மனிதனைத் தேடினேன்! கடவுளைக் கண்டேன்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
I searched for man. I found God!
ஒரு சில நாட்களுக்குப் பிறகு நான் குணமடைந்து விட்டேன். அதன்பிறகு சாதுவும் வருவதை நிறுத்திக் கொண்டார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு வழக்கம் போல் நடப்பதற்குக் கொஞ்சம் சக்தி வந்தது. பொதுவாக நான் ஒரே இடத்தில் உட்காரும் சுபாவம் கொண்டவன் அல்ல.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. ‘காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல்’ என்று.
சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டால் ஒரே இடத்தில் காலை வைத்துக்கொண்டு உட்கார முடியாது. அது போல நான் எப்போதும் சதா ஓடிக்கொண்டே இருக்கும் ரகம். கொஞ்சம் தெம்பு வந்ததும் நான் பரபரப்பாகிவிட்டேன்.
பிறகு மெது மெதுவாக நடக்கவும் துவங்கிவிட்டேன்.
எனக்கு உடல் முடியாதபோது ஒவ்வொரு நாளும் உணவை அளித்த, அந்த இளம் சாதுவைப் பார்க்க ஆவலாக இருந்தேன்.
அவர் உணவுகொண்டு வந்தபொழுது, அவர் எங்கிருந்து வருகிறார், அவர் யார், பெயர் என்ன, விலாசம் என்ன என்று எல்லா விவரத்தையும் கேட்டு வைத் திருந்தேன்.
அவர் அருகிலுள்ள ஒரு குறிப்பிட்ட ஆசிரமத்தின் பெயரைச் சொல்லி அங்கு வாழ்வதாகச் சொன்னார்.
அவரின் பெயரை பொறுத்தவரை, அவரை எல்லோரும் ‘சங்கர் மகராஜ்’ என்று அழைப்பதாகச் சொன்னார்.
அவர் எனக்கு எந்தத் தட்டில் உணவைக்கொண்டு வந்தாரோ, அதில் அவருடைய ஆசி ரமத்தின் பெயரும் பதிந்திருந்தது.
இந்தியாவில் இது ஒரு பழக்கமாக இருந்தது. பொதுவாக எல்லா ஆசிரமங்களிலும் அங்கு இருக்கும் தட்டிலும் டம்ளரிலும், அந்தந்த ஆசிரமத்தின் பெயரைப் பதித்து விடுவார்கள்.
நம் பிடதி ஆசிரமத்தில்கூட பார்த்தீர்களானால், எல்லாப் பாத்திரங்களிலும் தியான பீடத்தின் பெயர் பதிக்கப்பட்டிருக்கும்.
காரணம், ஒன்றும் பெரிது அல்ல. மக்கள் அதைக் திருடிக்கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான். ஒரு பாதுகாப்பிற்காகத்தான் பதிக்கப்பட்டிருக்கிறது.
> குணமடைந்த பிறகு “சரி
> அவரைப்பார்த்து நன்றி
> சொல்லலாம்,” என்று
> நினைத்தேன் அதனால்
> மெதுவாக அந்த
> ஆசிரமத்திற்குச் சென்றேன்.
அதனால், அந்தத் தட்டிலும் பெயர் பதித்திருந்திருந்தார்கள்.
குணமடைந்த பிறகு, ‘சரி, அவரைப் பார்த்து நன்றி சொல்லலாம்’ என்று நினைத்தேன். அதனால் மெதுவாக, அவரைத் தேடி அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன். அந்த இடத்தைக் கண்டுபிடித்துச் சென்ற பொழுது அங்கு ஒரு வயதான சாது மட்டுமே உட்கார்ந்திருந்தார். அங்கு அந்த முதியவர் ருத்ராட்சத்தை உருட்டியபடியே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.
அது கங்கைக் கரையில் உள்ள ஒரு சிறுகோயில். அங்கே, இந்த வயதான சாதுமட்டுமே இருந்தார். நான் அவரிடம் சென்று, "சங்கர் மகாராஜைப் பார்க்க முடியுமா?" என்று கேட்டேன்.
அவர் என்னைப் பார்த்து, “சங்கர் மகராஜ் என்ற பெயரில் இங்கு யாரும் இல்லையே,” என்றார்.
நான் சொன்னேன், “இல்லை, இல்லை. சில நாட்களுக்கு முன், ஒரு இளம் சாது இந்த ஆசிரமத்திலிருந்துதான் வந்திருந்தார். அவர் எனக்கு உணவளித்தார். அந்தச் சாமியை நான் இப்பொழுது பார்க்க வேண்டும் என்றேன்.”
> என்னுடைய
> வாழ்க்கையில் நான்
> எதையெல்லாம்
> மதிக்கிறேன் என்று
> நினைக்கிறீர்களோ
> அதன்மேல் சத்தியமாகச்
> சொல்லுகிறேன்.
“இல்லை இங்கு அதுபோல் யாரும் இல்லை. வேறு ஏதாவது ஆசிரமமாக இருக்கும், சென்று பாருங்கள்,” என்றார்.
