இன்று பிறந்தது புதுயுகம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நமக்குள் உடல்பலம், மனபலம், ஆன்மபலம் என முப்பலமும் நமக்குள் இருக்கிறது. ஒரு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்கின்ற பலம் ஆன்ம பலம்.
நாம் நம் நாயன்மார்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால், ஒரு நாயன்மார் சிவனை யாராவது தவறாகப் பேசினால் அவரது நாக்கை வெட்டிவிடுவார். இன்று அவரை நாம் வழிபடுகிறோம். அது அவர் செய்த செயலுக்காக அல்ல. இலட்சியத்துக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்ததற்காக..
இதுவே ஆன்மபலமின்றி மனபலம் மட்டும் கொண்டிருப்பவர்கள் புதுக்கனவைக் கொண்டு மற்றவர்களை ஏமாற்றுவார்கள். ஏமாற்றுபவர்கள் மனபலம் மட்டும் உடையவர்கள். ஏமாறுபவர்கள் உடல்பலம் மட்டும் உடையவர்கள்.
ஆனால் ஆன்மபலத்திற்குள் நுழைவோமானால் நாம் ஏமாற்றவும் மாட்டோம். ஏமாற்றப் படவும் மாட்டோம். இந்த உடல்பலத்தையும், மனபலத்தையும் தாண்டி ஆன்மபலத்திற்குள் நுழைந்தால் இன்று பிறந்தது புதுயுகம்.
இத்துணை கருத்துக்களின் சாரமானது 'புதுயுகம் என்பது காலம் காலமாக நமக்கு அளிக்கப்பட்டு வரும் கனவு.' ஆன்மீகவாதிகளாகட்டும், தத்துவவாதிகளாகட்டும் சமூகத்தலைவர்களாகட்டும், அரசியல்வாதிகளாகட்டும் என்ன துறை வேண்டுமானாலும் ஆகட்டும் அதில் 'புதுயுகம் வரும்' என்னும் கனவு எல்லோருக்கும் அளிக்கப்பட்டு வரும்.
ஆன்மபலத்திற்குள்
நுழைவோமானால் நாம்
ஏமாற்றவும் மாட்டோம்.
ஏமாற்றப் படவும்
மாட்டோம். இந்த
உடல்பலத்தையும்,
மனபலத்தையும்
தாண்டி
ஆன்மபலத்திற்குள்
நுழைந்தால் இன்று
பிறந்தது புதுயுகம்.
புதுயுகம் நாம் காலம் காலமாக் காணும் கனவு. கனவு ஏன் நிஜமாகவில்லை என்றால், கனவை கொடுத்தவர்கள் தங்கள் வாழ்வை அல்ல மற்றவர்கள் வாழ்வைத் தியாகம் செய்ய வைத்தார்கள்.
சிலநேரத்தில் நுட்பம் தெரிந்தவர்களாக இருந்தாலும் சமுதாய எழுச்சியினைக் காரணமாகக் கொண்டு இந்தக் கனவை நனவாக்கி விடலாம் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள்.
இந்த இரண்டு காரணங்களால்தான் புதிய யுகம் என்கிற கனவு கனவாகவே இருந்தது. இப்போது அந்த இரண்டையும் தவிர்த்து விட்டால் நாம் செய்ய வேண்டியது சமுதாயப் புரட்சி அல்ல, தனி மனித எழுச்சி என்பது புரிய வரும்.
நாம் நமக்குள் ஒரு துளி ஞானத்தை வளர அனுமதித்தால், தன்னைத்தான் நோக்குதல், தன்னைத்தான் ஆராய்தல் என்ற செயலை நடக்க அனுமதித்தால் நமக்குச் மட்டுமல்லாது நம்மைச் சுற்றியும் பிறந்தது புதுயுகம்.
முதலிலேயே சொன்னது போல் புதுயுகக் கனவை நனவாக்குகின்ற நுட்பத்தைக் கொடுத்திருக்கின்றோம். இதனைக் கருத்தாக மாற்றி இருக்கின்றோம். இதனை நனவாக மாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு. கருத்தை நனவாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கனவு என்பது வெறும் பாவனை. அதனுடன் நுட்பம் இணையும் போது கருத்தாக மாறுகின்றது. கருத்தை நடைமுறைப் படுத்தும் போது அது நனவாக மாறுகின்றது.
நான் சொன்னதுபோல் 'இன்று பிறக்கட்டும் புதுயுகம்'. இந்தக் கருத்துக்களை நீங்கள் பின்பற்ற நினைத்தால் கடைபிடித்தால் கடைபிடிக்க முடிவெடுத்தால் இன்று பிறந்தது புதுயுகம்.

