KAILASA Library/இன்று பிறக்கட்டும்/இலட்சியத்தை நிறைவேற்றும் தியாக உணர்வுSign in
இன்று பிறக்கட்டும்

இலட்சியத்தை நிறைவேற்றும் தியாக உணர்வு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சிறு வயது முதலே நான் கொஞ்சம் கல்வேலை செய்வேன். விக்ரஹங்களை செதுக்கும்போது தான் தெரிகிறது அது எவ்வளவு கடினமென்று?. ஆகவே இங்கு நிற்பது கருங்கல் அல்ல. இதற்காக உழைத்த அத்துணைப் பேருடைய உத்வேகத்தின் கூட்டுப் பலன். உத்வேகம் என்பது லட்சியத்தை நோக்கிய உற்சாகப் பயணம்.

கோவில் ஏன்? கடவுள் ஏன்? என்று கடவுள் என்பது வாதம் செய்கின்ற ஒரு பொருளல்ல. “கடந்து உள் இருந்து அனுபவிக்க வேண்டிய ஒரு நிலை”.

இதைப்பற்றிச் சிலர் வாதம் செய்ய அழைப்பதுண்டு. கடவுள் உண்டா? இல்லையா? என்று கேலியாகக் கேட்பார்கள் என்னைப் பொறுத்தவரை வாதங்களைக் கடந்து நம்முள் இருந்து அனுபவிக்க வேண்டிய நிலைதான் கடவுள். அதுதான் ‘உள் - கட’ = கடவுள்.

அவர்களிடம் எந்த லட்சியத்திற்காக இந்தக் கோயிலை முன்னோர்கள் கட்டினார்கள் என்று தீர்ப்பளிக்கும் அளவிற்கு நாம் பெரிய ஆட்கள் இல்லை என்று சொன்னேன்.

ஒரு லட்சியத்திற்காக இவ்வளவு பெரிய சக்தியை ஒன்று திரட்டி இருக்கிறார்கள் என்றால் அவர்களின் தன்மை உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கின்ற தன்மையையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அது நமக்குள் நடக்குமானால் “இன்று பிறந்தது புதுயுகம்”. இது உண்மை.

ஒருமுறை என்னிடம் ஒருவர் “ஊர் ஊராக 1000, 2000 பேரைக் கூட்டம் கூட்டமாக கூட்டி பேசுவதால் உலகத்தை உங்களால் மாற்றிட முடியுமா? இது எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் தானே சுவாமி?” என்று கேட்டார். அவரிடம், “ஆமாம்பா, கடலில் பெருங்காயம் கரைத்ததினால் கடல் மணக்கிறதோ என்னவோ, கரைத்ததினால் என் கை மணக்கிறது. அதற்காகச் செய்கிறேன்” என்று சொன்னேன்.

அதுபோல் கோவிலைக் கட்டிய ஸ்தபதிகளுக்கு நாம் இந்த கோவில் கட்டி முடிப்போமா? அதை நாம் பார்ப்போமா? இத்திட்டத்தை தொடர முடியுமா? என்று கூடத் தெரியாது. ஏனென்றால் அடுத்த அரசன் வந்து இதே திட்டத்தை தொடர வேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது? கிடையாது. ஆனாலும் எடுத்த லட்சியத்திற்காக வாழ்வைத் தியாகம் செய்கின்ற தியாக உணர்வு, உற்சாகம் அதுதான் புதுயுகத்தை படைக்கும்.

உலகத்தை மாற்றப் புறப்பட்டவர்கள் எல்லோரும் எழுந்த அந்த வேகத்திலேயே வெறிபிடித்து கீழேவிழுந்து இறந்து போயிருக்கிறார்கள், இல்லையேல் வெறுப்பில்

ஆறாவது சினம்.

இயல்வது கரவேல்.

ஈவது விலக்கேல்.

ஐயம் இட்டு உண்

இதைத் தவிர வேறொன்றும் இல்லை. மீதி எல்லாமே மீண்டும் திரும்பச் சொல்லப்பட்டவை தான். அந்த ஐந்தாறு விஷயங்களையே வேறு வேறு மொழியில் பாணியில், சூழ்நிலைகளில் சொல்லிக்கொள்ளலாம்.

நமக்குள் ஞானவிடியல்
வரும்வரை நாளை
என்பது நடக்கவே
நடக்காது. பூமிக்கு
வந்துவிட்ட பிறகு ஞானம்
அடைவதே லட்சியம்
என்பதை மனிதன்
மறந்துவிடக் கூடாது
என்பதற்காகத்தான்
கடவுள் குறை உணர்வை
மனதில் வைத்து அனுப்பி
இருக்கிறார்.

சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. செய்யத்தான் நிறைய உண்டு.

எவ்வளவுக்கவ்வளவு அந்த உற்சாகத்தை நமக்குள் எடுத்துவர முடியும். நமக்குள் பாகமாக மாற்ற முடியும். அவ்வளவு தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. அவ்வளவுதான் நாம் செய்ய வேண்டியது.

புதுயுகம் பற்றிய தத்துவம் வேறு தேவை இல்லை.

புதுயுகம் என்பதை நான் புதிய தத்துவமாகச் சொல்லவில்லை.

பொதுவாகக் கனவை நன்வாக்க ஒரு நுட்பம் தேவைப்படுகிறது. கனவுடன் நுட்பம் சேர்ந்துவிட்டால் அது கருத்தாக மாறிவிடுகிறது. அதைச் செய்ய ஆரம்பித்தால் அது நினைவாக மாறிவிடுகிறது. அவ்வளவுதான்.

அதாவது நிகழ்காலம் நமக்கு புதுயுகத்திற்கான நுட்பத்தைத் தராததினால்தான் கனவாகவே புதுயுகத்தை பிடித்துவைத்துக் கொண்டிருக்கிறோம். நாளை விடியும் என்ற கனவிலேயே வாழ்க்கையை நாம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.