயத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் அவனுக்குள் தீவிரவாதமோ மற்ற எண்ணங்களோ எழாது.

அமெரிக்காவில் பெரும்பாலும்
Single Parent என்று
சொல்வார்கள். அதாவது
தாயோ அல்லது தந்தையோ
இருவரில் ஒருவர் உடன்
இருக்க மாட்டார்.

வறுமையில் இருப்பவர்களை மட்டும்தான் தீவிரவாதத்திற்குத் தூண்ட முடியும். இதை முன்கூட்டியே அறிந்த நம் முன்னோர்கள், ரிஷிகள், சமுதாயத்திலிருந்து விடுபட்ட 5 சதவிகிதத்தினரையும் சமூகத்தில் ஒரு அந்தஸ்து கொடுத்து வைத்திருந்தார்கள். இதனால் இவர்கள் தீவிரவாதிகளாக மாற வேண்டிய தேவை இல்லாமல் போனது.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு சமூகவியல் பற்றி ஆராய்ச்சி செய்கின்ற நான்கு மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் தங்களின் ஆராய்ச்சியின் முடிவில்... மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் வாழ்க்கை வெறும் 400 வருடங்கள் தான். ஆனால் அங்கு மன அழுத்தத்திற்காக மருந்து எடுக்கின்ற நோயாளிகளின் அளவு 66% மாக உள்ளது உதாரணமாக 3 நபர்களில் 2 பேர் மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இதே நம் நாட்டில் மன அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 0.6% மட்டும்தான்.

கடந்த 5000 ஆண்டுகளில் குறைந்தது 3000 சமூகவியல் கலாச்சார மாறுதல்களைப் பார்த்துவிட்ட இந்தச் சமூகம் அதேபோன்று வெற்றி நடையிடுவதைப் பற்றி அறிந்து கொள்வதற்காக அந்த மேலை நாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கு நம் நாட்டிற்கு வந்துள்ளது.

அவர்கள் செய்த ஆராய்ச்சியின் போது நம் நம் நாட்டில் பொதுவாக கடைபிடிக்கும் ஒரு 50 விதிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள். அதாவது உதாரணத்திற்கு, 'ஒரு மனைவியோடு வாழ்தல்' அது நம் நாட்டில் 82% ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் பெரும்பாலும் Single Parent என்று சொல்வார்கள். அதாவது தாயோ அல்லது தந்தையோ இருவரில் ஒருவர் உடன் இருக்க மாட்டார்.

இதுபோன்ற குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் 57% . வெளிநாடுகளில் வாகனம், மனை, மனைவி மூன்றையும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். மேலும் 85% பேர் தங்கள் உறவினர்கள் தன்னுடைய உடலை மரணத்திற்கு பின் பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இறக்கிறார்கள். 47% பேர் தன்னுடன் மனம் விட்டு யாரும் சண்டையோட கூட துணை இன்றி இறக்கிறார்கள். இது போன்ற 50 விதிகளை ஆராய்ச்சி செய்ததின் முடிவில் அவர்கள் "இந்திய கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் குறைந்தது 5000 வருடங்கள் உளவியல், மனையியல், மனத்தின் போக்கு போன்றவற்றை ஆராய்ச்சி செய்திருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்கள்.

இதுபோன்ற குடும்பங்களின் எண்ணிக்கை
மட்டும் 57% . வெளிநாடுகளில் வாகனம்,
மனை, மனைவி மூன்றையும் மூன்று
மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக்
கொண்டிருக்கும் கலாச்சாரத்தைப்
பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.
மேலும் 85% பேர் தங்கள் உறவினர்கள்
தன்னுடைய உடலை மரணத்திற்கு பின்
பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு
இறக்கிறார்கள். 47% பேர் தன்னுடன் மனம்
விட்டு யாரும் சண்டையோட கூட துணை
இன்றி இறக்கிறார்கள். இது போன்ற 50
விதிகளை ஆராய்ச்சி செய்ததின் முடிவில்
அவர்கள் "இந்திய கலாச்சாரத்தை
உருவாக்கியவர்கள் குறைந்தது 5000
வருடங்கள் உளவியல், மனையியல்,
மனத்தின் போக்கு போன்றவற்றை
ஆராய்ச்சி செய்திருப்பார்கள்" என்று
தெரிவித்துள்ளார்கள்.

5000 வருடங்களாக எத்தனையோ கலாச்சார தாக்குதல்கள், போர்கள், புதிய தலைமுறைகளை இந்த கலாச்சாரம் கடந்து வந்துள்ளது என்றால் எத்தனை சத்தியங்கள் நிறைந்த உண்மைகள் இருக்கும் என்றெண்ணிப் பாருங்கள்.

மேலும் அவர்கள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட ஒவ்வொரு விதியுமே பல்லாயிரம் வருடங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னார்தான் நடைமுறை வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இந்தியாவில் குறைந்தது 1% பேர் சந்நியாசிகள் இருக்கிறார்கள். அவர்களில் குறைந்தது 0.1% நிச்சயம் ஞானி ஆக முடியும். அதனால் தான் சந்நியாசிகளில் யாரோ ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக இந்த வம்சத்தையே, சமூகத்தையே தவறு சொல்ல முடியாது. காரணம் இவை ஞானத்தையும் நம் நாட்டு கலாச்சாரத்தையும் உயிரோடு வைத்திருப்பதாக உருவாக்கப்பட்ட பாரம்பரியம்.

16

17 அதாவது தன் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காகக் கருத்துக்களை விற்பவர்கள் தன் கருத்துக்களை தான் நடைமுறைப்படுத்தாமல் விற்றதனால்தான் இந்த 'புதிய யுகம்' வெறும் கனவாகவே உள்ளது.

புதிய யுகம் நனவாக மாற வேண்டுமானால் அதற்காக நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை. செய்யாமல் இருக்க வேண்டியதுதான் நிறைய உள்ளது.

ஒருவர் என்னிடம், "சுவாமி நான்கு நாட்கள் தியான முகாம் வைத்திருக்கிறீர்கள், அதை சுருக்கி ஒரு நாளாக குறைக்கக் கூடாதா?" என்று கேட்டார்.அதற்கு "தியானம் என்ன என்பதைக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு நிமிடம் போதும் 'சாட்சியாக இரு!' அது போதும். ஆனால் எது எது தியானம் இல்லை என்பதை தெளிவுபடுத்த தான் நான்கு நாட்கள் தேவை" என்று சொன்னேன்.

இந்த சொற்பொழிவிற்கு முதலில் கொடுத்த தலைப்பு 'இன்று பிறந்தது புதுயுகம்.' ஆனால் அதை 'இன்று பிறக்கட்டும் புதுயுகம்' என்று மாற்றிக் கொண்டுவிட்டேன். ஏனென்றால், 'இன்று பிறந்தது புதுயுகம்' என்றால் அது பிரகடனம் (declaration). ஆனால். 'இன்று பிறக்கட்டும் புதுயுகம்' என்றால் அது யோசனை (Suggestion).