பரமஹம்ஸ நித்யானந்தர்
பரமஹம்ஸ நித்யானந்தர்
பரமஹம்ஸ நித்யானந்தர் இன்று நம் மத்தியில் வாழும் ஒப்பீற்ற ஞான குரு ஆவார். இந்த பூமியில் உள்ளுலக ஆனந்தத்திற்கான அறிவியலை மீண்டும் நிர்மாணிப்பதற்கான பணியைச் செய்து வருகின்றார்.
பரமஹம்ஸர் தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகராமாம் திருவண்ணாமலை நகரில் ஜனவரி 1, 1978 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து ஒரு நோக்குடன் செய்த தீவிர தவத்தினால் தன்னுள்ளே உள்ளுலக ஆனந்தத்தை அனுபவமாக அடைந்தார்.
பரமஹம்ஸரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதல் ஆன்மீக அனுபவம் (சத்தோரி) அனுபூதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் பரமஹம்ஸர் தன் சுய தன்மையை உணர்ந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் பரிவராஜகம் சென்றார்.
யோகா, தந்திரம் மற்றும் ஞானிகளினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார். இதனுடன் ஆழ்ந்த அறிவுமிகு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்.

நித்யானந்த தியானபீடம்

குணமளிக்கும் ஆலமரம், பிடதி ஆசிரமம்
நித்யானந்த தியானபீடம் தியானத்திற்காகவும், தனிமனித உருமாற்றத்திற்காகவும் பரமஹம்ஸ நித்யானந்தரால் துவங்கப்பட்ட உலகளாவிய இயக்கமாகும்.
காலத்தால் நிரூபிக்கப்பட்ட வேத உள்ளடங்களாலும், நவீன நுட்பங்களாலும் பரிசோதனைக்குட்பட்டு நிரூபணமான நித்யானந்தா மெடிடேஷன் அகடமி (NMA) உலகெங்கிலும் நிறுவப்பட்டு உள்ளுலக வளர்ச்சிக்கான ஆய்வுக்கூடமாக செயல்பட்டு வருகின்றது.

கொலம்பஸ் ஆசிரமம், ஓஹியோ, யுஎஸ்ஏ
உள்ளுலக வளர்ச்சிக்கு நேரடியான முக்கியத்துவம் அளித்து வரும் நித்யானந்த மெடிடேஷன் அகடமிகளின் தனிச்சிறப்பம்சமே உள்ளுலக வளர்ச்சியின் பக்க விளைவாக தன்னிச்சையாகவே வெளியுலக வளர்ச்சி நிகழத்துவாங்கிவிடும் என்பதாகும்.
இந்த இயக்கத்தின் துவக்கம் முதற்கொண்டு தியானத்திலிருந்து அறிவியல் வரை ஒருவர் தன்னைப் பற்றி பூர்வாங்கமாக ஆராய்ந்து அறிந்து தங்கு தடையின்றி முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதற்காக துவங்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

