குறை உணர்வு - ஒரு அன்பளிப்பு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நமக்குள் ஞானவிடியல் வரும்வரை நாளை என்பது நடக்கவே நடக்காது. பூமிக்கு வந்துவிட்ட பிறகு ஞானம் அடைவதே லட்சியம் என்பதை மனிதன் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கடவுள் குறை உணர்வை மனதில் வைத்து அனுப்பி இருக்கிறார்.
சிலர் என்னிடம் கேட்பதுண்டு, "சுவாமிஜி, எப்போதும் ஒரு குறைத்தன்மை என்னிடத்தில் இருக்கிறது" என்று வருத்தத்துடன் சொல்வார்கள். அதற்கு நான் சொல்வதுண்டு, "உங்களுக்குக் கடவுளின் ஆசீர்வாதம் நிறைய உண்டு. நிறைவை நோக்கி நீங்கள் ஓடுவதற்காகவே உங்களுக்குள் வைக்கப்பட்டிருக்கும் விதைதான் குறை.
"அர்ஜூன விஷாதயோகம் கீதையின் முதல்
பாகம். அர்ஜூன விஷாத யோகம் என்றால்
அர்ஜூனனுடைய மனஅழுத்தம்.
அர்ஜூனனுக்கு மனஅழுத்தம் ஏன்
உருவாகியது?
ஏனென்றால் அவன் நினைத்ததை எல்லாம்
சாதித்து விட்டான். ஒரு வெளிநாட்டு (NRI)
அன்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.
"சுவாமி எனக்கு ரொம்ப அழுத்தமாக
இருக்கிறது. அதாவது அடைய வேண்டிய
அனைத்தையும் அடைந்துவிட்டேன்.எல்லாம்
இருந்தும் இதெல்லாம் எதற்காக? என்ற
வெறுமை என்னிடத்தில் வந்துவிட்டது."
என்று கேட்டார்.
இன்டியாக்கள் கடும் உழைப்பாளிகள், "சுவாமிஜி நான் 10 வருடத்தில் அடைய நினைத்ததை நான்கு வருடத்திலேயே அடைந்துவிட்டேன். ஆனாலும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" என்றார். இதுதான் 'Depression of success', வெற்றியினால் ஏற்படும் மன அழுத்தம்.
நாம் புத்திசாலித்தனமாக திட்டம் செய்து நம் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் 40 வயதிலிருந்து 45 வயதுக்குள் 'Depression of success' வந்தே தீரும். இல்லாவிடில் ஏதாவது பிரச்சினை நம்முள் இன்னும் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மன அழுத்தம் வரும் போது நம்முன் மூன்று பாதைகள் சந்திக்கின்ற முச்சந்தியின் நடுவில் இருப்பது போன்று இருக்கும்.
(1) அடிமைத்தனம். (Addiction)
(2) தற்கொலை எண்ணம்.
(3) தியானம்
அடிமைத்தனம் என்பது ஆண்கள் குடிப்பது மட்டுமல்ல. பெண்கள் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பது. ஆண்கள் மதுவை ஊற்றி அழுத்தத்தை மூடுகிறார்கள். பெண்கள் தின்பண்டங்களை வாயில்போட்டு அடைத்து மனஅழுத்தத்தை மூடுகிறார்கள்.
குடிப்பது, புகைபிடிப்பதை சமுதாயம் என்றாவது ஒருநாள் தவறு என்று சொல்லும் போது அந்தக்குறுகிய உணர்வினால் மாறிவிட முடியும். ஆனால் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துகொண்டே இருப்பது சாப்பிட்டுக்கொண்டே இவற்றை தவறு என்று சமுதாயம் எதுவும் சொல்லாது. இதுதான் பெரிய தீங்கு. எனவே அடிமைத்தனம் ஒரு பாதை.
அடுத்து நடைப்பிணமாக வாழ்தல் (தற்கொலைக்கு குறைவான தற்கொலை) விவேகானந்தர் "நடைப்பிணமாக வாழ்பவர்கள் தயவுசெய்து அறையை விட்டு வெளியே வராதீர்கள். ஏனென்றால் ஏற்கனவே சமூகத்தில் துக்கம் அதிகமாகத்தான் உள்ளது. அவர்களைப் பார்த்தால் நமக்குச் சிரிப்பு வரும். ஆனால் அவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சிரிக்க மாட்டார்கள்". என்று சொல்வார்.
தற்கொலை இரண்டு விதம். ஒரே நொடியில் முடித்துக் கொள்வது - தைரியசாலிகள் செய்வது. மற்றொன்று மரணம் வரவில்லையே என்று நடைபிணமாக வாழ்வது. இவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பதற்கு காரணம் தொடர்ந்து எரிச்சலைத் தன்னுள்ளே கொண்டிருப்பதால்தான்.
மூன்றாவது பாதை, சில புத்திசாலிகள் மட்டும் எடுப்பது, அது தியானம். வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று ஆழ்ந்து யோசித்து அதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வதவே தியானம்.
ஒரு 'அயனத்திற்காக' வாழ்க்கையைத் தியாகம் செய்வதுதான் தியானம். அயனம் என்றால் பாதை. ஒரு லட்சியம், ஒரு அயனத்தைப் பிடித்து அதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வது. இந்த மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுப்போமானால் "இன்று பிறந்தது புதுயுகம்."
பெரும்பாலானவர்கள் முதலிரண்டு பாதையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது பாதையை தேர்ந்தெடுக்கும் தியானிகள் தான் வாழ்க்கையை முழுமையாக வாழ்கின்றார்கள்.