நான் அவரை வற்புறுத்தினேன். “இல்லை, இல்லை. அவர் இந்த ஆசிரமத்தின் விலாச த்தைதான் எனக்குக் கொடுத்தார். அவர் எனக்கு உணவுகூட அளித்தார். அந்தத் தட்டிலும் இந்த ஆசிரமத்தின் பெயர்தான் பதிந்திருந்தது,”என்றேன்.
பிறகு அந்த வயதான சாது, மெதுவாகத் தலையை உயர்த்தி, “உங்களைப் பார்க்க வந்தவருக்கு என்ன வயதிருக்கும்?” என்று கேட்டார். அவருடைய பிரார்த் தனையைக் கலைத்ததன் காரணத்தால் மிகவும் எரிச்சலோடு வேறு இருந்தார்.
அவர் தன் பிரார்த்தனையைக் கண்களை மூடிக்கூட செய்யவில்லை.
அவர் அப்படியே இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். வயதானவர் என்பதால் அவருக்கு ஆங்கிலமும் தெரியவில்லை. இது இன்னொரு பிரச்சினை.
நான் அவரிடம், ஒரு முப்பது அல்லது முப்பத்து ஐந்து வயதுடையவராக இருக்கலாம் என்றேன்.
அவர் இதைக் கேட்டதும், மேலும் எரிச்சலடைந்தார். “இந்த மொத்த ஆசிரமத்தில் நான்தான் ஒரே சாது, என் வயதைப் பார்த்தால் தெரியவில்லையா,” என்று சப்தமிட்டார்.
இருந்தாலும் நான் விடவில்லை, “இல்லை, இல்லை. அவர் தன் பெயரை சங்கர் மகராஜ் என்று சொன்னார். அவர் இங்கிருந்துதான் வந்தார்,” என்றேன்.
“எங்களிடம் ஒரே ஒரு சங்கர் மகராஜ்தான் இருக்கிறார். அவர் இங்குதான் உள்ளார். அங்கு இருப்பவர்தான் அவர்,” என்று கையை நீட்டி ஆட்டிக் காண்பித்து கோபத்தில் ச த்தமிட்டார்.
“நீ அவரைப் பார்க்க வேண்டுமென்றால் பார்த்துவிட்டுப் போ! என்னை விட்டுவிடு!’ என்றார்.
அவர் எதைக் குறிப்பிட்டுக் காண்பித்தாரோ, அதை நோக்கி திரும்பிப் பார்த்தேன். அது ஒரு சிறிய கோவிலாக இருந்தது. உள்ளே ஒரு வெள்ளைப் பளிங்குக் கல்லிலான ஈஸ்வரனுடைய மூர்த்தி இருந்தது. அந்த மூர்த்திக்குப் பக்கத்தில் சென்றேன்.
அந்த விக்கிரகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அதிசயமாக இருந்தது. அந்த ஈஸ்வர விக்கிரகத்தில், சங்கர் மஹராஜ் அணிந்திருந்த அதே பேனாவைப் பார்த்தேன்!
அந்த விக்கிரகத்தைச் சுற்றி ஒரு சால்வை இருந்தது. அதில் அந்த வைரப் பேனா சொருகப்பட்டிருந்தது.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!.
மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்த ஈஸ்வர விக்கிரகத்திலும் அதே பேனா இருக்கிறது, அதுவும் வைரப்பேனா! நான் பார்த்த அதே பேனா, அதிர்ச்சியாகவும்,

தனிமனித அமைதி மூலமாக உலக
அமைதி படைப்போம் என்று
சொல்வதோடு நில்லாமல் உலகம்
முழுவதும் 12 லட்சம் பேர் நித்ய
தியானத்தை தீக்ஷையாகப் பெற்று உலக
அமைதிக்காகத் தினந்தோறும் தியானம்
செய்துவருகிறார்கள்.
அதுமட்டும் அல்லாமல் நாம்
வாழுமிடத்தை சக்தியூட்டக்கூடிய
கூட்டுத் தியானத்தை தியானபீட
பக்தர்கள் உலக நன்மைக்காக
உலக அமைதிக்காகச்
சேவையாகச் செய்து
வருகிறார்கள்.
ஆச்சரியமாகவும் இருந்தது.
ஆச்சர்யம் மீளாமல் விக்கிரகத்தின் பக்கத்திலே சென்றேன். எந்தத் தட்டில் எனக்கு அவர் உணவு கொடுத்தாரோ அதே தட்டும் அங்கே இருப்பதைப் பார்த்தேன். இன்னும் ஆச்சரியமடைந்தேன்.
அந்தத் தட்டுதான் என்று நான் சரியாகப் பார்த்து ஊர்ஜிதபடுத்திக் கொண்டேன். நிச்சயம் அதே பேனாதான். அதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.
சங்கர் மகாராஜ் வைத்துக் கொண்டிருந்த அதே தட்டு, அதே பேனாதான் அது.
அவர் எனக்காக எடுத்துக்கொண்டு வந்த அதே உணவு, அதே பிரசாதம், அதே நைவேத்தியம் அந்தத் தட்டிலிருந்தது. அந்த ஆஸ்ரமத்தின் பெயரும் அதிலிருந்தது.
நீங்கள் இதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ! அது பற்றி எனக்குத் தெரியாது. அது உங்களைப் பொறுத்தது. ஆனால், இதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். அது அதே தட்டுதான்! அதே பாத்திரங்கள்தான்! அதே பேனாதான்!