KAILASA Library/இன்று பிறக்கட்டும்/இலட்சியத்தால் எழுந்த ஆலயம்Sign in
இன்று பிறக்கட்டும்

இலட்சியத்தால் எழுந்த ஆலயம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

குறைந்தது இருபது தலைமுறையாக ஸ்தபதிகள் ஒரு கோவிலை கட்டி இருக்கிறார்கள்.

எழுதுவதற்கு உயர்கை பேப்பரோ, கணினியோ இல்லாத காலத்தில் இந்த இருபது தலைமுறையும் எப்படி இவ்வளவு பெரிய கட்டிட அமைப்பின் வரைபடத்தை துல்லியமாக புரிந்து கொண்டார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அத்துனை அறிவும் எப்படி மிகச்சரியாக மாறிவந்தது என்றே புரியவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நாம் கட்டி முடிக்கப்போகின்ற இந்த பொருளை நாம் பார்க்கப்போவதில்லை என்று தெரிந்துகொண்டே கட்டி இருக்கிறார்கள்.

600 ஆண்டுகளாக தொழில்நுட்ப
கலைஞர்களையும், வேலை ஆட்களையும்
உத்வேகத்தோடு வைத்திருந்து ஏதேனும்
பிரச்சனை என்றால் எல்லோரையும்
சமாதானம் செய்து வருவது சாதாரண
விஷயமா? மேலும் இதை
நிறைவேற்றுவதற்கு தேவையான
வளத்தையும் அரசர்கள் தான் கொடுக்க
முடியும். அவர்களையும் சமாதானம்
செய்து 600 ஆண்டுகளாக இந்த
லட்சியத்தை நிஜமாக்கிய பின்
கிடைத்ததுதான் இந்த ஆலயம்.

நாம் மிகவும் சாதாரணமாக இந்தக் கோவிலைப் பார்த்துவருகிறோம்.

> ஒரு லட்சியத்திற்காக
> இவ்வளவு பெரிய சக்தியை
> ஒன்று திரட்டி இருக்கிறார்கள்
> என்றால் அவர்களின் தன்மை
> உற்சாகத்தையும்,
> உத்வேகத்தையும் அளிக்கின்ற
> தன்மையையும் நாம் கற்றுக்
> கொள்ள வேண்டும். அது
> நமக்குள் நடக்குமானால்
> “இன்று பிறந்ததே புதியகம்”.
> இது உண்மை.