KAILASA Library/இன்று பிறக்கட்டும்/நிஜ சுதந்திரமும், சமுதாய எழுச்சியும்Sign in
இன்று பிறக்கட்டும்

நிஜ சுதந்திரமும், சமுதாய எழுச்சியும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தனிமனித விழிப்பும் எழுச்சியும் சிந்தனையை தூண்டுவதாகதான் கொடுக்கமுடியும். கட்டாயமாக்க முடியாது. ஆனால் சமுதாயப்புரட்சி கட்டாயமாக மாறும்.

பெரும்பாலும் சமுதாயப்புரட்சிகள் சுதந்திரத்திற்காக நடந்தாலும், சுதந்திரத்திற்குப்பின் சுதந்திரமாக இருப்போர் தலைவன் மட்டும்தான்.

ஜோதிடர் ஒருவர் தியான முகாமிற்கு அடிக்கடி வந்து செல்வார். துவக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவர், ஒரு நாள் நான்கு சக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் "என்ன ஐயா விசேஷம்!. நான்கு சக்கர வாகனம் வாங்கியுள்ளீர்களே?" என்று கேட்டேன். அவர், "எல்லாம் லட்சுமி யந்திரத்தின் மகிமை சாமி" என்றார்.

"அப்படி என்ன யந்திரம், அந்த யந்திரம் எப்படி வேலை செய்கிறது? யார் கொடுத்தார்கள்" என்று கேட்டதற்கு அவர், "யாரும் கொடுக்கலை சுவாமி, நான் தான் மற்றவர்களுக்கு கொடுத்தேன்" என்றார்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நாம் வெளிப்படுத்தும் கருத்துக்கள் கட்டாயத்தில் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அது பந்தமாக மாறிவிடும்.

புதியயுகம் என்கிற கருத்துப்படிவம் பல தகுதி இல்லாத மனிதர்களால்

விவேகானந்தர் வாழ்வில் கடைப்பிடித்தது நாம் ஒவ்வொருவருக்குமான ஒரு அருமையான நுட்பமாகும். விவேகானந்தர், "உன்னுடைய தோளில் நீ சுமக்கும் பளுவை, சுமையை அதிகரிக்க அதிகரிக்க உன்னுடைய பலம் அதிகரிக்கும்” என்கிறார்.

இது ஒரு அருமையான தியான நுட்பம்.

விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12 அன்றுதான் 'தேசிய இளைஞர் தினம்' கொண்டாடப்படுகிறது இதே தினத்தில்தான் என்னுடைய 30 வது வயதில் அடியெடுத்து வைத்தேன்.

திருவண்ணாமலை நான் பிறந்த புண்ணிய பூமி.

விவேகானந்தர் வாழ்வில்
கடைப்பிடித்தது நாம்
ஒவ்வொருவருக்குமான ஒரு
அருமையான நுட்பமாகும்.
விவேகானந்தர், "உன்னுடைய
தோளில் நீ சுமக்கும் பளுவை,
சுமையை அதிகரிக்க
அதிகரிக்க உன்னுடைய பலம்
அதிகரிக்கும்” என்கிறார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயமாக,
மாலைவேளையில், இதே மலை, இந்த
சந்திரன் என்னுடைய பிறப்பிற்கு சாட்சியாக
இருந்திருக்கின்றது.

அதேபோல் புதுயுகம் என்கிற கனவை எனக்களித்ததும் இதே ஊர் தான்.

புதுயுகம் படைக்கும் கனவை மட்டும்
கொடுக்காமல், அதை மற்றவர்கள் மேல்
திணிக்கின்ற மன அமைப்பைக் கொடுக்காமல்
தனக்குள்ளேயே பார்க்கின்ற நுட்பத்தைக்
கொடுத்த ஞானபூமி திருவண்ணாமலை.

எல்லோருக்கும் அவர்கள் பிறந்த ஊரில் வளரும்பொழுது புதிய யுகத்தைப் பற்றிய கனவுகளும் கற்பனைகளும் வரும். அதனால் தான் ப்ளாஷ்பேக் வரும் திரைப்படங்களை விரும்பிக்பார்க்கிறார்கள். அவ்வாறான படத்தை, பார்க்கும் போது தான் நம்முடைய ப்ளாஷ்பேக்கையும் அசையோடு ஆனந்தப்படுவோம். குறிப்பாக பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் இவையெல்லாம், இனிமையான நிகழ்வுகளாக மனத்திரையில் ஒட்டிப்பார்ப்போம்.

பெரும்பாலானவர்களுக்கு பிறந்த ஊர் தான் சன்யாசத்திற்கு தடையாக இருக்கக்கூடும். அதனால் தான் பட்டினத்தார், பிறந்த ஊரில் இருக்கக்கூடாது என்றே சொல்கிறார். ஆங்கிலத்தில் ஒரு பழமொழியே உண்டு, "Nobody is profit in their own town". உருவாக்கியது மட்டுமல்லாமல், நாம் பார்த்த சிறுவன் தானே என்று எண்ணாமல் அன்பர்களாகவும், பக்தர்களாகவும் வந்து அமர்ந்திருக்கும் உங்கள் பணிவை மீண்டும் ஒருமுறை வணங்குகின்றேன்.

நான் பலநேரத்தில் நினைப்பதுண்டு. இங்கு அமர்ந்திருக்கும் பலபேர் என்னுடைய ஆசிரியர்கள். நான் பேசும் வார்த்தைகள் எல்லாம் அவர்கள் கற்றுக்கொடுத்த வார்த்தைகள்.

நான் பேசுகின்ற வார்த்தைகள் அவர்களுடைய வார்த்தைகள். அவர்களின் உச்சரிப்பு. ஆனால் அத்துணைபேரும் வந்து உட்கார்ந்து கேட்கிறார்கள். ஆன்மீக விஷயங்களோ அல்லது உலகியல் விஷயங்களோ அல்லது சமூகரீதியில் என பல விஷயங்களிலும் உயர்ந்திருப்பவர்கள் வந்து உட்கார்ந்து கேட்கவேண்டுமென்றால் பெரிய பணிவு வேண்டும்.

உங்களுடைய பணிவே உண்மையில் என்னைப் பணிவாக்குகிறது. அதுதான் உண்மை.

பணிவே மற்றொருவரை பணிவாக்க முடியும். மேலே சொன்ன 'Nobody is profit in their own town' என்ற பழமொழியையே பொய்க்கச் செய்து விட்டார்கள் திருவண்ணாமலை மக்கள்.

பந்தத்திற்கான ஊராக இல்லாமல் முக்திக்கான ஊராக மாறிவிட்டது.