கோயில்கள் - உள்ளூலக் பல்கலைக்கழகங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தேன். ஒக்லஹோமா பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகம், 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம். கட்டிடங்கள் அமைந்திருக்கும் நிலப்பரப்பு மட்டும் 22 ஏக்கர். பெரிய பல்கலைக்கழகம் என்பதால ஒரு பேராசிரியர் என்னுடன் வந்து சுற்றிக் காண்பித்துக் கொண்டே விளக்கினார்.
பேசிக்கொண்டிருக்கும்போது மிக மிக எளிமையாக, அதன்பின்னர் ஒரு வாக்கியம் ஒன்றை சொன்னார். 'இது போன்று உங்கள் நாட்டில் ஏதாவது பொருள் பண்ணியிருக்கீங்களா?' என்று சாதாரணமாக நம்மைச் சோம்பேறிகள் என்பது போல பேச்சுவாக்கிலேயே சொன்னார்.
மேலும் அங்கு ஏதோ 20 லட்சம்பேர் ஒன்றுகூடும் சந்திப்பு நடக்கிறது என்றும் சொன்னார். அதை 'பெரிய ஆன்மீகவாதிகள் ஒன்று கூடும் இடம்' (Spritual Gathering) என்று பெருமித்தோடு சொல்லிக் கொண்டார்.
அதுவரை சாதாரணமாக இருந்த நான் சிரித்துக்கொண்டே அவரிடம் "இதைவிட 10 மடங்கு அதிகமான பெரிய கட்டிடங்களை, நீங்கள் மரத்தினாலும், சிமெண்டினாலும் கட்டி இருக்கும் கட்டிடங்களை நாங்கள் கருங்கல்லினால் கட்டி இருக்கிறோம். வந்து பாருங்கள்" என்று சொன்னேன்.
மேலும் அந்த பேராசிரியரிடம் வருடா வருடம் இந்தியாவிற்கு வந்து பாருங்கள். 9 கோடி பேர் ஒரே இடத்தில் சேருவார்கள். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறையும் இதற்காக செய்யும் செலவு ஏறத்தாழ 10 கோடி ரூபாய். ஆனால் இந்தியாவில் பஞ்சாங்கத்தில் ஒரே வரியைப்பார்த்து, 9 கோடி பேரும் ஒரே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள்.
25 ஏக்கர் கருங்கல்லினால் திருவண்ணாமலையில் திருப்பணி செய்திருக்கிறார்கள். எப்படி செய்தார்கள்? என்று உங்களால் இன்னமும் யோசித்து பார்க்க முடியவில்லையா? ஆஸ்ரமத்தில் கூட ஒரு திருப்பணி பண்ணிக்கொண்டிருக்கோம். அது கோவில் என்று கூட சொல்ல முடியாது. மண்டபம் என்று தான் சொல்ல முடியும்."
இத்தனைக்கும் இன்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள், நுட்பங்கள் இருக்கிறது. இத்துனை வசதிகள் இருந்தும் இவ்வளவு சிரமப்பட வேண்டியுள்ளது.
இத்தனைக்கும் அது 20000 சதுர அடி தான். ஆனால் நம் கோவில்கள் எல்லாம் குறைந்தது 600 ஆண்டுகள் முன் கட்டப்பட்டிருக்கிறது. 600 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பே மாஸ்டர் ப்ளான் வரைந்து இருந்திருக்கின்றார்கள்.
சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
கருங்கல் வேலை செய்யும் ஸ்தபதிக்கு ஆயுள் குறைவு. கருங்கல்லை செதுக்கும்போது வெளிப்படும் துகள்களை தொடர்ந்து சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கும். அப்படி இருக்கும் வெளிச் சூழ்நிலையில் ஒரு ஸ்தபதி உழைத்தால் கூட 45 அல்லது 50 ஆண்டுகளுக்குள் தான் உழைக்க முடியாது. அப்போது 600 வருடம் கட்டி இருக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் 20 ஸ்தபதிகளாவது தலைமுறை தலைமுறையாக மாறி இருக்க வேண்டும்.