KAILASA Library/ஜீவன் முக்தி/என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன், என்னைக் கவனிக்க கடவுளே வந்தார்.Sign in
ஜீவன் முக்தி

என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன், என்னைக் கவனிக்க கடவுளே வந்தார்.

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

I stopped taking care of myself. God himself came to take care of me.

இரண்டு நாட்கள் இப்படியே கழிந்தன.

இரண்டாவது நாள் மதியம், திடீரென்று ஒரு இளம் சாது என்னைத் தேடி வந்தார். அது அமைதியான, ஒதுக்குப்புறமான இடம்.

ஆனால் இப்போதுதான் அது நகரத்தின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது.

அக்காலத்தில், அதாவது பத்து வருடத்திற்கு முன்னால் மக்கள் வாழும் இடத்திலிருந்து வெகு தொலைவில் அது இருந்தது.

> ஒவ்வொரு
> நாளும் இரண்டு
> வேளையும்
> உணவும் மருந்து
> மாத்திரைகளும்
> கொண்டு வந்தார்.

அந்த இடத்திற்கு தவறிப்போய்க்கூட யாரும் வருவதற்கான வாய்ப்பேயில்லை.

ஆனால் அப்படி ஒரு அமைதியான, ஆள் ஆரவாரமே இல்லாத இடத்தில் அந்த இளம் துறவி திடீரென்று தோன்றினார்,

அவர் ஒரு தட்டில் கொஞ்சம் உணவும், டம்ளரில் தண்ணீரும் எடுத்து வந்திருந்தார்.

சில மருந்துகளும்கூட அவர் எடுத்து வந்திருந்தார்.

எனக்கு அதையெல்லாவற்றையும் தந்தார்.
நான் அதைச் சாப்பிட்டேன். என்னை மிகுந்த
அன்போடும், கரிசனத்தோடும் கவனித்துக்
கொண்டார்.

ஒவ்வொரு நாளும்
உடல் குணமடையும்
வரையில் தவறாமல்
தினமும் காலையிலலும்
மாலையிலும் மருந்தையும்
உணவையும் கொண்டு
வந்தார்.

மீண்டும் அன்று மாலையும் வந்தார்.

அதன் பிறகு சில நாட்கள், அவர் ஒவ்வொரு நாளும், இரண்டு வேளையும் உணவையும், மருந்து மாத்திரைகளையும் எனக்காகக் கொண்டு வந்தார்.

எனக்கு அந்த மருந்தின் பெயர்கூட இப்போது நினைவில் இல்லை.

அவர் என்னிடம், "ஏய்! இந்த உணவைச் சாப்பிடு, மருந்தை எடுத்துக் கொள்," என்பார்.

நானும் அவர் என்னென்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்தேன். அவ்வளவுதான்.

அந்த மருந்து, ஒரு மாத்திரை போன்றுதான் இருந்தது, அது அலோபதியா ஆயுர்வேதமா என்றுகூடத் தெரியவில்லை.

எப்படியோ, அவர் உணவையும் மருந்தையும்கொண்டு வந்தார்.

இரண்டாவது நாளே எனக்குக் கொஞ்சம் ஆவலாக இருந்தது, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று.

ஆனால் எனக்கோ அவ்வளவாக ஹிந்தி தெரியாது.

அவர் ஆங்கிலத்தில் பேசினார்.

எந்தக் காரணமும் இல்லாமல் என்மேல் அன்போடும், கருணையோடும் என்னைக் கவனித்துக்கொண்டார். உணவையும், மருந்தையும் தவறாமல்கொண்டு வந்து கொடுத்தார்.

ஆனால் அவரைப்பற்றிய ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது .

அவரிடம் ஒரு பேனா இருந்தது. அதில் விலை உயர்ந்த வைரக்கற்கள் பதிந்திருந்தன.

பளிச்சென்று தெரியுமாறு அந்தப் பேனா அவருடைய சட்டைப் பையில் இருந்தது.

எனக்கோ மிகவும் சந்தேகமாகவே இருந்தது. சாதாரணமாக சாதுக்கள் பேனா வைத்துக் கொள்வதில்லை.

காரணம், அவர்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்.

அப்படியே அவர்கள் வைத்திருந்தாலும் அவ்வளவு விலை உயர்ந்த பேனா வைத்திருக்க மாட்டார்கள். சாதாரண ஒரு பேனாவிற்காக அவ்வளவு பணத்தை செலவழிக்க மாட்டார்கள், சந்நியாசிகள்.

நான் அந்தப் பேனாவைப் பார்த்து சற்று ஆச்சரியமடைந்தாலும், பேனாவைப் பற்றி அவரிடம் எதையுமே கேட்கவில்லை.

ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் உடல் குணமடையும் வரையிலும், தவறாமல், தினமும் காலையிலும், மாலையிலும் மருந்தையும், உணவையும் அவர்கொண்டு வந்தார்.

அவர் சில மணிநேரம் என்னோடு செலவிடுவார். தைரியமாக எப்போதும் வாழவேண்டும் என்றும், வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எப்போதும் எதிர் கொள்ள வேண்டும் என்றும் சொல்வார்.

எப்படி, (உங்களுக்குப் பிடித்த) ஒரு உறவினர் உங்களோடு பேசுவாரோ, அது போலவே அவ்வளவு இனிமையாக என்னோடுப் பேசிக்கொண்டிருப்பார். அது ஒரு மிக இனிமையான உறவு முறையாக, ஒரு நல்ல உணர்வாக இருந்தது.

'உண்மையிலுமே எனக்குள் கிருஷ்ணர் சொல்வதைப் போல்தான் வாழ்கிறேனோ!' என்று நினைக்க ஆரம்பித்தேன். அதனால்தான் கவனிக்கப்படுகிறேனா?

திடீரென எங்கிருந்தோ, உணவும் மருந்து மாத்திரைகளும் வருகிறது என்றால்... நான் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறேன் என்றால்... என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஆச்சரியப்பட்டேன்!

அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது (திடீரென்று ஒரு தெளிவு பிறந்தது) “என்னையே கவனித்துக் கொண்டிருப்பதை நிறுத்தினேன். என்னைக் கவனிக்க கடவுளே அனுப்பிவைத்த சாதுதான் இவரோ,” என்று! ஆனால், சில சில நாட்களிலேயே நடந்தது அதுவல்ல. வந்தது ஒரு சாதாரண சாதுவல்ல... என்று புரிந்துகொண்டபோது பிரம்மித்துப் போனேன்.

சாதுவைப் பற்றி நான் என்ன நினைத்திருந்தேனோ, அது அப்படியே முற்றிலுமாக மாறுபட்டிருந்தது.

என்னையே
கவனித்துக்
கொண்டிருப்பதை
நிறுத்தினேன்.