ஐதராபாத் ஆசிரமம், இந்தியா
நித்யானந்த மெடிடேஷன் அகடமி பொருள் சார்ந்த உலகமும், ஆன்மீக உலகமும் கரைந்து ஆனந்த மய மாக வாழும் முறையை வழங்கும் தளமான க்வாண்டம் ஸ்பிரிச்சுவாலிட்டி (Quantum Spirituality) வழங்கி வருகின்றது.
ஆனந்தமான வாழும் முறையால் வெளிப்படும் ஆழ்ந்த விழிப்புணர்வு ஒருவருக்குள் இருக்கும் புத்திபூர்வமான படைப்பாற்றலை அரும்பச்செய்யும்.
2003 ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 33 நாடுகளில் 1000 கிளைகளுக்கு மேல் வளர்ந்திருக்கும் நித்யானந்த தியானபீடம் தனிமனித உருமாற்றத்தால் மனிதகுல உருமாற்றத்திற்கு வித்திட்டு வருகின்றது.
நித்யானந்த மெடிடேஷன் அகடமியின் முதன் நிலை தியான முகாம் ஆனந்த ஸ்புரண தியான முகாம் (ASP) ஆகும் (லைப் பிளிஸ் ப்ரோகிராம் என்றொரு பெயரும் உண்டு). இது உடலின் சக்தி மையங்களைப்பற்றி அறிமுகப்படுத்தும் தியான முகாம் ஆகும்.

சகல சௌபாக்கியம் அருளும் ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் கோயில், பிடதி ஆசிரமம்
உணீரின் ஜீவாதாரமாக விளங்கும் இந்த முக்கியமான சக்தி மையங்களின் இயக்கத்தை பொறுத்துதான் ஒருவரின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனந்த ஸ்புரண தியான முகாம் நம் உணர்வுகளுக்கும், சக்தி மையங்களுக்கும் இடையே உள்ள நேரடியான தொடர்பை நமக்கு விளக்கும் முகாமாகும். உணர்வுகளை நமக்கு நற்பயனளிக்கும்படி கையாளும் முறையையும், மேம்பட்ட தெளிவையும், நேர்மறையான மன அமைப்பையும், சுமுகமான உறவுகளையும், வேலை மீது புதுப்பிக்கப்பட்ட உத்வேகமான அணுகுமுறையையும், இது அத்துனைக்கும் மேற்பட்ட ஆனந்தமான வாழ்க்கை முறையையும் பெறுவதற்கு ஆனந்த ஸ்புரண தியான முகாம் உறுதியளிக்கிறது.
NMA-வில் ஆனந்த ஸ்புரண தியான முகாம் என்பதுடன் பல்வேறு தியான முகாம்கள் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. நித்யா ஸ்பிரிச்சுவல் ஹீலிங் எனும் அமைப்பின் வழியாக தொடர்ந்து மக்களுக்கு உலகம் முழுவதும் இலவச தியான சிகிச்சையும்,

சேலம் ஆசிரமம், இந்தியா
இளைஞர்களுக்கு
இலவசக் கல்வியும்,
ஓவியம் மற்றும்
கலைகளுக்கு
ஊக்கமளித்தும்
வருகின்றது.
சத்சங்கங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்), மறைபொருள் நுட்பங்களை அறிவியல் ஆராய்ச்சியின் மூலமாக நிரூபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும் முகாம்களை நடத்தியும், நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.
மேலும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள், அன்னதானம், விளைநிலங்களில் வேத விவசாயத்தை நடைமுறைப்படுத்துதல், குழந்தைகளுக்கென தனியே தங்கும் வசதியுடன் கூடிய குருகுலக் கல்வி அமைப்பையும் உலகெங்கும் வழங்கி வருகின்றது.
உலகெங்கும் உள்ள
தன்னார்வத்
தொண்டர்கள் - நித்ய
தீா சேவ சேனையினர்
(NDSS) முழுமையாக
உத்வேகத்துடனும்,
உற்சாகத்துடனும்
இயக்கத்திற்கு
மிகப்பெருமளவில் பக்க
பலமாக இயங்கி
வருகின்றனர்.

லாஸ் ஏஞ்செஸ், USA
